பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சடித்தல் - அசோகர்

5


விடும். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் தகட்டை நீரில் கழுவுவார்கள். ஒளி படாத இடங்களில் உள்ள ரசாயனப் பொருள்கள் மட்டும் நீரில் கரைந்து நீங்கி விடும்; எழுத்துக்களும், படங்களும் உள்ள இடங்கள் அப்படியே இருக்கும். அவற்றின் மீது தண்ணீர் ஒட்டாது; ஆனால் மை ஒட்டும். இத்தகட்டை அச்சு எந்திரத்தின் உருளைகளில் பொருத்தி அதன்மீது செய்வார்கள். படும்படிச் எழுத்துக்களும், படங்களும் உள்ள இடங் கள் தவிர மற்ற இடங்களில் தண்ணீர் ஒட் டிக்கொள்ளும். பிறகு அத்தகட்டின் மீது மை பூசப்படும். மையில் எண்ணெய் கலந்திருப்பதால் தண்ணீர் ஒட்டாத பகுதி களின்மேல் மட்டும் மை ஒட்டும். மை படிந்த பகுதிகள் நேரடியாகக் காகிதத்தின்மீது படிந்து அச்சாவதில்லை. ஆனால், அவை வேறொரு ரப்பர் திரையின் மீது அச்சாகின்றன. ரப்பர் திரையில் அச் சான எழுத்துக்கள் மீண்டும் காகிதத்தின் மீது அச்சாகின்றன. ஈரம் வண்ணப் படங்களை அச்சிடுதல் சிறிது கடினமானது. மேலே உள்ள வண்ணத்துப் பூச்சியின் படம் நான்கு முறை போட்டோ எடுக்கப்பட்டு நான்கு முறை அச்சடிக்கப் பட்டுள்ளது. பார்க்க: நிற அச்சடித்தல். ஒளிச்செதுக்கு முறை (Photogravure) : இதற்கும் போட்டோக்கலைதான் பயன் படுகிறது. சாதாரண முறையில் அச்சாக வேண்டிய பகுதிகள் மேடாக இருக்கு மல்லவா? ஆனால் இம் முறையிலோ அச் வேண்டிய பகுதிகள் பள்ளமாக இருக்கும். எழுத்துக்களைக்கொண்ட பரப் பின்மீது மையைத் தடவுவார்கள். அங்கு மட்டும் மை நிரம்பும். மற்ற சாக களில் மை ஒட்டாது. பின்னர் தேவை யான பிரதிகளை அச்சடிப்பார்கள். 5 அசோகர்: இந்திய நாட்டின் தேசீ யக் கொடி நடுவில் இருக்கும் சக்கரத் திற்கு 'அசோகச் சக்கரம்' என்று பெயர். அசோகர் நாட்டிய தூணின் போதிகை யிலிருந்து இந்த உருவம் எடுக்கப்பட்டுள் ளது. அசோகர் மிகச் சிறந்த அரசர். இவருடைய தந்தை பிந்துசாரர். மௌரிய சாம்ராச்சியத்தைப் பாடலிபுத்திரத்தி லிருந்து ஆண்டு வந்தார். அசோகர் சுமார் முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் இராச்சியம் தெற்கே தமிழ்நாடு நீங்கலாக இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அசோகருடைய இளமைப்பருவம் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. இவர் அரசராகி எட்டு ஆண்டுகள் கழிந்த பின்பு கலிங்க நாட்டின்மேல் போர் தொடுத்தார். அதுவே இவருடைய இறுதிப் போர். போர்தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. இவருக்கு மட்டுமல்ல, கலிங்கப் இந்திய நாட்டின் வரலாற்றுக்கே அது மிகப் பெரியதொரு திருப்பம். அந்தப் போரில் இவரே வென்றார். ஆனாலும் போரினால் விளைந்த துன்பங்களைக் கண்டு இவர் மனம் கலங்கினார். உயிரிழந்தும், உறுப்பிழந்தும் கிடந்த ஆயிரம் ஆயிரம் படைவீரர்களைக் கண்டு கண்ணீர் சிந்தி னார். இனிப் போரே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தார். 'தர்மவெற்றி' என்னும் அன்பு வழியை மேற்கொண்டார். இவர், "உயிர்களைக் கொல்ல வேண்டாம், சிங்கப் போதிகை