பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா அதையே தம் எடுத்துக் காட்டினார். குறிக்கோளாகக் கொண்டு தம் அரசியல் வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகள் கண்டார். இந்திய மக்களுள் 84 சதவிகிதத்தினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஏனையவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக் கியம், பௌத்தம், சமணம் ஆகிய மதங் களைச் சார்ந்தவர்கள். விஞ்ஞானம்: சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வான ஆராய்ச்சி ஓர் உயர்நிலையை எட்டியிருந் தது. அக்காலத்து மக்களுக்குக் கோள்களைப் பற்றியும். விண்மீன்களைப் பற்றியும் பல உண்மைகள் தெரிந்திருந்தன. சூரியன், சந்திரன், கோள்கள், ஆகியவற்றின் இயக் கங்களைப் பற்றி அவர்கள் நன்கு அறிந் திருந்தனர். ஆண்டுகள், மாதங்கள், நாள் கள் இவற்றின் அளவுகள் சூரியன்-சந்திரன் இயக்கங்களைக் கொண்டே அமைக்கப்பட் டுள்ளன. கணிதத்தில் பூஜ்யத்தின் உதவி யையும், தசம் பின்னத்தையும் முதன் முதல் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் தாம். இப்பொழுது உலகெங்கும் எண் களைக் குறிக்கப் பயன்படும் 1, 2, 3,... என்ற எண்குறிகளை இந்தியர்தாம் முத லில் கண்டுபிடித்தார்கள். இந்த குறிகளை இந்தோ-அராபிய எண்குறிகள் என்றும், இந்து எண்குறிகள் என்றும் அழைக்கின்றனர். செடி எண் கொடிகளுக்கும் உயிர்த் துடிப்பு உண்டு என்று சர் ஜகதீஷ் சந்திர போஸ் (த.க.) பல சோதனைகளால் விளக்கிக் காட் டினார். ஒளியைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல செய்து புதிய உண்மைகளை சர் சீ. வீ. இராமன் வெளியிட்டார். இதற்காக அவருக்கு நோபெல் பரிசு (த.க.) அளிக்கப் பட்டது. அணு ஆராய்ச்சியிலும் இக்காலத் தில் பல இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள் ளனர். கேரளத்தில் தும்பா என்ற இடத் தில் ராக்கெட் நிலையம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அணுகுண்டுகள் செய்யும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்பதை உலகம் நன்கு அறியும். அஹிம்சை என் னும் காந்தியக் கொள்கையில் நம்பிக்கை யுடைய இந்தியா அணுகுண்டுகள் செய் யாமல் அணுசக்தியை ஆக்க வழிகளில் பயன்படுத்தி வருகிறது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் பல துறை களில் முன்னேறியுள்ளது. விஞ்ஞானத் தின் வளர்ச்சிக்காக நாட்டில் பல இடங் களில் தேசீய ஆராய்ச்சிசாலைகள் அமைக் கப்பட்டுள்ளன. கப்பல்கள், விமானங்கள் கட்டுந் தொழில்கள் நடைபெற்று வருகின் றன. ஆறுகள் பலவற்றின் குறுக்கே அணை கள் கட்டப்பட்டுப் பெரிய பெரிய நீர் மின் திட்டங்கள் பல உருவாகி வருகின்றன. 95 ஜூடி-டார்ட் ஏவுகணை விண்வெளி ஆராய்ச்சிக்காகக் கேரள மாநிலத்தில் தும்பா என்னுமிடத்தில் சோதனைத் தளம் ஒன்று 1963-ல் நிறுவப்பட்டது. இதுதான் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள முதல் ஏவுகணைத் தளமாகும். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவில் பல நாட்டு விஞ்ஞானிகள் இங்கு ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். விண்வெளியில் செலுத்தத் தயா ராக உள்ள ஏவுகணை ஒன்றைப் படத்தில் காண லாம். ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிப் பதற்கான திட்டம் ஒன்றும் ஆலோசனையில் இருந்து வருகிறது. உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காக நவீன முறைகள் கையாளப்படுகின்ற றன. நாடெங்கும் எந்திர சாதனங்களைக் கொண்டு பயிர்த்தொழில்கள் செய்கிறார் கள். உயர்ந்த வகை விதைகளையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி விளைச் சலைப் பெருக்க வழி வகுத்திருக்கிறார்கள். கல்வியின் பல துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடெங் கும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஏராளமாக ஏற்பட்டு வருகின்றன. மக்களுக்கு இப் போது மருத்துவ வசதியும் பெருகியுள்ளது. இந்தியாவில் முக்கிய ஊர்கள் எல்லாவற்றி லும் மருத்துவ மனைகள் உள்ளன. தொழில் துறையிலும் இந்தி சிறப்பாக முன்னேறியுள்ளது. இந்தியாவில் தயாரிக் கப்படும் பல பொருள்கள் வெளிநாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதியாகின்றன.