பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜம்மு- காச்மீரம் 5 காச்மீரத்தில் ஒரு காட்சி சிந்துநதியின் துணையாறுகள் சில இங்கு தோன்றுகின்றன. இவற்றுள் ஜீலம் முக்கிய மானது. இம்மாநிலத்தில் பெரிய ஏரிகள் பல உள்ளன. இவை மிக அழகானவை. உலார் (Wular) ஏரி இந்தியாவிலே மிகப் பெரிய நன்னீர் ஏரி. தால் (IDal), நாகின் (Nagin), மனஸ்பால் (Manasbal) ஆகியவை மற்ற முக்கிய ஏரிகள். படகுகளில் மரத்தால் சிறு வீடுகளைக் கட்டி ஏரிகளிலும் ஜீலம் ஆற்றிலும் மிதக்கவிட்டிருக்கிறார்கள். இப் படகுகளில் செல்வதும் மீன்பிடிப்பதும் நல்ல பொழுதுபோக்காகும். ஏரிகளைப் போன்றே இம்மாநிலத்திலுள்ள பூங்காக் களும் புகழ்பெற்றவை. அக்பர்,ஜகாங்கீர், ஷாஜகான் முதலிய மொகலாய மன்னர்கள் அமைத்த அழகிய பூங்காக்கள் பல இங்கு உள்ளன. இயற்கை நீரூற்றுகளும் இம் மாநிலத்தில் பல இருக்கின்றன. இவற்றுக்கு உடல்நோயைத் தீர்க்கும் அரிய மருத்துவத் தன்மை உண்டு. மிக உயரமாக வளரும் பர், பைன் மரங்களை இங்குக் காணலாம். பனிக்கரடி, சிறுத்தை, கஸ்தூரிமான், ஓநாய் முதலியன இங்குக் காணப்படும் முக்கியக் காட்டுவிலங்குகள். ஜீலம் ஆற்றுப் பள்ளத்தாக்கு செழிப் பானது. கோதுமை, பார்லி, சோளம் முதலியன முக்கிய விளைபொருள்கள். பழங்களும் காய்கறிகளும் இங்கு மிகுதி. காச்மீர ஆப்பிளும் மாதுளையும் சிறந்தவை. கோடைகாலத்தில் இம்மாநிலமெங்கும் அழகிய வண்ண மலர்கள் பெருமளவில் பூக்கும். அழகிய வாதுமை மலர்கள் பூத்துக் குலுங்கும் இளவேனிற் காலத்தில்தான் காச் மீரத்தில் கோந்த் என்னும் விழா கொண் டாடுகின்றனர்.ரோஜா, மல்லிகை முதலிய மலர்களிலிருந்து அத்தர் என்னும் வாசனைத் தைலம் தயாரிக்கின்றனர். மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஜம்மு பகுதியில் இந்துக்கள் அதிகம். இம் மாநிலத்தின் முக்கிய மொழி காச்மீரி. தலை நகர் ஸ்ரீநகர். இது ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய நகரம். ஜம்மு மற்றொரு முக்கிய நகரம். இது குளிர்காலத் தலைநகரமாகும். குல்மார்க் ஒரு சிறந்த மலைவாசத்தலம். இங்குள்ள பெரிய பள்ளத்தாக்கு பலவிதமான விளையாட்டு களுக்கு ஏற்றதாக இருக்கிறது. பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகளுக்கு இது புகழ்பெற்ற இடம். அமர்நாத், வைஷ்ணதேவி ஆகிய குகைக்கோயில்கள் இந்துக்களின் புனிதத் தலங்கள். இமய மலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது அமர்நாத் குகை. இதனுள் இயற்கையாக உருவாகிய பனிச் சிவலிங்கம் உள்ளது. இது வளர்பிறையின்போது வளர் வதும், தேய்பிறையின்போது தேய்வதுமாக உள்ளது. ஆண்டுதோறும் சிரவணப் பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து இச்சிவலிங்கத்தை வழி படுகின்றனர். ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள சங்கராச்சார்யா என்ற மலை உச்சியின் மீதும் ஒரு சிவன் கோயில் உள்ளது. இது கி.மு. 200-ல் அசோகருடைய புதல்வர் ஜலுக்கா என்பவரால் கட்டப்பட்டதாகும். இதன் சிற்பவேலைப்பாடு மனத்தைக் கவர் வதாக உள்ளது. ஹஜ்ரத்பால் என்பது முஸ்லிம்களின் புனிதத் தலம். இங்குள்ள மசூதியில் முகம்மது நபியின் (த.க.) ரோமம் ஒன்றைப் பாதுகாத்துப் போற்றிவரு கின்றனர்.