பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 ஜமேக்கா-ஜலதரங்கம் ஜமேக்கா பானி போர்ட் நன்டோனியோ கிங்ஸ்ட்டன் போட் ராயல் கரிபியன் கடல் பொராஸ்ட்ஃ பெட்ரோகேஸ் காச்மீரப் பெண் - உலகப் புகழ்பெற்ற காச்மீர சால்வையும் பலவகை அணிகலங்களையும் அணிந் திருக்கிறாள். கலைநுட்பம் கொண்ட கைவினைப் பொருள்களைச் செய்வதில் காச்மீர மக்கள் தேர்ந்தவர்கள். இங்கு தயாரிக்கப்படும் அழகான கம்மியப் பொருள்களும் சித்திர வேலைப்பாடு கொண்ட மரச்சாமான்களும் எவருடைய உள்ளத்தையும் கவரக்கூடி யவை. சித்திரத் தையல் வேலை இம் மாநிலத்தின் தொன்மையான கலைகளில் ஒன்று. காச்மீரக் கம்பளம், சால்வை, பட்டு ஆடைகள் முதலியவற்றுக்கு உலகெங்கும் பெரும் மதிப்பு உண்டு. காஷ்யபா என்னும் முனிவரால் உரு வாக்கப்பட்டதால் காச்மீரம் எனப் பெயர் பெற்றது என்பர். தொன்றுதொட்டு இந்தி யாவின் ஒரு பகுதியாக விளங்கிவந்த காச்மீரம், வெள்ளையர் ஆட்சியின்போது ஒரு சுதேச சமஸ்தானமாக இருந்துவந்தது. இந்தியா 1947-ல் விடுதலை அடைந்த போது, காச்மீரம் ஒரு தனிச் சுதந்தர நாடாக இருக்க விரும்பியது. ஆனால் சில நாட்களிலேயே பாக்கிஸ்தானியர் இதன்மீது படையெடுத்தனர். இந்திய உதவியைச் காச்மீர மன்னர் நாடினார். உடனே இந்தியா அப்படையெடுப்பை முறி யடித்தது.இந்திய மாநிலங்களுள் ஒன்றாக காச்மீரம் இணைந்தது. எனினும் ஒரு பகுதி இன்னும் பாக்கிஸ்தான் வசமே உள்ளது. ஜமேக்கா (Jamaica): 1494-ல் கொலம் பஸ் இதைக் கண்டு பிடித்தார். மேற்கிந்தியத் ஜமேக்கா தீவுகளுள் ஒன்று. இது ஒரு சுதந்தர நாடு. டர்க்ஸ், கேக்கஸ், கேமான், மொரான்ட், பேட்ரோகேஸ் ஆகிய சிறு தீவுக் கூட்டங் களும் இதனுள் அடங்கும். மலைகளும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் இத்தீவில் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றாறு கள் ஓடுகின்றன. கரும்பு, காப்பி, வாழை, கோக்கோ, திராட்சை, ஆரஞ்சு, நெல், தென்னை முதலியன பயிரிடப்படுகின்றன. பாக்சைட்டு தாது ஏராளமாக இத் தீவிலுள்ளது. கிங்ஸ்ட்டன் இத்தீவின் தலை நகரும் முக்கிய துறைமுகப்பட்டினமும் ஆகும். இங்கு நீக்கிரோக்கள், வெள்ளை யர், மேற்கிந்தியர், சீனர், இந்தியர் முதலி யோர் வாழ்கின்றனர். பரப்பு 10,991 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 22 லட்சம் (1981). சர்க்கரை, வாழைப்பழம், காப்பி, தேங்காய், ரம் என்னும் சாராய வகை முதலியன ஏற்றுமதியாகின்றன. ஜலதரங்கம்: ஒரு கிண்ணத்தில் சிறி தளவு நீரைவிட்டு, அதன் விளிம்பில் ஒரு கரண்டியால் தட்டுங்கள். 'டங்' என்று இனிய ஒலி பிறக்கிறதல்லவா? இனி, அந்தக் கிண்ணத்தில் மேலும் சிறிது நீரை ஊற்றிய பின் தட்டுங்கள். மீண்டும் ஒலி எழும்பும்; ஆனால் ஒலியில் சிறிது வேறு பாடு இருக் கும். முதல் ஒலியின் சுரமும், இரண்டாவது ஒலியின் சுரமும் வெவ்வேறாக இருக்கும். ஒரு கிண்ணத்தைத் தட்டினால் எழும்பும் ஒலி, அதிலிருக்கும் நீரின் அளவைப் பொறுத்து வேறுபடும். இவ்வாறு பலவேறு சுரங்களை ஒலிக்கும் வகையில் நீர் உள்ள பல கிண்ணங்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே இசைக்கலாம்! அதுதான் ஜலதரங்கம். ஜலதரங்கத்திற்கு வாத்தியம்' என்னும் பெயரும் உண்டு. அறு பத்து நான்கு கலைகளில் ஜலதரங்கம் வாசிப்பதும் ஒன்றாகும். உதக