பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜலதரங்கம் ஜனநாயகம் வயலின், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் எழும் ஒலி மிக இனிமையாக இருக்கும். பண்டைக்காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத் தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வேவ்வேறு சுரங்களை உண்டாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட இராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதி யைக் கூட்டுவார்கள். அதில் வராத சுரங் களுக்கும் கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரைவட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப் பார்கள். வாசிக்கும் இராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்தி லிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வ தால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடிகின்றது. கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண் டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத் தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது. ஜனநாயகம் (Democracy) : இந்தியாவில் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை நாடாளு மன்றத்திற்கும், மாநிலச் சட்டமன்றங் களுக்கும் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட இம் மன்றங்கள் சட்டங்களை இயற்றுகின்றன; அதே பிரதி நிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச் சரவைகளுக்கு மக்களின் சார்பில் ஆட்சியை நடத்தும் அதிகாரங்களை இம் மன்றங்கள் அளிக்கின்றன. இவ்விதம் ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களின் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுத்து அவர்களின்மூலம் தங்களைத் தாங்களே ஆளும் முறைக்கு ஜன நாயகம் என்று பெயர். ஜனநாயகத்தை மக் களாட்சி என்றும் வழங்குவர். பண்டைக்காலத்தில் பல இடங்களில் மக்களாட்சி நிலவி வந்திருக்கின்றது.தமிழ் நாட்டில் பழங்காலத்தில் ஊராட்சிமுறை, மக்களாட்சியின் அடிப்படையில் அமைந் திருந்தது. திருமணமான ஆண்கள் அனை வரும் ஊராட்சியில் நேர்முகமாகப் பங்கு கொண்டனர். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் நடத்திய நகர ஆட்சி யிலும் (City State) மக்களாட்சியே நடந்தது வந்தது. இன்று பெரும்பாலான நாடுகள் விரிந்த நிலப் பரப்பும், மிகுந்த மக்கள் தொகையும் கொண்டிருக்கின்றன. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் நேர்முகமாக ஆட்சியை நடத்துவது என்பது இயலாத காரியம். ஆகவே, வயதுவந்த ஆண்களும் பெண்களும் வாக்குரிமை (த.க.) மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அவர் கள் மூலம் ஆட்சியில் பங்குகொள்ளும் முறைதான் இப்பொழுது பெரும்பாலும் காணப்படுகிறது. இதற்குப் 'பிரதிநிதித்துவ ஜனநாயகம்' என்று பெயர். ஆட்சி மன்றங் களுக்கு நாட்டுமக்கள் வாக்குரிமை மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையே 'தேர்தல்' (த.க.) ஆகும். மக்களாட்சி நடைபெறும் பெரும் பாலான நாடுகள் குடியரசுகளாக (த.க.) உள்ளன. குடியரசில் அரசரோ அரசியோ ஆட்சித் தலைவராக இருப்பதில்லை. மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராக இருக் கிறார். அமெரிக்காவில் குடியரசுத் தலை வரை மக்கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக் கிறார்கள். இந்தியாவில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது 'மறைமுகத் தேர்தல்’ எனப்படும். பிரிட்டனில் ஜனநாயக ஆட்சி முறையே நிலவுகிறது. எனினும் அங்கு அரசர் அல்லது அரசியே ஆட்சித் தலைவராக இருக்கிறார். இவ் 7