பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 ஜாகிர் ஹுசேன் வாறு, ஒரு நாட்டில் ஆட்சித்தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமலேயே அந்நாட்டின் அரசு, மக்களாட்சி முறையில் நடந்து வரலாம். ஜனநாயகத்தில் தனி மனிதரின் உரிமை களைக் காப்பாற்றுவது அரசின் கடமை யாகும். இந்த உரிமைகள் 'அடிப்படை உரிமைகள்" (த.க.) எனப்படும். அடிப்படை உரிமைகள் எவை எவை என்பதும், அவற்றை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதும் ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பிலும் விவரிக்கப்பட்டிருக் கும். மக்களாட்சியில் குறைகள் சில உள்ளன. நாட்டில் போர், பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க மக்களாட்சியில் உடனடியாக முடிவெடுக்க முடிவதில்லை. இச்சமயங் களில், மக்களின் பிரதிநிதிகள் கூடி முடி வெடுப் பதைவிட, ஒருவரே முடிவெடுப்பது எளிதாக இருக்கும். நெருக்கடி ஏற்படும் போது மக்களாட்சி அரசுகள் பல வீழ்ச்சி யடைந்திருக்கின்றன. இத்தகைய குறைகள் இருப்பினும், ஏனைய ஆட்சிகளைவிட மக்களாட்சியே பலவிதங்களில் மேலான தாக இருக்கிறது. பார்க்க: அரசாங்கம்; குடி யரசு; தேர்தல். ஜாகிர் ஹுசேன் (1897-1969): இந்தி யாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகிர் ஹுசேன். ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பிப்ரவரி 8-ல் ஜாகிர் ஹுசேன் பிறந்தார். உத்தரப் பிரதேசத்தி லுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பின் ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைக்கழகத்திலும் பயின் 'டாக்டர்' பட்டம் பெற்றார். று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது, காந்தியடி களின் தீவிர ஆதரவாளரானார். காந்தி யடிகள் வகுத்த ஆதராக்கல்வி முறை இவரை மிகவும் கவர்ந்தது. கல்வித்துறை யில் தாம் பணி யாற்றியபோது, ஆதாரக் கல்வி முறையை நாடெங்கும் பரப்ப அரும் பாடுபட்டார். டெல்லியிலுள்ள ஜமியா மில்லியா என்னும் பல்கலைக்கழகத்தின் துணைவேந் தராக 1926 முதல் 1948 வரை ஜாகிர் ஹுசேன் பணியாற்றினார். பின்னர் ஜாகிர் ஹுசேன் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணை வேந்தராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந் தார். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் பணி புரிந்தார். 1962 மே மாதத்தில் இந்தி யாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு பெற்றார். 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஜாகிர் ஹுசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த இவர் 1969 மே 3-ல் காலமானார். ஜாகிர் ஹுசேன் கல்வித்துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார். இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து, உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்விச் சீர்திருத்த ஆலோ சனைக் குழுக்களில் உறுப்பினராயிருந்து தம் ஆலோசனைகளைக் கூறினார். பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் பலவற்று டன் தொடர்புகொண்டிருந்தார். யுனெஸ்கோ நிருவாக வாரியத்தின் உறுப் பினராகப் பணியாற்றினார். ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழி களில் ஜாகிர் ஹுசேன் சிறந்த பேச்சாள ராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.