பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜான்சிராணி-ஜிப்ரால்ட்டர் இம்மூன்று மொழிகளிலும் ஆதராக்கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். பிளேட்டோ வின் 'குடியரசு' என்ற நூலை உருதுமொழி யில் மொழிபெயர்த்திருக்கிறார். கல்வித்துறையில் இவர் ஆற்றிய அருந் தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு 1954-ல் 'பத்ம விபூஷண்' என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்தது. மீண்டும் இந்திய அரசின் மிக உயர்ந்த விரு தாகிய 'பாரத ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கைரோ ஆகிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு 'இலக்கிய மேதை' (D.Litt.) வழங்கிச் சிறப்பித்தன. 1963-ல் பட்டம் ஜான்சி ராணி (1835-1858): இந்தியா 1947-ல் சுதந்தரம் அடைந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்துப் பல போர்கள் நடந்தன. 1857- ல் நடந்த போர் இவற்றுள் முக்கியமானது. இதனைச் சிப்பாய்க் கலகம் என்று கூறுவர். ஆனால் உண்மையில் இது ஒரு சுதந்தரப் போராட்டமாகும். இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் ஜான்சி ராணி. கணவர் ஜான்சி ராணி 1835-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் இலட்சுமிபாய். ஜான்சி என்பது இவருடைய ஆண்ட சுதேச சமஸ்தானத்தின் பெயர். இன்று இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடங்கியுள்ளது. ஜான்சி சமஸ்தானத்தின் மன்னர் கங்கா தரராவ் 1853-ல் இறந்தபோது அவருக்கு வாரிசு இல்லை. எனவே இலட்சுமிபாய் தம் கணவர் பெயரில் நாட்டை ஆளத்தொடங் கினார். அப்போது இவருக்கு வயது 18 தான்! இலட்சுமிபாய் பின்னர் தம் கணவரு டைய வாரிசாக ஒரு மகவைத் தத்து எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த ஏற் பாட்டை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஒரு மன்னர் வாரிசு இல்லாமல் இறந்தால் அந்த சமஸ்தானம் ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ்க் 'கொண்டுவரப்படும் என்பது அப்போதைய சட்டம். அச்சட்டத் தின்படி ஜான்சியைத் தம் ஆட்சியின்கீழ் ஆங்கிலேயர் கொண்டுவந்தனர். அதனால் ஆங்கிலேயர்மீது இலட்சுமிபாய் வெறுப்புக் கொண்டார். இதுபோலவே தம் சமஸ் தானங்களை இழந்த வேறு சில மன்னர் களும் அவர்களுடைய குடிமக்களும் ஆங்கிலேயர் மீது கோபம் கொண்டிருந் 9 தனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த வீரர்களுக்கும் ஆங்கிலேயர்மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வாறு பலரும் ஆங்கிலேயரை வெறுத்து, அவர் களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென்று உறுதிகொண்டிருந்தனர். இத்தகைய பகைமையின் விளைவாக 1857- ல் ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் பல இடங்களில் போர் மூண்டது. இலட்சுமி பாயும் இப்போரில் தீவிரமாக ஈடுபட லானார். ஜான்சியில் ஆங்கிலேயரின் படை முறியடிக்கப்பட்டது. இலட்சுமிபாய் அரசி யாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இவர் அதிக நாட்கள் ஆள வில்லை. ஆங்கிலேயர் புதிய படையை அனுப்பினர். ஜான்சி நாட்டு வீரர்கள் தீரத்துடன் போரிட்டபோதிலும் ஜான்சி விரைவில் ஆங்கிலேயர் வசமாகியது. இலட் சுமிபாய் உடனே அருகிலிருந்த குவாலியர் நாட்டைக் கைப்பற்றி அங்கிருந்து ஆங்கிலே யரை எதிர்த்தார். ஆண்போல உடை உடுத்துக் கொண்டு தாமே முன்னின்று போரை நடத்திவந்தார். அப்போது ஆங்கிலேயரின் துப்பாக்கிக் குண்டு ஒன்று இலட்சுமிபாய்மீது பாய்ந்தது. போர்க் களத்திலேயே இவர் இறந்தார். ஜிப்ரால்ட்டர் (Gibraltar) : ஸ்பெயினின் தெற்கேயுள்ளது. இது ஒரு பிரிட்டிஷ் குடி யேற்றப் பகுதி; பரப்பு 5.8 ச.கி.மீ.; மக்கள் தொகை 30,000 (1984). இது ஒரு தீப கற்பம். ஜிப்ரால்ட்டர் பாறை என்றும் வழங்கும். பட்டணம் மலையடிவாரத்தில் கடலோரத்திலுள்ளது. 1400 அடி உயர முள்ள மலைசூழ்ந்த சிறந்த அரணமைந்தது. பிரிட்டிஷ் அரசின் முக்கிய கடற்படைத் தளம். மலையினுள் சுரங்கங்களிலும் குகை களிலும் பாதுகாப்புச் சாதனங்கள், நீர்த் தொட்டி, உணவு சேமிப்புகள், மருத்துவ விடுதி முதலியன உள்ளன. கி.பி. 711-ல் மொரக்கோ ஜிப்ரால்ட்டர்