பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 ஜீலம் ஆறு மூர் இனத்து 'டாரிக்' (Tariq) என்பவர் இதை வென்றார். ஸ்பானியர்கள் 1462லும் பிரிட்டிஷார் 1704லும் இதைக் கைப்பற்றி னர். அதிலிருந்து பிரிட்டிஷ் அரசின்கீழ் இருந்துவருகிறது. ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி ஸ்பெயினுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடை யில் மத்தியதரைக் கடலையும் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் இணைக்கிறது. இதன் வழியாக உலகின் காற்பகுதி கப்பல்கள் செல்கின்றன. ஜீலம் ஆறு பஞ்சாபில் பாயும் 5 ஆறு களில் மிகவும் மேற்கிலுள்ளது. இதன் நீளம் சுமார் 720 கி.மீ. காச்மீரின் மேற்கே தொடங்கி ஸ்ரீநகர் உலார் (Wular) ஏரி வழியாகச் செல்கிறது. இது பஞ்சாபின் குறுக்கே ஓடிச் சீனாப் ஆறுடன் கலக்கிறது. இதன் தென்கரையில்தான் போரஸுக்கும் அலெக்சாந்தருக்கும் இடையே புகழ்வாய்ந்த கடும்போர் நடந்தது. ஜெர்மனி ஓரத்தில் சுவாஸிலாந்துக்கும் நதிக்கும் இடையில் இருக்கிறது. டுகேலா ஜெர்மனி ஐரோப்பாக் கண்டத்திலுள் ள ஒரு நாடு ஜெர்மனி. இதன் கிழக்கில் போலந்து, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளும், தெற்கில் ஆஸ்திரியா. சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், மேற்கில் பிரான்ஸ், லக்செம்பர்கு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளும், வடக்கில் டென்மார்க் நாட்டுடன் வடகடல், பால்ட்டிக் கடல் ஆகியனவும் எல்லைகளாக உள்ளன. ஜெர்மனி இரண்டாம் உலக யுத்தத்திற்குமுன் ஒரே நாடாக இருந்தது. இப்போது மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என இருநாடுகளாகப் பிரிந் துள்ளது. மேற்கு ஜெர்மனியின் பரப்பு 2,48;651 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 6,17,00,000 (1981). தலைநகரம் பான் கிழக்கு ஜெர்மனியின் பரப்பு 1,08,200 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 1,67,00,000 (1981).இங்குள்ள பெர்லின் நகரத்தின் கிழக்குப் பகுதி இதன் தலைநகரம் ஆகும். மேற்கு பெர்லின், மேற்கு ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. பார்க்க: பெர்லின். (Bonn). பாரம்பரிய குணங்களைக் கட்டுப் படுத்தும் காரணியலகு ஜீன் எனப்படும். இது உயிரணுக்களின் உட்கருவில் (Cell Nucleus) உள்ள குரோமோசோம்கள் என்ற நிறக்கோல்களிலே மணி கோத்தது போல அமைந்திருக்கும். ஓர் உயிர் (செடி அல்லது பிராணி) பிறந்தவுடனே தாய் தந்தையரை ஒத்திருக்காது. ஆனால் வளர வளர தாய் அல்லது தந்தை அல்லது இரு வருடைய பாரம்பரியத்தையும் ஒத்து வரு வதைக் காணலாம். இவ்வொப்புமைக் குணத்தை நிலைத்திருக்கச் செய்வது ஜீன் ஆகும். ஜுலூக்கள் (Zules): இவர்கள் நெட் டால் என்ற ஆப்பிரிக்கப் பகுதியில் கி.பி. 1400 ஆண்டு முதல் 1800 ஆண்டு வரை வாழ்ந்துவந்த நிகோனி (Ngoni) பழங்குடிகளுள் ஒருவகையினர் ஆவர். 1840 ஆம் ஆண்டில் ஜுலூ நாட்டின் பெரும் பகுதி போயர் ஆதிக்கத்தின்கீழ் வந்து சேர்ந்தது. ஆனால் 1887 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் அவர்களுடைய அரசன் சொல்லைக் கேளாமல் இந்நாட்டைத் தங் களுடையதாக்கிக் கொண்டனர். இப்போது ஜுலூ மக்கள் ஓர் அரசனைத் தேர்ந்தெடுக் கின்றனர். பிறகு தென் ஆப்பிரிக்க அரசாங் கத்தார் அரசனை அங்கீகரிக்கிறார்கள். இவர்களில் பலர் இப்போது கிறிஸ்தவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் சுரங்கங் களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து பிழைக்கிறார்கள். ஜுலூலாந்து 1897-ல் நெட்டாலுடன் இணைக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்காவில் கிழக்குக் கடற்கரை வட் கட நெலோன் பிரான்ஸ் கோதுமை பார்லி ரை எல்மெ விழாக்டெயாகு ஜெர்மனி . பாடிை கடல் செக் ஜெர்மனி உருளைக்கிழங்கு ரசாயனப் பொருள்கள் நிலக்கரி . பீட் கிழங்கு = இரும்பு

  • எந்திரங்கள்