பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜெர்மனி ஹாம்பர்க், மூனிக், கொலோன், பிராங்க்பர்ட், ஹானோவர் ஆகியவை மேற்கு ஜெர்மனியிலுள்ள பிற முக்கிய நகரங்கள், லைப்சிக், டிரேஸ்டென், கார்ல் மார்க்ஸ்-ஸ்டாட், மாக்டெபர்கு ஆகியவை கிழக்கு ஜெர்மனியிலுள்ள பிற முக்கிய நகரங்கள். ஜெர்மனியின் வடபகுதி தாழ்ந்த சம வெளி. இது மிகவும் செழிப்பானது. கோதுமை, ரை, பார்லி முதலிய தானியங் களும், உருளைக்கிழங்கு, சர்க்கரை தயாரிக் கப் பயன்படும் பீட் கிழங்கு, திராட்சை முதலியனவும் விளைகின்றன. தென் பகுதி யில் ஆல்ப்ஸ் (த.க.) மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள கறுப்புக் காடு (Black Forest), பொஹீமியன் காடு ஆகியவை இயற்கை எழில் மிகுந்தவை. இங்கு உடல் நலத்திற்குப் பெரிதும் உகந்த இதமான வெப்பநிலை நிலவுகிறது. ரைன், எம்ஸ், வேசர், எல்பெ, ஓடர், டான்யூப் முதலியன இந்நாட்டில் பாயும் ஆறுகள். இவை யாவும் பல கால்வாய்களால் இணைக்கப் பட்டுள்ளன. எனவே இவை கப்பல் போக்குவரத்துக்கு மிக உதவியாக இருக் கின்றன. இந்நாட்டில் தாது நீர் ஊற்றுகள் பல உள்ளன. இவை உடல்நலத்திற்கு மிக ஏற்றவை. இந்த ஊற்றுகளில் குளிப்பதற் ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரின் ஒரு தோற்றம் 11 காக வெளிநாட்டினர் பலர் இங்கு வரு கின்றனர். இரும்பு, நிலக்கரி, சோடாக் காரம் முதலியன இந்நாட்டில் மிகுதி. எனவே இங்குத் தொழிற்சாலைகள் பெருகி யுள்ளன. இரும்பு, எஃகு ஆலைகளும் எந் திரங்கள், கார், மின்சாரக் கருவிகள், கண் ணாடி காமிராக்கள், இரசாயனப் பொருள்கள், பீங்கான் சாமான்கள் முதலி யன தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பல உள்ளன. அச்சுக்கலையில் ஜெர்மனி சிறந்து விளங்குகிறது. அச்சு எழுத்துகளை யும் அச்சிடும் எந்திரத்தையும் முதன் முதலில் கண்டுபிடித்தவர் கூட்டன்பர்க் என்ற ஜெர்மானியரே. கிழக்கு ஜெர்மனியில் பழுப்பு நிலக்கரி அதிகம். இது மின்சக்தி உற்பத்திக்குப் பெரிதும் உதவுகிறது. கிழக்கு ஜெர்மனியில் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி நடை பெறுவதால் தொழில்கள் யாவும் அரசாங்க நிருவாகத்தில் உள்ளன. வேளாண்மையும் கூட்டுறவுப்பண்ணை முறையில் நடைபெறு கிறது. ஜெர்மானியர் கலை ஆர்வம் மிக்கவர் கள். இசை, நடனம் ஆகியவற்றில் மிகுந்த விருப்பம் உள்ளவர்கள். ஜெர்மனி பல சிறந்த இசை மேதைகளை உருவாக்கிய நாடு. பேத்தோவன் (த.க.). பாக், ஹாண் டெல், வாக்னர் முதலியோர் இவர்களுள் முக்கியமானவர்கள். ஜெர்மன் மொழி இலக்கிய வளமுள்ளது. சென்ற நூற்றாண் டில் வாழ்ந்த கோதே (Goethe) ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய கவிதைகளும் நாடகங்களும் உலகப்புகழ்பெற்றவை. 1914-ல் முதல் உலக யுத்தத்தைக் தோற்றுவித்தது ஜெர்மனியே. எனினும் இது தோற்றது.பிறகு இது ஒரு குடியரசா கியது. ஹிட்லர் (த.க.) ஆட்சியைக் கைப் பற்றி 1939-ல் இரண்டாம் உலக யுத்தத் தைத் தொடங்கினார். இதிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. ஜெர்மனியின் கிழக்குப் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது.மேற்குப் பகுதியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நேச நாடுகள் தம் வசப்படுத்திக் கொண்டன. எனினும் 1955-ல் இரு பகுதி களுக்குமே சுதந்தரம் வழங்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது ஜெர்மனியின் தொழிற்சாலைகள் யாவும் அழிந்துவிட்டன. எனினும் ஜெர்மானியர் தம் சலியாத உழைப்பாலும் திறமையாலும் உலகமே வியப்படையும் விதத்தில் இப் போது முன்னேறியிருக்கிறார்கள்.