பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 ஜென்னர்-ஜெனீவா ஜென்னர் (Edward Jenner 1747-1823): மனிதரைப் பீடிக்கும் கொடிய தொற்று நோய்களில் ஒன்று அம்மை (த.க.). இது வராமல் தடுக்கும் முறையைக் கண்டுபிடித் தவர் எட்வர்டு ஜென்னர். இங்கிலாந்தில் கிளஸ்டர்ஷயரிலுள்ள ஒரு சிற்றூரில் ஜென்னர் பிறந்தார். இவரு டைய தந்தை ஒரு பாதிரியார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஜென்னர் மருத்துவக் கல்வி பயின்று பட்டம் பெற்றார். அக் காலத்தில் லண்டனில் தலைசிறந்த மருத்து வராக விளங்கிய ஜான் ஹன்டர் என்பவரி டம் ஜென்னர் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அவரைத் தம் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாகவும், ஆருயிர் நண்பராகவும் கொண்டார். ஹன்டரின் அறிவுரைப்படி ஜென்னர் 1773-ல் தம் சொந்த ஊருக்கே திரும்பி அங்கு கிராம மக்களுக்குத் தொண்டு செய்துவந்தார். அக்காலத்தில் உலகமெங்கும் அம்மை நோயினால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள்.இந்நோய் கண்டு பிழைத்தவர் களும் அம்மைத் தழும்புகளினால் தம் அழகை இழந்தார்கள். இந்நோய் பரவுவதற் கான காரணம் யாருக்கும் தெரியாமலே இருந்தது.ஜென்னர் வாழ்ந்த ஊரில், மாடு வளர்க்கும் மக்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மாடுகளின் மூல மாக மாட்டம்மை (Cow Pox) என்ற நோய் அடிக்கடி வந்தது. ஆனால், அந்நோய் ஜென்னர் எளிதில் குணமாகிவிடும்; உடலில் வடுக் களை உண்டாக்கவுமில்லை. இந்த நோய் ஒருமுறை கண்டவர்களுக்குப் பெரியம்மை வராது என அவ்வூர் மக்கள் நம்பி வந்தனர். ஜென்னர் நன்கு ஆராய்ந்து இது உண்மை தான் எனக் கண்டார். 'இதனை 1796 மே 14-ல் ஒரு சோதனை மூலம் நிருபித்தார். மாட்டம்மை கண்டிருந்த ஒரு பால்காரப் பெண்ணின் அம்மைப் புண்ணிலிருந்து பாலை எடுத்தார். நல்ல உடல் நிலையுட னிருந்த எட்டு வயதுச் சிறுவனுக்கு அந்தப் பாலைக் கொண்டு அம்மை குத்தினார். இரண்டு மாதங்கள் கழித்து, அவனுக்குப் பெரியம்மைப் பாலை எடுத்து அம்மை குத் தினார். ஆனால் அவனுக்குப் பெரியம்மை உண்டாகவில்லை. இதிலிருந்து, பெரி யம்மையும் மாட்டம்மையும் நெருங்கிய உறவுடையவை; ஒருமுறை மாட்டம்மை கண்டவர்களின் உடலுக்கு மீண்டும் எவ் வகையான அம்மை நோயும் பிடிக்காதபடி 'எதிர்ப்புச் சக்தி' உண்டாகிவிடுகிறது; எனவேதான் மாட்டம்மை கண்டவர் களுக்குப் பெரியம்மை வார்ப்பதில்லை என ஜென்னர் விளக்கினார். ஜென்னரின் இந்த முறையை மற்ற மருத் துவர்களும் பின்பற்றினார்கள். விரைவில் உலகெங்கும் இம்முறை பரவியது. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இவருக்கு விருதும் மானிய மும் வழங்கியது. ரஷ்ய அரசரும், பிரெஞ்சு மன்னர் நெப்போலியனும் (த.க.) இவரைச் சிறப்பித்துப் பரிசளித்தனர். இவர் பெரும் புகழ் பெற்றார். எனினும், இவர் தம் முடைய சிற்றூரிலேயே இருந்துகொண்டு கிராம மக்களுக்குத் தொண்டு செய்து வந்தார். மருத்துவத் துறையில் மட்டுமின்றி இசை யிலும் ஜென்னர் ஈடுபாடு உடையவர். இவர் நன்றாகப் பாடுவார்; கவிதை இயற்று வார். பறவைகளைப் பற்றியும் இவர் ஆராய்ந்து வந்தார். அமைதியான வாழ்க்கை நடத்திவந்த இவர் 1823-ல் கால மானார். ஜெனீவா: சுவிட்ஸர்லாந்து நாட்டி லுள்ள புகழ்பெற்ற நகரம் ஜெனீவா. இது ஜெனீவா என்ற ஏரியின் கரை மீது உள்ளது. இந்த ஏரியில் கலக்கும் ரோன் ஆறு, பிறகு ஜெனீவா நகர் வழியே சென்று பிரான்ஸ் நாட்டில் பாய்கிறது. ஜெனீவா ஏரி பெரியது. இதன் கரையில் பல நகரங் கள் உள்ளன. இந்நகரங்களுக்கும் ஜெனீவா நகரத்திற்குமிடையே கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.