பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜைராஸ்கோப் ஜெனீவா மிகத் தொன்மையான நகரம். இங்குள்ள தேவாலயமும் பல்கலைக் கழகமும் பழமையானவை. ஆனால் 1850 லிருந்து இந்நகரைத் திருத்திப் புதுமுறையில் அமைத்து வந்துள்ளனர். இந்நகரின் மக்கள் தொகை சுமார் இரண்டு லட்சம். கடிகாரங் கள், நகைகள், இசைக்கருவிகள், மின்சார சாதனங்கள், நுட்பமான விஞ்ஞானக் கருவி கள், ரசாயனப் பொருள்கள் முதலியன இங்கு தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சாக்கலேட் புகழ்பெற்றது. சுகவாசத்துக்குச் சிறந்த இடம் ஜெனீவா, ஆல்ப்ஸ் மலையின் அழகிய இயற்கை காட்சிகளுக்கிடையே இது அமைந் துள்ளது. ஆல்ப்ஸ் மலையின் அழகிய சிகரங்கள் பலவற்றை இங்கிருந்து காண லாம். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கான உல்லாசப் பயணிகள் உலகெங்கு மிருந்து இங்கு வருகின்றனர். அழகிய அருங் கலைக்கூடமும் நாடக அரங்குகளும் பொருட்காட்சிசாலைகளும் இங்கு உள்ளன. அழகான பல பூங்காக்களும் உள்ளன. உலக மாநாடுகள் பல இந்நகரில் நடை பெற்றுள்ளன. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் 1863-ல் இங்குதான் தொடங்கப் பட்டது. முதல் உலக யுத்தத்திற்குப் பின் அமைக்கப்பட்ட சர்வதேச சங்கம் (த.க.) இங்குதான் இருந்தது. பிறகு பன்னாட்டு தொழிலாளர் சங்கமும் இங்கு அமைக்கப் பட்டது. இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் (த.க.) ஓர் உறுப்பாகிய உலக சுகாதார நிறு வனமும் (World Health Organisation) மற்றும் சில அமைப்புகளும் இங்கு உள்ளன. தொடக்க காலத்தில் பர்கண்டி அரச வமிசத்தினருக்குத் தலைநகராக இருந்த இந் நகரம் பிறகு ஒரு தனிச் சுதந்திர நகரமாக விளங்கியது. 1798-ல் இந்நகரை பிரான்ஸ் கைப்பற்றியது. ஆனால், நெப்போலி யனுக்குப் பிறகு 1815-ல் இது சுவிட்ஸர் லாந்தின் ஒரு பகுதியாகியது. பிரெஞ்சுப் புரட்சி (த.க.) தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரும், பிரபல எழுத் தாளருமான ரூசோ (Rousseau) இந்நகரில் பிறந்தவரே. அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களின் பெயரையே இந்நகரில் பல தெருக்களுக்கு வைத்துள்ளனர். ஜைராஸ்கோப் (Gyroscope): எப்படித் திருப்பினாலும் அச்சின் திசை மாறாமல் சுழலக்கூடிய ஒரு கனமான சக்கரத்தைக் கொண்ட எந்திர அமைப்புதான் ஜைராஸ் 13 கோப். இது விமானம், கப்பல் மற்றும் பல எந்திர சாதனங்களில் பயன் படுகிறது. படத்தைப் பாருங்கள். கனமான சக்கரம் (X) ஒன்று, AB என்ற அச்சில் சுழலக்கூடிய வகையில் ஒரு வளையத்தில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த வளையம், CD என்ற அச்சில் திரும்பக்கூடிய வகையில் பொருத் தப்பட்டுள்ளது. இந்த வளையம், EF என்ற செங்குத்தான அச்சில் திரும்பக்கூடிய வகை யிலும் அமைந்துள்ளது. இந்த வளையங் களுக்கு ஜிம்பல்கள் (Gimbals) என்று பெயர். இந்த அமைப்பு எல்லாப் பக்கமும் திரும்பக்கூடிய் வகையில் உள்ளது. ஒரு நீளமான நூலைச் சக்கரத்துடன் இணைந்த தண்டில் (Y) சுற்றி, பின்னர் வேக மாக இழுத்துவிட்டால் சக்கரம் வேகமாகச் சுழலும். இப்போது சக்கரத்தின் அச்சு ஒரு. குறிப்பிட்ட திசையை நோக்கியே இருக்கும். ஜைராஸ்கோப்பை எப்படித் திருப்பினா லும், தலைகீழாகக் கவிழ்த்தாலுங்கூட, சக்கரம் சுழன்றுகொண்டிருக்கும் வரை அதன் திசை மாறவே மாறாது. ஜைரோ-திசைகாட்டி (Gyro-Compass) என்பது இதன் அடிப்படையில் அமைந்த ஒரு சாதனம். ஜைரோ திசைகாட்டியில் காந்தமே இல்லாததால் இது காந்த மண்ட லத்தாலோ, உலோகங்களாலோ பாதிக்கப் படுவதில்லை. இது திசைமாற்றங்களை விரைவாகவும் சரியாகவும் காட்டக்கூடியது. C ஜைராஸ்கோப் E B D