பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 ஜைனமதம் - ஜோன் மேலும், இது வடக்குத் திசையைச் சரியாகக் காட்டும். இதிலுள்ள சக்கரம் ஒரு மின்சார மோட்டாரினால் சுழல்கிறது. விமானங்களிலுள்ள சில கருவிகள் ஜைராஸ்கோப்பின் தத்துவத்தைக் கொண் டவை. இவை தாமாகவே விமானத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகின்றன. கடலினுள் தானாகவே இயங்கிச் சென்று, எதிரிகளின் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய டார்ப்பிடோ (Torpeco) என்னும் சாதனம், ஏவுப்படைக்கலம் (த.க.) போன் றவை ஒழுங்காக இலக்கை நோக்கிச் செல் வதற்கும் ஜைராஸ்கோப்புகள் படுத்தப்படுகின்றன். பயன் எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் போது பூமியினடியில் இறக்கப்படும் நீள மான தண்டு, கோணாமல் ஒரே நேராக இறங்குவதற்கும், வானத்தில் வெகு உயரம் வேகமாகப் பறந்து சென்றுகொண்டிருக் கும் ஓர் இலக்கை நோக்கிச் சுடும்போது குறி தவறாமல் பீரங்கியின் திசையைத் துல்லியமாகத் திருப்புவதற்கும் ஜைராஸ் கோப் உதவுகிறது. எளிய முறையில் அமைந்த ஜைராஸ் கோப்புகள் விளையாட்டுக் கருவிகளாக வும் இன்று தயாரிக்கப்படுகின்றன. ஜைன மதம் : இந்தியாவில் வழங்கிவரும் மிகப் பழைய மதங்களுள் ஒன்று ஜைன மதம். நல்லொழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்து வலியுறுத்துவது இந்த மதம். ரிஷபதேவர் முதல் மகாவீரர் (த.க.) வரை 24 தீர்த்தங்கரர்கள் (த.க.) ஜைன மதத்தை இந்தியாவெங்கும் பரப்பினார்கள். இம் மதத்தைப் பின்பற்றுவோர் ஜைனர் அல்லது சமணர் எனப்படுவர். இந்த மதத்தைச் சமண மதம் என்றும் வழங்குவர். பார்க்க: சமண மதம். ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) : இந்தியாவி லுள்ள முக்கியமான நீர் வீழ்ச்சிகளுள் ஒன்று ஜோக் நீர்வீழ்ச்சி. இதற்கு ஜெர் சாப்பா நீர்வீழ்ச்சி என்றும் பெயர். இது கருநாடக மாநிலத்தில் பெங்களூருக்கு மேற்கில் சுமார் 370 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது. மேற்கு மலைத்தொடர்ச்சியில் அடர்ந்த காடுகளிடையே உற்பத்தியாகும் ஷராவதி ஆறு. 250 மீட்டர் அகலமுள்ள பாறைப்படு கையின்மீது மெதுவாக ஒடி ஜோக் என்ற இடத்தில் நான்காகப் பிரிந்து 250 மீட்டர் ஆழத்தில் அருவியாக விழுகின்றது. இந்த நான்கு அருவிகளுக்கும் ராஜா, ரோரர் ஜோக் நீர்வீழ்ச்சி (Roarer), ராக்கெட், ராணி என்று பெயர். இந்த அருவிகள் மிக உயரத்திலிருந்து விழு வதால் நீர்த்திவலைகள் சிதறி, வெண்ணிற மேகம்போலத் தோன்றுகின்றன. நீர்த் திவலைகளில் சூரிய ஒளி படும்போது வான வில்லின் வடிவில் அதன் வண்ணங்கள் தோன்றுகின்றன. வானவில்கள் தொங்கு வதுபோலத் தோன்றும் இக்காட்சி நீர் வீழ்ச்சியின் இயற்கை எழிலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பகலில் மட்டுமல்லாமல், இரவில் சந்திரனின் நிலவொளியிலும் இந் நீர்வீழ்ச்சி மிக அழகாக இருக்கும். இதன் காரணமாகவே உலகிலுள்ள மிக அழகிய நீர்வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் நீர்விழும் வேகத் தைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய் கின்றனர். இங்குள்ள மின்னாக்க நிலையத் திற்கு 'மகாத்மா காந்தி மின்னாக்க நிலையம்' என்று பெயர். இது கருநாடக மாநிலத்தின் முக்கியமானதொரு மின் நிலையமாகும். இது நீர்வீழ்ச்சியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருப்ப தால் நீர்வீழ்ச்சியின் இயற்கை அழகு பாதிக் கப்படவில்லை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகைக் காண நாடெங்குமிருந்து பலர் இங்கு வருகின்றனர். ஜோன் (Joan of Arc, 1412-1431): பிரான்ஸ் நாட்டின் தேசீய வீராங்கனை ஆர்க் நகர ஜோன். 15 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து