பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிரான்ஸ் விடுதலை பெற்றதற்கு இவரது முயற்சியே காரணம். ஜோன் கிழக்கு பிரான்ஸில் மஸ் (Meuse) என்னும் ஆற்றின் கரையிலிருந்த டான்ரமி (Donremy) என்னும் கிராமத்தில் ஜோன் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு குடியான வர். ஜோன் பள்ளிக்குச் செல்லவில்லை; எனவே, இவருக்கு எழுதப் படிக்கத் தெரி யாது. வீட்டிலும் வயலிலும் தாய்தந்தை யருக்கு உதவிசெய்து வந்தார். வீட்டுவேலை களைச் செய்யும்போது, தம் தாய் சொல்லும் தெய்விகக் கதைகளை ஆர் வத்துடன் கேட்டு மிகுந்த தெய்வபக்தி உடையவரானார். பெரும்பாலும் தனி யாகப் பிரார்த்தனை செய்வதிலும், தெய் விகச் சிந்தனையிலும் காலங்கழித்து வந்தார். தம் 13 ஆம் வயதில் கேதரின், மார் கரெட், மைக்கேல் ஆகிய புனிதர்களின் தெய்விகக் குரல்கள் தம்முடைய செவி களில் அடிக்கடி ஒலித்ததாக இவர் கூறு வார். இவர் பிரெஞ்சு அரசவைக்குச் செல்லவேண்டும் என்றும், ஆங்கிலே யருக்கு எதிராக பிரெஞ்சுப்படைக்கு இவர் தலைமைதாங்க வேண்டும் என்றும் அக் குரல்கள் இவருக்குக் கட்டளையிட்டன. சிறுவயதினரான இவருக்கு அக்கட்டளை ஆர்க் நகர ஜோன் 15 களினால் முதலில் அச்சமும், ஐயமும், தயக் கமும் தோன்றின. எனினும் இறுதியில் அக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் இவர் முனைந்தார். அந்தச் சமயத்தில் பிரான்ஸுக்கும் பிரிட் டனுக்குமிடையே நூறாண்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஒன்றுபட்டு ஆங்கிலேயரை எதிர்க்காமல், தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டி ருந்தார்கள். பர்கண்டியர் என்னும் பிரெஞ்சுப் பிரபுக்கள் ஆங்கிலேயருக்குத் துணையாகவும் இருந்தனர். பிரெஞ்சு இளவரசன் டாபின் (Dauphin) முடிசூடத் துணிவின்றி, ஷினான் (Chinon) என்ற சிறு நகரில் ஒடுங்கி வாழ்ந்து வந்தான். இத் தகைய இருண்ட நேரத்தில், வீரக்குரல் எழுப்பி, பிரெஞ்சு மக்களுடைய தேசீய உணர்ச்சியைத் தூண்டி, அவர்களை வீறு கொண்டு எழச் செய்யும் பொறுப்பை 16 வயதே நிரம்பிய ஜோன் ஏற்றார். ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றும் பணியின் முதற்படியாக, 1428-ல் ஜோன், இளவரசனைக் காணப் புறப்பட்டார். ஆண் உடையணிந்து, பகைவர்களிடம் சிக் காமல் ஷினான் சேர்ந்தார். தம்மைக் கடவுள் அனுப்பியுள்ளதாக ஜோன் கூறி யதை அங்குள்ளவர்கள் முதலில் நம்ப வில்லை. முன்பின் பார்த்தறியாத இளவர சனை ஒரு கூட்டத்தின் மத்தியில், தம் தெய் விக உணர்வினால் ஜோன் அடையாளம் காட்டினார். "நீங்கள்தான் பிரான்ஸ் நாட்டு அரியணையின் சட்டபூர்வமான வாரிசு; உங்கள் உரிமையை நிலைநாட்டப் புறப்படுங்கள் என்று வீரவுரை மொழிந்தார். அதைக் கேட்ட இளவரசன் டாபின் புதிய ஊக்கமும், வீரமும், தன்மான உணர்வும் பெற்றான். அப்பொழுது ஆர்லியன்ஸ் நகரை ஆங்கிலேயர் முற்றுகையிட்டிருந்தனர். ஜோன் ஒரு படைக்குத் தலைமைதாங்கிச் சென்று ஆர்லியன்ஸை மீட்டார். இந்த வெற்றி பிரெஞ்சுப் படைகளின் வீர உணர்வை மேன்மேலும் தூண்டிவிட்டது. இதற்கிடையில், ஜோனின் ஆலோசனைப் படி இளவரசன் டாபினுக்கு ஏழாம் சார்லஸ் என்ற பெயருடன் பிரான்ஸின் அரசராக முடிசூட்டு விழா நடந்தது. முடிசூட்டு விழாவுடன் தம் பணி முடிந்து விட்டதாக ஜோன் கருதி, தம் ஊர் திரும்ப விரும்பினார். ஆனால் அரசன் அதற்கு இசையவில்லை. அரசனுடைய வற்புறுத் தலுக்கு இணங்கி, இவர் தொடர்ந்து போரை நடத்தலானார்.