பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

[நான்காவது பதிப்பு]

சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால், அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் மேம்பாடு காண வேண்டும்; வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்துடன் 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் சென்னையில் தோற்றுவிக்கப்பெற்றது. முதல் முயற்சியாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பது போன்று பெரிய கலைக்களஞ்சியங்களை உருவாக்கும் திட்டம் தமிழ்வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளாகக் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடப்பட்டு, தமிழறிஞர் திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட இப்பணி 1968-இல் நிறைவுபெற்றது. இந்திய மொழிகளில் பத்துத் தொகுதிகளைக் கொண்ட விரிவானதொரு கலைக்களஞ்சியம் தமிழ் மொழியில் தான் முதன் முதலில் வெளிவந்தது. இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்புயர்வற்ற ஆக்கபூர்வமான தமிழ்ப்பணியாகக் கருதலாம்.

பொதுக் கலைக் களஞ்சியத்தைத் தமிழில் முதல் பதிப்பாகத் திறம்பட வெளியிட்டுச் சிறந்த அனுபவம் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம், 1968-இல் குழந்தைகளுக்கெனத் தனியே அழகிய வண்ணப்படங்களுடனும், விளக்கப்படங்களுடனும் கூடிய சிறந்ததொரு குழந்தைகள் கலைக் களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளில் முதல் பதிப்பாக வெளியிடத் தொடங்கியது. இப்பணி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 1976-இல் நிறைவேறியது. குழந்தைகள் கலைக் களஞ்சியத்தின் முதற்பதிப்பிற்கும் திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்களே தலைமைப் பதிப்பாசிரியராக விளங்கினார். இந்திய மொழிகளில் இதுவும் ஒரு முன்னோடியான முயற்சி.

பொதுவாக இந்திய மொழிகளில் குழந்தைகள் இலக்கியம் மிகவும் குறைவு. அதுவும் அனைத்துத்துறைகளிலும் சிறுவர்கட்குப்பயன்படத்தக்க செய்திகளைக் கொண்ட கலைக்களஞ்சியம் போன்ற நூல்கள் இந்திய மொழிகட்குள் ஒப்பில்லாத உயர்ந்த முயற்சியாகும். தமிழ் வளர்ச்சிக் கழகம் பெருமுயற்சியின் மூலம் பல் துறைகளிலும் பல அறிஞர்களின் பங்களிப்பைப் பெற்று, வண்ணப் படங்களுடன், எழிலுடன், ஈர்ப்புடன் பத்துத் தொகுதிகளைக் கொண்டு வந்திருப்பது மனம் திறந்து பாராட்டப்பட வேண்டிய சாதனையாகும்.

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்புப்பணி 1981-இல் தொடங்கியது. இதற்கிடையில் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் முதுமை காரணமாக ஓய்வு பெற்றார். இந்தியாவின் மாநில, மைய அமைச்சராகப் பணியாற்றிய திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய மறுபதிப்பு பணி 10