பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குழந்தைகள் கலைக் களஞ்சியம்

வௌவால்: பகலெல்லாம் உறங்கி இரவு நேரத்தில் மரத்திற்கு மரம் பறந்து, இரை தேடும் ஒரு பிராணி வௌவால். வௌவால் பறக்கக் கூடியது என்றாலும், இது பறவை அல்ல. இது விலங்கு இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. குட்டி. போட்டுப் பாலூட்டும் விலங்குகளில் பறக்கக் கூடியது வௌவால் மட்டும்தான். வௌவாலின் மிக நீளமான முன்கால் விரல்களையும் பின்கால்களையும் மெல்லிய சவ்வுபோன்ற தோல் இணைத்துள்ளது. இத்தகைய விந்தையான இறக்கையால் வௌவால் பறக்கிறது.

வௌவால்கள் உலகெங்கும் காணப்பட்டாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் தான் இவை அதிகம். மரங்கள், குகைகள், பாழடைந்த மண்டபங்கள் முதலிய இடங்களில் இவை வாழ்கின்றன. வௌவாலின் நிறம் பொதுவாகக் கறுப்பு. சிவப்பு நிற வௌவால்களும் சில உண்டு. வெளவாலின் உடல் முழுதும் மென்மையான உரோமம் வளர்ந்திருக்கும். பின்கால் விரல்களில் வளைந்த நகம் உண்டு. கொக்கி போன்ற இந்த நகங்களால் கூரை, சுவர், மரக்கிளை முதலியவற்றைப் பற்றிக்கொண்டு வௌவால்கள் தலைகீழாகத் தொங்கியவாறே உறங்கும். வௌவாலின் கண்கள் மிகச் சிறியவை. ஆனால் காதுகள் பெரியன. வௌவால் தன் கண்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. இதன் குரல் ஒலியே இதற்குப்பெரிதும் உதவுகிறது. இது வௌவாலிடம் மட்டும் காணப்படும் ஒரு விந்தையாகும். வௌவாலின் குரல் மிக உச்ச தொனியில் உள்ளது. இதன் ஒலி ஒரு விநாடிக்கு 30,000 முதல் 70,000 அதிர்வுகளைக் கொண்ட தாக இருக்கும். விநாடிக்கு 20 முதல் 30,000 அதிர்வுகளைக் கொண்ட ஒலியைத் தான் நம்மால் கேட்கமுடியும். எனவேதான் வௌவால் கத்துவது நமக்குக் கேட்ப தில்லை. வௌவால் இவ்வாறு ஒலி எழுப் பும்போது, அந்த ஒலி எதிரில் பூச்சி, புழு அல்லது வேறு எந்தச் சிறிய பொருள் இருந் தாலும் அதன்மீது பட்டு எதிரொலி (த.க.) உண்டாகும். இந்த எதிரொலியைக் கொண்டு வௌவால் தன் எதிரில் உள்ள பொருள் எந்தத் திசையில் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும். எனவேதான், இருட்டிலுங்கூட வௌவால்