பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 பழந்தின்னி வௌவால் வௌவால்மீன் ஜப்பான் வௌவால் சுவரிலோ மரத்திலோ மோதிக் கொள்ளாமல் பறக்க முடிகிறது. பல வௌ வால்கள் கூட்டமாகப் பறக்கும் சமயத்தி லும் ஒன்றின் எதிரொலியைக் கேட்டு மற்றொன்று குழப்பம் அடைவதில்லை. ஒவ் வொன்றுக்கும் தன் ஒலியும் எதிரொலியும் நன்றாகத் தெரியும். இது வியப்பாக இருக் கிறதல்லவா? பொதுவாக வௌவால் இருவகைப் படும். ஒன்று, பழந்தின்னி வௌவால். இது உருவில் பெரியது. இதனைப் பெருவௌ வால் (Macro Chiroptera) என்பர். தமிழ் இலக்கியத்தில் இது வாவல் எனக் குறிப் பிடப்படுகிறது. மற்றொன்று துரிஞ்சில். இதனைச் சிறு வௌவால் (Micro Chiroptera) என்பர். இரவு நேரத்தில் இவை வீடுகளில் பறந்து திரிவதை நாம் பார்க்கலாம். பழந்தின்னி வௌவாலின் முகம் நரி போல இருப்பதால் இதனைப் 'பறக்கும் நரி' (Flying Fox) என்றும் சொல்வதுண்டு. இது பழங்களிலுள்ள சாற்றை மட்டும் உறிஞ்சி உண்ணும். இரத்தச் சோகைக்கு மருந்தாக இந்த வௌவாலை உட்கொள்வர். துரிஞ்சல்கள் சின்னஞ் சிறிய பூச்சியினங் களை உண்டு வாழ்கின்றன. மீன்பிடிக்கும் வௌவால் துரிஞ்சிலைக் காட்டிலும் பெரியதாக ஆனால் பழந்தின்னி வௌவாலைக் காட்டி லும் சிறியதாக உள்ள மற்றோர் இன வெள வாலும் உண்டு. துரிஞ்சில்களிடையே வண்ணத் துரிஞ்சில் என ஒருவகை உண்டு. இது மிக அழகாக இருக்கும். இதன் ஒவ் வோர் உறுப்பும் ஒவ்வொரு நிறம் கொண்டது. மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் வாழும் ஒருவகை வௌவால்கள், விலங்கு களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ் கின்றன. மீன்களைத் தின்னும் வௌவால் களும் உண்டு. வௌவால் மீன் (Pomfret): இது ஒரு கடல்மீன். தலை சிறியது. வாய் முன்முனை யில் இருக்கும். செதில்கள் சிறியவை; வழு வழுப்பாக இருக்கும். முதுகிலே ஒரு துடுப்பு நீளமாக இருக்கும். வால்துடுப்பு ஆழமான இரண்டு பிரிவுகளாக இருக்கும். இம்மீனின் பொதுவான நிறம் வெண்மையான சாம் பல் நிறம். வெளவால் மீனில் சிறிய முட்கள் இருப்பதில்லை. இது தமிழ் நாட்டின் கிழக் குக்கரையில் மார்ச்சு முதல் செப்டெம்பர் வரையில் அகப்படும். இது மிகவும் சுவை யுடையது. ஜப்பான்: ஆசியாக் கண்டத்தின் கிழக் கிலுள்ள நாடு ஜப்பான். இந்நாடு ஒரு தீவுக் கூட்டமாக உள்ளது. இதில் ஹாக் கைடோ. ஹான்ஷூ, கியூஷூ, ஷிக்கோக்கூ ஆகிய நான்கு பெரிய தீவு களும், ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளும் உள்ளன. மேற்கே ஜப்பான் கடலும் கிழக்கே பசிபிக் சமுத்திரமும் உள்ளன. மொத்தப் பரப்பு 3,72,113 சதுர கிலோ மீட்டர். மக்கள்தொகை சுமார் 11.76 கோடி (1981).தலைநகரம் டோக்கியோ. மான ஜப்பான் ஒரு மலைப்பாங்கான நாடு. பூஜியாமா இங்குள்ள மிக உயர சிகரம். இது தவிர, மேலும் சுமார் 30 எரி மலைகள் உள்ளன. எரிமலைகள் மிகுந் திருப்பதால் இந்நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது உண்டு. ஆயிரக்கணக் கான வெந்நீர் ஊற்றுகளும் இங்கு உள்ளன. ஏரிகள் பல உள்ளன. ஜப்பானிய ஆறுகள் மிகச் சிறியவை. போக்குவரத்துக்கு இவை பயன்படுவ தில்லை. எனினும் நீர்ப்பாசனத்திற்கும் மின் சக்தி உற்பத்திக்கும் இவை உதவியாக இருக் கின்றன. மலைநாடாக இருப்பதால் இங்கு சமவெளிகள் மிகக் குறைவு. இச்சமவெளி களில்தான் நாட்டு மக்கள் அனைவருக்கும்