பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜப்பான் 3 நெல் மீள் தேவிலை கப்பல் கட்டுதல் ரசாயனப் பொருள்கள் 6 மின்சார சாதனங்கள் மோட்டார் வண்டி எத்திரங்கள் வட கொரியா தென் கொரியா தீவு ெேகாரியர் ஜசைக்தி குயெ டோகாரா தீவுகள் சீனா ஹாக்கைடோ ஹகோடே ஜப்பான் கடல் சென்டர் ஹான்ஷு" பா டாக்கியோ பசிபிக் ஷீக்கோக்கூ கியூ பெருங்கடல் கி.சீனா கடல் தீவுகள் ஓகினாவா தீவுகள் மாதீவுகள் ஜப்பான் தேவைப்படும் உணவைப் பயிர்செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, இரசாயன உரங்களைப் பயன்படுத்தித் தீவிர சாகுபடி முறையைக் கையாளுகின்றனர். இந்நாட் டின் முக்கிய விளைபொருள் நெல். கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு முதலியனவும் பயிரிடப் படுகின்றன. மலைப் பகுதிகளில் தேயிலை விளைகிறது. கடலிலிருந்து பலவகையான மீன்கள் கிடைக்கின்றன. மீன்பிடித்தல் மிக முக்கியமான தொழில். முத்தும், பவளமும் ஜப்பானியக் கடலிலிருந்து கிடைக்கின்றன. ஜப்பானில் தாதுவளம் குறைவு. எனினும் சிறந்த தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் விளங்கு கிறது. இதற்கு ஜப்பானிய மக்களின் உழை ப்பும் முயற்சியுமே காரணம். தாதுப் பொருள்களை இறக்குமதி செய்து பலவித மான பொருள்களைத் தயாரிக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சி, காமிரா, பீங்கான், மோட்டார் கார் முதலியன தயாரிப்பதில் இந்நாடு முன்னணியிலிருக் கிறது. விசிறி,பொம்மை, விளையாட்டுக் கருவி, மட்பாண்டம் முதலிய கைவினைப் பொருள்களும் புகழ்பெற்றவை. தந்த வேலை, மரச்செதுக்குச் சிற்பம் முதலிய கலைகளில் ஜப்பானியர்கள் வல்லவர்கள். இரெயில்' எஞ்சின், மோட்டார் கார், சைக்கிள் மற்றும் எந்திரங்களும் இந்நாட் டின் ஏற்றுமதிகளில் முக்கியமானவை. ஜப்பானின் தலைநகரான டோக்கியோ சாலை, ரெயில் போக்குவரத்தும் இங்கு சிறப்பாக முன்னேறியிருக்கிறது. மிக வேக மாகச் செல்லும் இரெயில்கள் பல இங்கு உள்ளன. இவற்றைப்போல வேகமாக ஓடும் இரெயில்கள் வேறு எந்நாட்டிலும் இல்லை. கப்பல் கட்டுவதில் உலகிலேயே ஜப்பான் முதலிடம் வகிக்கிறது. ஜப்பானியர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான மக்கள் இன்று நகரங்களில்தான் வசிக்கின்றனர். ஜப்பானியர்கள் அழகு உணர்ச்சி உள்ளவர் கள். எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள். இவர்களுடைய இல்லம் எளிமையாகவும் தூய்மையாகவும், அழகாக வும் இருக்கும். எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் அதில் ஒரு சிறு மலர்த் தோட்டம் இருக்கும். பல பூக்களை விதம் விதமாக அடுக்கும் கலையில் ஜப்பானியர் கள் கைதேர்ந்தவர்கள். "இக்கேபானா" என அழைக்கப்படும் இக்கலை இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. ஜப்பானியர் தேநீர் வழங்கி விருந்தோம்பும் பண்பாடு புகழ்பெற்றது. இவ்வழக்கம் ஒரு தனிக் கலையாகவே போற்றி வளர்க்கப்படுகிறது.