பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜம்மு-காச்மீரம் . Gaz இம் காச்மீரம் 'இக்கேபானா' என்னும் பூக்களால் அலங்கரிக்கும் கலை உடை அணிவதில் இங்கு மேல்நாட்டு முறை இப்போது பரவி வந்தாலுங்கூட, 'கிமோனா” என்ற பண்டைக்கால ஆடை களை இவர்கள் கைவிடவில்லை. ஜப்பானிய மொழி, சீன மொழியைப் போல ஓவிய எழுத்து வடிவம் கொண்டது. இதைக் கற்பது எளிதல்ல. இந்தியாவி லிருந்து பரவிய பௌத்தமும், இயற் கையைத் தெய்வமாக வழிபடும் ஷின்டோ மதமும் இந்நாட்டின் முக்கிய சமயங்கள். ஜப்பான் ஒரு முடியாட்சி நாடு எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளு மன்றமே அதிகாரம் பெற்றது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளை ஜப்பான் வென்றது. ஆனால் ஹிரோஷிமா (த.க.). நாகசாகி என்ற இரு ஜப்பானிய நகரங்கள்மீது அமெரிக்கா அணுகுண்டு களை வீசி அழித்தவுடன் ஜப்பான் தோல் வியுற்றுச் சரணடைந்தது. எனினும் ஜப் பானியர்கள் தங்கள் உழைப்பாலும் விடா முயற்சியாலும் போரில் இழந்தவற்றை யெல்லாம் ஈடுசெய்து, இன்று தொழில் முன்னேற்றத்தில் மிகச் சிறந்து விளங்கு கின்றனர். ஜம்மு-காச்மீரம்: இந்தியாவிலுள்ள மாநிலங்களுள் ஒன்று ஜம்மு-காச்மீரம். பாக்கிஸ்தான் நங்கபல்வதம் 8126 907 சாசர் தங்கிரி -7672 உன ஜம்மு-காச்மீரம் நிலம் Berru அமர்நாத் குகை இந் ஐம் தன் தி யா சீனா una Gers திபேத் பஞ்சாபி இமாசலப்பிரதேசம் ஜம்மு-காச்மீரம் இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இதன் தெற்கில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் மேற்கில் பாக்கிஸ்தானும் வடக்கிலும் கிழக்கிலும் சீனாவும் உள்ளன. இம்மாநிலத்தின் பரப்பு 2,22,200 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 59,87,389 (1981). ஜம்மு-காச்மீரம் இயற்கை வளம் மிகுந்த மிக அழகிய மலைப்பிரதேசம். இமய மலையின் உயரமான சிகரங்கள் பல இங்கு உள்ளன. இவற்றுள் நங்கபர்வதம் (8,126 மீட்டர்) முக்கியமானது. நீர்வீழ்ச்சிகளும் ஏரிகளும் பூங்காக்களும் இங்கு ஏராளமாக உள்ளன. பனியாறுகள் பலவற்றை இங்கு குளிர்காலத்தில் பனிமழை காணலாம். பெய்யும். இத்தகைய சிறந்த இயற்கைக் காட்சிகளைக் கொண்ட இம் மாநிலம், ஈடு இணையற்ற உல்லாசப் பயண இடமாகவும் சுகவாசத் தலமாகவும், விளங்குகிறது. காச்மீரத்தில் சாலை, மரங்கள், வீடுகள் மீது பனி படிந்திருப்பதைக் காணலாம்.