பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பு -1 கிறது. பாறைகளைச் செதுக்கியும், மலை களைக் குடைந்தும் இவ்வூருக்கு ரெயில் பாதை அமைத்திருக்கிறார்கள். கோயம் புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப் பாளையம் என்னும் ஊரிலிருந்து இப் பாதை பிரிகிறது. வளைந்து வளைந்து ஏறிப் போகும் இப்பாதையில் சென்றால் எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். மலைகளும் பள்ளத் தாக்குகளும் மாறிமாறித் தோன்றும். பலவகை மரங்கள் அடர்ந்த காடுகள், தோட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்க லாம். இங்குள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றது. கீழிருந்து உதக மண்டலத்துக்குச் செல்ல நல்ல மோட்டார் சாலையும் உண்டு. அங்கிருந்து சாலை வழி யாக மைசூருக்குச் செல்லலாம். உதகமண்டலத்தில் அழகிய ஏரி ஒன்று உள்ளது. இதில் உல்லாசமாகப் படகுகள் ஓட்டிச் செல்லலாம். பசுமையான விளை யாட்டு மைதானங்களும், அழகிய பூங்காக் களும் இங்கு உண்டு. உதகமண்டலத்தில் யூக்கலிப்ட்டஸ் மரங்கள் ஏராளமாக வளர்ந் துள்ளன. தலைவலி, சளி முதலிய நோய் களுக்கு மருந்தாகப் பயன்படும் நீலகிரித் தைலம் என்ற எண்ணெயை இம்மரங் களின் இலைகளிலிருந்துதான் வடித்து எடுக் கிறார்கள். அரசர்களால் கட்டப்பெற்ற அழகிற் சிறந்த மாளிகைகளும், அரசாங்கக் கட்டடங்களும் இந்நகரில் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் மலர்க் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி ஆகியவை இந்நகரின் சிறப்பு கள். தங்குவதற்கு வசதியான உணவு விடுதிகள் பல இந்நகரில் உள்ளன. தொத வர்கள் என்ற ஆதிக்குடிகள் சிலர் இந் நகரில் வாழ்கின்றார்கள். உப்பு: உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்குச் சுவையைக் கொடுப்பது உப்பு. உப்பு என்ற சொல் பொதுவாக உணவில் பயன்படுத் தும் உப்பையே குறிக்கும். வேறு சில ரசாயனப் பொருள்களுக்கும் உப்பு என்ற பெயர் உண்டு. சோடா உப்பும், பேதி உப்பும் ரசாயன உப்புகள். உணவில் நாம் சேர்க்கும் உப்பில் சோடியம் என்ற உலோகமும், குளோரின் என்ற வாயுவும் கலந்துள்ளன. அதனால் இதற்கு சோடியம் குளோரைடு என்ற ரசாயனப் பெயர் உண்டு. கடலிலிருந்தும் உப்பு கிடைக்கிறது; நிலத்திலிருந்தும் கிடைக்கிறது. உங்களில் சிலர் கடல் நீரைச் சுவைத்திருக்கலாம். அது உப்புக் கரிக்கும். இந்தக் கடல் நீரி லிருந்து எப்படி உப்பு எடுக்கிறார்கள் உயர்த்தி 35 தெரியுமா? கடல் நீரைப் பாத்திகளில் பாய்ச்சுவார்கள். வெயிலில் நீர் மட்டும் ஆவியாகப் போய்விடும். அடியில் உப்பு தங்கியிருக்கும். இப்பாத்திகளுக்கு உப் பளங்கள் என்று பெயர். கடற்கரை ஓரமாகவுள்ள ஊர்கள் பலவற்றில் உப்பு எடுக்கிறார்கள். வட இந்தியாவிலும் உலகில் வேறு பல இடங்களிலும் சுரங்கங் களி லிருந்து உப்பை எடுக்கிறார்கள். அமெரிக்காவில் கிணறுகளிலிருந்தும் உப்பு கிடைக்கின்றது. மக்களுக்குப் பல வழிகளில் உப்பு பயனாகின்றது. பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் பனிக்கட்டி மேலும் குளிர்ந்து விடும். குளிர்ப்பெட்டி போன்ற சாதனங் களில் உப்பு கலந்த பனிக்கட்டிகளை இடு வார்கள். உணவுப் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கிறது உப்பு. ரசாயனப் பொருள்கள் பலவற்றைத் தயாரிப்பதற் கும் உப்பு தேவைப்படுகிறது. பயிர்களுக்கு உரமாகவும் உப்பு பயன்படுகிறது. பல மருந்துகளில் உப்பு சேர்ந்துள்ளது. தொண்டை வலிக்கும் பல்வலிக்கும் உப்பு கலந்தநீரைக் கொண்டு வாயைக் கொப் பளிப்பது உண்டு. மிகப் பழங்காலத்திலேயே பல நாடு களுக்கு இந்தியாவிலிருந்து உப்பு ஏற்றுமதி யாகியது. பழந்தமிழ் நாட்டில் நடந்து வந்த பெரும் வாணிகங்களில் உப்பு வாணி கமும் ஒன்று. உயர்த்தி (Lift) : கட்டடங்களில் மேல் மாடிக்கு நாம் படிகளின் மேல் ஏறிச் செல்கிறோம். ஆனால் அடுக்கடுக் காய்ப் பல மாடிகள் கொண்ட கட்டடங் களில் இவ்வாறு படிகளில் ஏறி இறங்கு வது எளிதல்ல. இதனால் களைப்பு ஏற் படும்; நேரமும் வீணாகும். ஆகையால் பல மாடிகள் கொண்ட கட்டடங்களில் மக் களையும் பொருள்களையும் மேலே ஏற்றிச் செல்வதற்கு ஒரு சாதனத்தைப் பயன் படுத்துகின்றனர். இதற்குத்தான் உயர்த்தி என்று பெயர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் உயர்த்தியைப் பயன் படுத்தி வந்தார்களாம். 17ஆம் நூற்றாண் டில் வேலயர் (Velayer ) என்ற பிரெஞ்சுக் காரர் 'பறக்கும் நாற்காலி' என்ற ஓர் உயர்த்தியை அமைத்தார். அடிமைகளை யும் விலங்குகளையும் கொண்டு அதை அவர் இயக்கினார். 1880-ல் ஜெர் மனியில் முதன் முதலாக மின்சாரத்தால் இயங்கும் உயர்த்தி அமைக்கப்பட்டது. நாளுக்கு நாள் உயர்த்தியின் அமைப்பில் பல மாறுதல்களும், திருத்தங்களும் செய் யப்பட்டன. இன்று உலகெங்கும் அமைக் கப்படும் உயர்த்திகள் யாவும் மின்சாரத் தால் இயங்குகின்றன.