பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உயிரியல்‌

புத்தகம்‌, . பேனா இப்படிப்‌ பலவற்றைப்‌ பார்க்கிறீர்கள்‌. புத்தகம்‌, பேனா, கல்‌ இவை உயிரில்லாதவை. நாய்‌, பூனை ஆகிய

பிராணிகள்‌ உயிருள்ளவை. செடி, கொடி,

மரம்‌ இவற்றுக்கும்‌ உயிருண்டு. எல்லா விலங்குகளும்‌ தாவரங்களும்‌ உயிருள்‌ ளவை. உயிருள்ளவற்றின்‌ தன்மை, வரலாறு, வளர்ச்சி முதலியவற்றை ஆராய்ந்து அறிவதே உயிரியல்‌ ஆகும்‌. நகரக்கூடிய அல்லது அசையக்கூடிய விலங்குகளே உயிருள்ளவை என்றும்‌, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம்‌ பெயர முடியாத மரம்‌, செடி, கொடி போன்றவை உயிரற்றவை என்றும்‌ ஒரு காலத்தில்‌ கருதி வந்தனர்‌. இது தவறான கருத்து என்பது பின்னர்‌ தெரிய வந்துது. குாவரங்களுக்கும்‌ உயிர்‌ உண்டு. விலங்கு களைப்‌ போல்‌ தாவரங்களும்‌ சுவாசிக்கின்‌ றன; விலங்குகள்‌ தம்‌ இனத்தைப்‌ பெருக்கு வதைப்‌ போல்‌ தாவரங்களும்‌ பூத்துக்‌

தைப்‌ பெருக்குகின்றன. தாவரங்கள்‌ தாமே உணவைத்‌ தயாரித்துக்கொள்ளு இன்றன. தாவரங்களுக்கும்‌ உணர்ச்சி உண்டு. .நச்சுப்பொருள்களை உட்கொண் டால்‌ தாவரங்களும்‌ துன்பப்படுகின்றன. இவ்வாறு, விலங்குகளைப்‌ போல்‌ தாவரங்‌ களும்‌ உயிருள்ளவையாய்‌ விளங்குகின்‌ றன .

ஆதிகாலத்தில்‌ உலகஇிலிருந்த தாவரங்‌ களும்‌ விலங்குகளும்‌ இன்று உள்ளதுபோல்‌ இருக்கவில்லை. இப்போதுள்ள உயிரினங்‌ கள்‌ காலப்போக்கில்‌ சிறுசிறு மாறுதல்‌ களுடன்‌ வளர்ச்சி அடைந்தவை. முதன்‌ முதலில்‌ உயிர்கள்‌ சிறுசிறு அணுக்களாகத்‌ தோன்றின. இச்சிறு அணுக்கள்‌ பல ஒன்று சேர்ந்து கண்ணுக்குப்‌ புலப்படக்‌ கூடிய சிறிய உயிர்களாயின. நாளடைவில்‌ இவற்றின்‌ உறுப்புகள்‌ மாறியும்‌ புதிய உறுப்புகள்‌ தோன்றியும்‌ பலப்‌ பல பெரிய பிராணிகள்‌ தோன்றி, இக்காலத்தில்‌ உள்ள

படிக்‌ கணக்கிலடங்காத உயிரினங்களாகப்‌

காய்த்து விதைகளை உண்டாக்கி தம்‌ இனத்‌ பெருகின. இவ்விதம்‌ சிறிய உயிர்களி


பரிணாமம்‌

60 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ கடலில்‌ மட்டுமே உயிர்‌ வாழ்க்கை-- ஆல்கா, சில வகைப்‌ புழுக்கள்‌, கடல்‌ நட்சத்திரம்‌,

கடல்‌ பஞ்சு, திரிலோபைட்டுகள்‌ (கடல்‌ தேள்‌) தோன்றின.

45 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ நிலத்தில்‌ உயிர்‌ வாழ்க்கை தோன்றியது. முதுகெலும்புள்ள சில பிராணிகள்‌--சில தாவ

ரங்கள்‌, தாவரங்களில்‌ இலை கிடையாது. 40 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ நீர்நிலம்‌ வாழ்வன தோன்றிய காலம்‌. சுரறுமீன்கள்‌, சிலந்தி போன்ற பலவகைப்‌ பூச்சிகள்‌ தோன்றின. பூச்சிகளுக்கு இறகுகள்‌ இல்லை.

95 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ ஊர்வன தோன்றிய காலம்‌. பூச்சிகள்‌ சிலவற்றுக்கு இறகுகள்‌ முளைத்தன.

25 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ நிலத்தில்‌ விலங்கினமும்‌ தாவர இனமும்‌ பெருகின.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ புலாலுண்ணிகள்‌ தோன்றின. ஊர்வனவற்றில்‌ பல வகைகள்‌ தோன்றின. இவற்றில்‌ சில 25 மீட்டர்‌ நீளம்‌ இருந்தன. ஊர்வனவற்றிலிருந்து சில பாலூட்டிகள்‌ (வெப்ப ரத்தப்‌ பிராணிகள்‌) தோன்றின. பாலூட்டிகள்‌ அணிலைப்‌ போலச்‌ சிறிய அளவிலேயே இருந்தன. ஆர்க்கியாப்டெரிக்ஸ்‌ என்ற முதல்‌ பறவை தோன்றியது. இதற்குப்‌ பற்கள்‌ உண்டு.

15 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ பலவகை மீன்கள்‌ தோன்றின. ஊர்வனவற்றில்‌ சிலவகை பறக்கக்கூடியன. சிலவகைப்‌

பறவைகளும்‌ தோன்றின. பாலூட்டிகள்‌ வளர்ச்சியடைந்தன.

ஊர்வனவற்றில்‌ பெரும்பாலானவை மறைந்தன. இன்றுள்ளது போல்‌ சிலவகை மீன்‌ களும்‌ பாலூட்டிகளும்‌ தோன்றின. யானை, காண்டாமிருகம்‌, பன்றி, மாடு போன்றவற்றின்‌ முன்னோடிகள்‌ தோன்றின. சில வகைக்‌ குரங்குகள்‌ தோன்றின.

7 கோடி ஆண்டுகளுக்கு முன்‌

4 கோடி ஆண்டுகளுக்கு முன்‌ தண்டு, நத்தை முதலியவை தோன்றின. பூனை, நாய்‌, கரடி போன்றவற்றின்‌ முன்னோடிகள்‌ தோன்றின. உருவத்தில்‌ சிறிய யானைகள்‌, பெரிய காண்டாமிருகங்கள்‌ தோன்றின. வாலில்லாக்‌ குரங்குகள்‌ தோன்றின (இவையே மனிதனின்‌ தோற்றத்திற்குக்‌ காரணமாக இருக்கக்கூடும்‌).

மீன்களில்‌ மேலும்‌ பலவகைகள்‌ தோன்றின. குரங்குகளில்‌ பலவகை. வாத்து, கடல்‌ நாரை,

2% கோடி ஆண்டுகளுக்கு முன்‌ ்‌ பெங்குவின்‌ போன்ற சில பறவைகள்‌ தோன்றின.

ர கோடி ஆண்டுகளுக்கு முன்‌ கடலில்‌ இன்றுள்ளவை போன்ற தாவரங்களும்‌ விலங்குகளும்‌ தோன்றின. பாலூட்டி களில்‌ சில்‌ மறைந்தன. தோற்றத்தில்‌ மனிதனைப்‌ போலவே உள்ள கேரங்குகள்‌ பெருகின.

இவற்றில்‌ சில இரண்டு கால்களாலேயே மனிதனைப்‌ போல்‌ நடந்தன. யானைகள்‌ பெருகின.

குரங்குகள்‌ அறிவாற்றலுடன்‌ விளங்கின. விலங்குகளை அடித்துக்‌ கொல்லவும்‌, அவற்றைக்‌

ழித்து உண்ணவும்‌ கற்களை ஆயுதங்களாகப்‌ பயன்படுத்தின. இதுவே குரங்கிலிருந்து மனிதன்‌ தோன்றத்‌ தொடங்கிய காலம்‌, யானை, குதிரை, மாடு முதலியவையும்‌ இன்று. காணப்படுவதைப்‌ போல்‌ இருந்தன.

10 லட்சம்‌ ஆண்டுகளுக்கு முன்‌:

10,000 ஆண்டுகளுக்கு முன்‌ விலங்குகளைப்‌ பழக்கவும்‌ தாவரங்களை வளர்க்கவும்‌ மனிதன்‌ கற்றுக்கொண்டான்‌.