பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எந்திரங்கள் என்னும் குகையில் எழும் எதிரொலிகள் வாத்திய இசைபோஸ் தீண்ட நேரம் கேட்குமாம்! 20 நாம் எழுப்பும் ஒலி எதிரொலிக்க வேண்டுமானால் 'நமக்கும் எதிரொலியை உண்டாக்கும் பரப்புக்கும் இடையே குறைந்தது மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இடைவெளி இதற்குக் குறைந்திருந்தால், எதிரொலி விரைவாக உண்டாகி நாம் எழுப்பிய ஒலியோடு கலந்துவிடும். லியானது எதிரொலியைவிட வலிமையானதால், நம் ஒலிதான் நமக்குக் கேட்கும்; எதிரொலி கேட்காது. நம் ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் (1,100 அடி) தூரம் செல்லும். இதே வேகத்தில் எதிரொளியும் செல்கிறது. ஒருவன் ஒரு பாறையிலிருந்து 330 மீட் டர் தொலைவில் நின்று குரல் எழுப்பினால், அவன் எதிரொலியைக் கேட்க இரண்டு வினாடிகள் ஆகும். ஒலி பாறையை அடைய ஒரு வினாடி; எதிரொலி திரும்பி வந்து அவனை அடைய ஒரு வினாடி. ஒலி,660 மீட்டர் தூரம் செல்ல இரண்டு வினாடிகள் ஆகும். தூரத்தை வைத்து நேரத்தைக் கணக்கிடுகிறேம் அல்லவா? அதைப் போல, எதிரொலிக்கும் நேரத்தை வைத்து தூரத்தைக் கணக்கிடலாம். இம் முறையில் மாலுமிகள் மூடுபனியில் தமக்கு எதிரே உள்ள பாறைகளும் பனிக்கட்டிப் பாறைகளும் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று அறிகிறார்கள். சுடலின் ஆழத்தை அறியவும், கடலின் அடியில் உள்ள எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல் இருக்கு மிடத்தை அறிந்து கொள்ளவும் இம்முறை பயன்படுகிறது. பார்க்க : ஒலி. எந்திரங்கள்: நம் வேலையை எனி தாக்குவதற்குப் பலவகை எந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். பல நாள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலையை எந்திரங்களின் உதவியால் ஒரே நாளில் செய்து முடிக்கலாம்; பலர் சேர்ந்து செய்யவேண்டிய வேலை ஒன்றை ஓர் எந்திரத்தின் உதவியால் ஒருவரே செய்து விடலாம். பல துறைகளில் இன்று எந் திரங்கள் பயன்பட்டு வருகின்றன. இன்று நாம் வாழ்வது 'எந்திர உலகம்' ஆகும். டிராக்டர், அறுவடை எந்திரம், கிணற்றி லிருந்து நீர் இறைக்கும் பம்ப்பு போன்ற பல எந்திரங்கள் இன்று விவசாயத்திற் குப் பயன்படுகின்றன. எந்திரங்களின் உதவியால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும். எல்லாத் துறைகளிலும் எத் திரங்கள் செயல்பட்டு வேலையை விரைவில் செய்து முடித்து மனிதனுக்கு ஓய்வைக் கொடுக்கின்றன. 57 550 எந்திரங்களின் திறனைக் குதிரைத் திறன் என்ற அலகில் அளவிடுவார்கள். பவுண்டு எடையுள்ள ஒரு பொருளை ஒரு வினாடி நேரத்தில் ஓர் அடி உயரம் தூக்கக் கூடிய திறனே ஒரு குதிரைத் திறனாகும். மெட்ரிக் முறையில் ஒரு குதிரைத் திறன் என்பது வாட்டுகளுக்குச் (சுமார் கிலோவாட்). நூற்றுக்கும் மேற் பட்ட குதிரைத் திறன் உடைய எந்திரங் களும் உண்டு. ஆணி பிடுங்கி (நெம்புகோல்) 746 இயங்கு கப்பி திருகு சமம் பாக்குவெட்டி (நெம்புகோல்) நிலைக்கப்பி ஆப்பு இடுக்கி (நெம்புகோல்) துரப்பணம் திருகு ஜாக்கி சாய்தளம் சாமானிய (எளிய ) எந்திரங்கள்