பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ஐபல் கோபுரம் - ஐரோப்பா ஐ.நா.வின் பொறுப்பில் சிற்சில நாடு கனின் திருவாகம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. இதனை தருமகர்த்தா சபை கவனிக் கிறது. சர்வதேச நீதிமன்றம் 15 நீதிபதிகளைக் கொண்டது. ஐ.நா. உறுப்பு நாடுகள் தமக்கிடையே ஏற்படும் வழக்குகளை இந்த நீதிமன்றத்தில் கூறித் தீர்த்துக்கொள்ள லாம். ஐ.நா. சபையின் தலைமைச் செயலகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் உள்ளது. இதன் நிருவாகத் தலைவராகப் பொதுச் செயலாளர் உள்ளார். ஒவ் வொரு பொதுச் சபைக் கூட்டத்திற்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுச் செயலானர் தம் கீழ் அலுவலர் களை எல்லா நாடுகளிலிருந்தும் நியமித்துக் கொள்ளுவார். சுகா சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம், உணவு-விவசாய நிறுவனம், உலக தார நிறுவனம், கல்வி-விஞ்ஞான-பண் பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ), குழந்தை கள் நிதி நிறுவனம் ஆகியவையும் ஐ.நா. சபையின் வேறு சில அமைப்புகளாகும். ஐ.நா. சபையில் சில குறைகள் உண்டு. எனினும், இதுவே இன்று மனித குலத்தை அழியாமல் காக்கும் ஒரே அரண்; உலக சமாதானத்தின் காவலன் என்று இது எல் லாராலும் கருதப்படுகிறது. ஐபல் கோபுரம்: ஐரோப்பாலி லுள்ள மிக உயரமான கோபுரம் ஐபல் கோபுரமாகும். இதன் உயரம் 300 மீட் டர் (984 அடி). இதனுடைய அடிப்பரப்பு 31 சதுர மீட்டர் (330 சதுர அடி). ஐபல் கோபுரம் உலகில் இதைவிட உயரமானது அமெரிக் காவில் நியூயார்க் நகரிலிருக்கும் எம்பயர் ஸ்டேட் கட்டடம் ஒன்றுதான். ஐபல் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ளது. 1889-ல் இங்கு உலகக் கண்காட்சி ஒன்று நடந்தது. இந்தக் கண்காட்சியில் அலெக்சாந்தர் சுஸ் டாவ் ஐபல் என்ற பிரெஞ்சு எஞ்சினீயர் இக்கோபுரத்தைக் கட்டினார். நகரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த அழகிய கோபுரத்தைக் காணலாம். இக்கோபுரம் தேனிரும்பில் ஆனது. இதைக் கட்டுவதற்கு 7,300 டன் இரும்பு செலவாயிற்று. இக்கோபுரத்தின் மேல் மூன்று மாடிகள் உள்ளன. அவற்றில் வானிலை ஆராய்ச்சிக் கூடமும், உணவு விடுதிகளும் இருக்கின்றன. மேலே ஏறு வதற்குப் படிகளும், உயர்த்திகளும் (த.க.) உண்டு. ஐரோப்பா: ஆசியாக் கண்டத் தின் மேற்குப் பகுதியோடு இணைந்த ஒரு தீபகற்பமே ஐரோப்பாக் கண்டம் ஆகும். எனவே இவ்விரண்டையும் சேர்த்து யூரேஷியா என்று அழைக்கின்றனர். தெற்கு வடக்காக இதன் நீளம் சுமார் 3.860 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக அகலம் சுமார் 5,300 கிலோமீட்டர். ஆஸ்திரேலியா தவிர மற்ற எல்லாக் கண் உங்களையும்விட ஐரோப்பா சிறியது. இதன் பரப்பு 1,01,00,000 சதுர கிலோ மீட்டர். இக்கண்டத்தில் சுமார் கோடி மக்கள் வாழ்கின்றனர். 46 ஐரோப்பாவுக்கு வடக்கே ஆர்க்டிக் சமுத்திரம் இருக்கிறது. கிழக்கே யூரல் மலைத்தொடரும், காஸ்ப்பியன் கடலும் உள்ளன; தெற்கே மத்தியதரைக் கடலும், மேற்கே அட்லான்டிக் சமுத்திரமும் இதன் எல்லைகளாகும். இக்கண்டத்தில் பல தீபகற்பங்கள் உண்டு. ஸ்காண்டி னேவியா, டென்மார்க், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியவை அவற் றுள் சில. இதையடுத்துப் பல தீவுகளும் உள்ளன. வடக்கே ஐஸ்லாந்தும், இங்கி வாந்தும் முக்கியமான தீவுகள், மத்திய தரைக் கடலில் ஈஜீயன் தீவுகள், கிரீட், அயோனியன் தீவுகள், சிசிலி, சார்உணியா, கார்சிக்கா, மால்ட்டா, பாலியாரிக் ஆகிய தீவுகள் உள்ளன. ஐரோப்பாவில் மலைத்தொடர்கள் பல உண்டு. நார்வீஜிய மலைகள், பிரனீஸ் மலை கள், அப்பினைன் மலைகள், ஆல்ப்ஸ் மலை கள் (த.க.) ஆகியவை முக்கியமானவை. ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள மான்ட் பிளாங்க் என்ற சிகரம் மிகவும் உயரமானது. அதன் உயரம் 4,800 மீட்டர். இக்கண்டத்தில் இரண்டு எரிமலைகள் உள்ளன. ஒன்று வெசூவியஸ். இது இத்