பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓட்டகச் சிவிங்கி தீவில் இன்னொரு அதிசயமும் உண்டு. இது ஆர்க்டிக் வட்டத்தை (த.க.) அடுத்திருப் பதால் இங்குக் கோடையில் நாள் முழுவதும் பகலாக இருக்கும்; குளிர்காலத் தில் நாள் முழுவதும் இரவாக இருக்கும். தீவின் வட பகுதியில் குளிர் அதிகம்; மத்தியபாகம் ஒரு பீடபூமி. எனவே தென்பகுதியிலும், தென்மேற்குப் பகுதி யிலுந்தான் மக்கள் வாழ்கிறார்கள். இந் நாட்டு மக்களில் பெரும்பாலோர் டென் மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளி லிருந்து வந்து குடியேறியவர்கள். மக்கள் தொகை 1,72,000. இங்குக் கோடை காலம் குறுகியதாக இருப்பதால் கோதுமை போன்ற தானியங்கள் விளைவ தில்லை. பெருமுயற்சியால் பயிராக்கப்பட்ட சிறு செடிகளைத் தவிர வேறு மரங்களே இல்லை. உரு ளைக்கிழங்கு பயிராகின் றது. ஆடு, மாடு, குதிரைகள் வளர்ப் பதும், மீன் பிடித்தலும் இங்கு நடை பெறும் முக்கியத் தொழில்கள். இங்குப் பல மாதங்கள் பனிக்கட்டி உறைந்துகிடப் பதால் பெரிய மரங்கள் வளர்வதில்லை. இதனால் எங்கும் கல்வீடுகளையே காண லாம். இத்தீவில் ரெயில்பாதை இல்லை. மக்கள் பெரும்பாலும் குதிரைகளில்தான் பயணம் செய்கின்றனர். காய்கறிகள். பழங்கள், நிலச்சுரி, மரம் முதலியன வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதியாகின் றன. மக்கள் எல்லாரும் படித்தவர்கள். பள்ளிக்கு வர முடியாத குழந்தைகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பார்கள். ஐஸ் வாத்து மொழி மிக இனிமையானது. ரேக்யவீக் ஐஸ்லாந்தின் தலைநகரம் பெரிய பட்டினமும், துறைமுகப்பட்டின மும் இதுதான். ஓட்டகச் சிவிங்கி: உலகிலுள்ள பிராணிகளில் மிகவும் உயரமானது எது தெரியுமா? ஒட்டகச் சிவிங்கிதான்! இது ஏழு மீட்டர் (20 அடி) உயரம் வரை வளரும். ஓட்டகம் போன்று நீண்ட உட லமைப்பும், சிறுத்தைப் புலியைப் (சிவிங்கி) போல் புள்ளிகளும் உடையதாக இருப்ப தால்இது ஒட்டகச் சிவிங்கி எனப்படுகிறது. நெடுங் காலத்திற்கு முன் இந்தியாவி லும் ஒட்டகச் சிவிங்கி இருந்தது. ஆனால் இன்று இல்லை. விலங்குக்காட்சிசாலைகளில் மட்டுமே இதனைக் காணலாம். ஆப்பிரிக் காவில் இது ஏராளமாகக் காணப்படு கிறது. வறண்ட வெப்பமான இடங்களில் இது வாழும். ஒட்டகச் சிவிங்கியின் கால்கள் நீள மானவை; எல்லாக் கால்களும் ஒரே உயர முடையவை. ஆனால் முதலில் பார்க்கும் போது முன் கால்கள் பின்கால்களை விட உயரமானவை போல் தோன்றும். 79 இதன் நாக்கு மிகவும் நீளமானது. தரையில் நின்று கொண்டே மரத்தின் இலைகலை இது பறித்துத் தின்னும். அதற்கு ஏற்றவாறு இதன் கழுத்து நீண் டிருக்கும். கால்களை அகல விரித்துக் கொண்டு தரையிலுள்ள தழைகளைத் தின்னும்போது அல்லது தண்ணீரைக் குடிக்கும்போது வேடிக்கையாக இருக்கும். இதன் கழுத்து நீளமாக இருந்தாலும், மற்றப் பாலூட்டிகளுக்கு இருப்பதுபோல் இதன் கழுத்திலும் ஏழு முள் எலும்புகள் உள்ளன. கழுத்தில் பிடரி மயிர் உண்டு. இதன் கண்கள் மிக அழகானவை; கூர்மையானவை. தலையைத் திருப்பாமலே இது முன்னும், பின்னும், பக்கங்களிலும் பார்க்கும். இது சுத்துவதில்லை. ஏனெனில் இதற்குக் குரல் கிடையாது. மிக மெல்லிய ஒலியும் இதற்குத் தெளிவாகக் கேட்கும். மோப்ப சக்தியும் இதற்கு அதிகம். நீர் குடிக்காமலே பல நாள் இது உயிர் வாழும். களின் ஒட்டகச் சிவிங்கியின் உடலில் பழுப்பு நிறப் பட்டைகளும், வெள்ளைக் கோடு களும் கலந்திருக்கும். ஆகையால் மரங் இடையே இது உலவும்போது இதைக் கண்டுபிடிக்க முடியாது. இது அறிவுள்ள ஒரு விலங்கு. மிகவும் சாது வானது. ஆனால் சீற்றம் வந்தால் சிங்கத் துடனும் போராடும். குதிரையை விட வேகமாக ஓடும். இதன் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் இதை வேட்டையாடு கிறார்கள். இதனால் இதன் தொகை குறைந்து வருகிறது. ஒட்டகச் சிவிங்கி