பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டில் சுமார் 9 கோடி மக்கள் வாழ் கிறார்கள். இவர்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலோர் முஸ்லிம் மதத்தவர்கள். பாலி, லோம்போக் தீவுகளில் இந்துக்களும் வாழ்கிறார்கள். பாதிக்கு மேற்பட்ட மக்கள் வேளாண்மை செய்து கிராமங்களில் வாழ்கிறார்கள். இப்போது இந்தோனீசியாவில் தொழிற் சாலைகள் பெருகிவருகின்றன. கப்பல் கட்டுதல், பஞ்சாலை போன்ற தொழிற் சாலைகளில் பலர் வேலை செய்கிறார்கள். தேயிலை, ரப்பர், பெட்ரோலியம் , வெள் ளீயம் முதலியன ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், எந்திரங்கள், உலோகப் பொருள்கள் முதலியன இறக்குமதியா கின்றன. தலைநகரம் ஜக்கார்ட்டா . இது ஜாவாத் தீவில் உள்ளது. இமயமலை : இந்தியாவின் வடக்கு எல்லையாக இமயமலை விளங்குகிறது என்று நீங்கள் எல்லாரும் படித்திருப்பீர்கள். இது உலகிலேயே உயரமான மலைத் தொடர் ஆகும். 'இமாலயம்' என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் உயரமான பகுதிகளில் எப்போதும் பனி உறைந்து இருப்பதால் இப்பெயர் வந்தது. இமயமலை ஒரே தொடர்ச்சியான மலை யாக இல்லை. இது அடுக்கு அடுக்காக அமைந்த பல மலைத்தொடர்களைக் கொண் டது. இதன் அகலம் 150 முதல் 250 கி.மீ. வரை உள்ளது. இமயமலையின் மொத்த நீளம் கிழக்கு மேற்காகச் சுமார் 2,400 கி.மீ. இதில் எழுபதுக்கும் மேற்பட்ட உயரமான சிகரங்கள் உள்ளன. இவற்றுள் எவரஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமானது. இதன் உயரம் 8,850 மீட்டர் (29,028 அடி). கஞ்சன் ஜங்கா (காஞ்சன சிருங்கம்), மகலு , தவளகிரி, காமெட், கைலாயம் முதலியன மற்ற உயரமான சிகரங்களாகும். இந்துக்களுக் கும் பௌத்தர்களுக்கும் புனிதமான இடம் கைலாயம். இந்தச் சிகரத்திற்கு இமயமலைத் தொடரின் ஒரு தோற்றம் இயற்கை வாயு அருகே மானச சரோ வரம் என்னும் அழகான ஏரி ஒன்று இருக்கிறது. அழகிய அன்னப் பறவைகள் பலவற்றை இந்த ஏரி யில் காணலாம். உலகப் புகழ்பெற்ற காச்மீரப் பள்ளத் தாக்கு இந்த மலையில் இருக்கிறது. சிம்லா, டார்ஜீலிங் போன்ற மலைவாசத்தலங்களும் இங்கு உள்ளன. கோடையில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து தங்குகிறார்கள். இமயமலையில் இருபதுக்கும் மேற்பட்ட ஆறுகள் உற்பத்தி யாகின்றன. இவற்றுள் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா முக்கியமானவை. இமய மலைப் பகுதியில் தேவதாரு, ஓக் ஆகிய மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. மலைச்சரிவுகளில் 1,500 மீட்டர் உயரம் வரையிலும் தேயிலை பயிராகிறது. இமயமலைக் காடுகளில் புலி, சிறுத்தை , காண்டாமிருகம், கரடி, யானை, யாக் எருமை, குரங்கு முதலிய விலங்குகள் வாழ்கின்றன. இந்தியாவின் வடக்கு எல்லை யில் ஓர் இயற்கை அரணாக விளங்குகிறது இமயமலை. இமாசலப் பிரதேசம் : இந்திய அர சாங்கத்தின் நேர்முக ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இமாசலப் பிரதேசமும் ஒன்று. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, காச்மீரம் ஆகிய மாநிலங் களுக்கு இடையில் இது அமைந்துள்ளது. இமயமலைச் சரிவில் இது அமைந்துள்ள தால், பழ வகைகள் இங்கு மிகுதியாகப் பயிராகின்றன. ஆப்பிள், வாதுமை, பீச் ஆகிய பழங்கள் முக்கியமானவை. உருளைக் கிழங்கு, இஞ்சி, தக்காளி, பட்டாணி ஆகியவையும் பயிராகின்றன. காடுகள் மிகுந்திருப்பதால் வெட்டுமரங்கள், விறகு, கரி போன்ற காடுதரு பொருள்களும் மிகுதியாகக் கிடைக்கின்றன. பஞ்சு நூற்ற லும், கம்பளி ஆடை நெய்தலும் மக்க ளின் முக்கியத் தொழில்கள். சீனாப், ராவி, பீயாஸ், சட்லெஜ், யமுனை ஆகிய ஐந்து ஆறுகளும் இமாசலப் பிரதேசத்தின் வழி யாக ஓடுகின்றன. இமாசலப் பிரதேசத்தின் பரப்பு 27,300 சதுர கி.மீ. மக்கள் தொகை சுமார் 28,00,000 (1967). தலைநகர் சிம்லா . இயற்கை வாயு: பூமியைத் தோண்டி நிலக்கரியை எடுக்கிறோம் என் பது உங்களுக்குத் தெரியும். பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் எண்ணெய், தார் முதலியவற்றைத் தருகின்ற பெட் ரோலியமும் (த.க.) இவ்வாறே தரைக்கு அடியிலிருந்து தான் கிடைக்கிறது. நிலக் கரி, பெட்ரோலியம் ஆகியவற்றை எடுக் கும்போது ஒருவகை வாயுவும் பூமிக்கடியி லிருந்து வெளியாவதுண்டு. பெட்ரோலிய