பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒலிபெருக்கி - ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் யும், செய்திகளையும் கேட்கிறார்கள். இவ் வாறு உலகெங்கும் பலர் தமக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை வானொலிப் பெட்டி மூலம் கேட்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளை வானொலி நிலையங்கலிலிருந்து ஒலிபரப்புகிறார்கள் என்று நாம் சொல்கிறோம். நெடுந்தொலை வில் உள்ளவர்கள் பேசுவதையும், பாடு வதையும் இந்த ஒலிபரப்பினால்தான் நாம் கேட்க முடிகிறது. உலகில் எல்லா முக்கிய நகரங்களிலும் வானொலி நிலையங்கள் உண்டு. பாட்டு, பேச்சு, நாடகம் போன்ற பலவகையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அந்நிலையங் களில் லிப்பதிவு செய்துவிடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை ஒலி பரப்புவார்கள். ஒ ஒலிப்பதிவு செய்யும்பொழுது வேறெந்த ஓசையும் அதில் சேரக்கூடாது. நிகழ்ச்சி கள் நடைபெறும் அறை நன்றாக மூடப்பட் டிருக்கும். வெளியிலிருந்து சிறிதளவு ஓசை யும் உள்ளே புகாது. இந்த அறையின் சுவர்கள், கதவுகள், கூரை ஆகியவை யாவும் ஒலியை உறிஞ்சும் பொருளால் ஆனவை. ஆகையால் இந்த அறைக்குள் எதிரொலி (த.க.) உண்டாகாது. ஒலிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளும் வானொலி நிலையத்திலேயே பதிவு செய்யப் படுவதில்லை. விழாக்கள், பொதுக்கூட்டங் கள். சிறந்த பாட்டுக் கச்சேரிகள் முதலிய நிகழ்ச்சிகளை அவை நடைபெறும் இடத் தில்தான் ஒலிப்பதிவு செய்ய முடியும். சுதந்தரதின விழா அணிவகுப்பு, அயல் நாட்டுத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு, கிரிக்கெட் போன்ற விளையாட் டுகள் முதலிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடப்பதை அப்படியே வானொலி நிலையத் தார் எடுத்துக் கூறி, தடைபெறும் நிகழ்ச்சி களை நம் கண்முன் நிறுத்துவார்கள். ஒலிபரப்புதல் முதன் முதல் இங்கிலாந் தில் 1920-ல் தொடங்கியது. இன்று உலகெங்கும் விரிவடைந்துவிட்டது. ஒலி அலைகளை வானில் எவ்வாறு பரப்புகிறார் கள்? அவை எவ்வாறு நம் வீட்டில் உள்ள வானொலிப் பெட்டியை வந்தடைகின்றன? இவற்றைப் பற்றிய விளக்கத்தை வானொலி என்ற தலைப்பிலுள்ள கட்டுரையில் பார்க்க லாம். ஒலிபெருக்கி: நாம் பேசுவது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே கேட்கும். சிறிது உரக்கப் பேசினால் இன் னும் சற்றுத் தொலைவிலுள்ளவர்களுக்கும் கேட்கும். ஆனால் நூற்றுக்கணக்கானவர் களுக்குக் கேட்கும்படியாகக் குரல் எழுப் பிப் பேச நம்மால் முடியாது. அதற்கு ஒலிபெருக்கியின் உதவி தேவை. பேசும் போது நம் சொற்கள் எழுப்பும் ஒலியை 85 அது பல மடங்கு பெருக்கித் தருவதால் அதற்கு ஒலிபெருக்கி என்று பெயர். அரங்குகளில் பாடுவோருக்கு முன்பும், பேசுவோருக்கு முன்பும் ஒரு சிறு கருவி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த் திருக்கலாம். இதற்கு மைக்ராபோன் (Microphone) GT GOT I பெயர். சுருக்க மாக மைக்' என்றும் சொல்வார்கள். இந்தக் கருவி ஒலி அலைகளை மின்சக்தி அலை களாக மாற்றுகின்றது. இவை மின்சாரக் கம்பிகளின் வழியாக ஓடி ஒலிபெருக்கியை அடைகிறது. ஒலிபெருக்கி மின்சக்தியை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றிவிடுகின் றது. மைக்ராபோனுக்கும் ஒலிபெருக்கிக் கும் இடையே வலிபெருக்கி (Amplifier) என்று ஒரு கருவி உண்டு. இதைக்கொண்டு நமக்கு வேண்டிய அளவு ஒலியைக் கூட்டிக் கொள்ளலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ள கூட்டமாக இருந்தாலும் அதற்குத் தகுந்த வாறு பல இடங்களில் ஒலிபெருக்கிகளை அமைத்து எல்லாரும் கேட்கும்படிச் செய்ய லாம். ஒவ்வொரு வானொலிப் பெட்டியி லும் ஓர் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக் கிறது. சுமார் ஒலிம்ப்பிக் ஆட்டங்கள் : 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த கிரேக்க மக்கள் ஒலிம்ப்பியா என்னும் சம வெளி ஒன்றில் ஜூஸ் என்னும் தேவதைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுத்தார்கள். இவ்விழாவையொட்டிச் சில விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி வந்தனர். இவையே ஒளிம்ப்பில் ஆட்டங் கள். இவை தொடர்ந்து இன்றும் நடை பெற்று வருகின்றன. பழங்கால ஒலிம்ப்பிக் ஆட்டங்களுக்கும் தற்கால ஒலிம்ப்பிக் ஆட்டங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. கிரேக்கர்கள் நடத்திய விழாவில் முதல் நாள் கடவுள் வணக்கமும், பலியிடுதலும் நடைபெறும். மற்ற நாள்களில் போட்டி கள் நடக்கும். தொடக்கத்தில் ஓட்டப் பந்தயம் மட்டுமே நடந்தது. பின்னர் குத் துச் சண்டை, மஸ்யுத்தம் போன்ற போட் டிகளும் சேர்க்கப்பட்டன. போட்டியில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. போட் டியில் வென்ற வீரர்கள் புகழ்ந்து பாராட் டப்பட்டனர். ஒலிவ மரத்தின் பூங்கொத் துகளாலான முடிகள் அவர்கள் தலையில் சூட்டப்பட்டன. அவர்களின் பெயர்கள் நாடு முழுவதும் பறைசாற்றி மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடினர். சிற்பிகள் அவர்களின் உருவச்சிலைகளைச் செய்து வைத்தார்கள். இவ்வாறு இவ்விழா கி.மு. 8ஆம் நூற் றாண்டு முதல் நான்காண்டுகளுக்கு ஒரு