பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 ஒளிக்கோட்டம் உலோகங்களின் மூலமும் ஒளி ஊடுருவிச் செல்லாது. இவற்றுக்கு ஒளி புகாப் பொருள்கள் என்று பெயர். ஒளி புகாப் பொருள் ஒன்றின்மீது ஒளி பட்டால், அப் பொருனின் நிழல் அதனருகில் அதை யொட்டி விழுகிறது. சில பொருள்களில் ஒளி ஓரளவுக்கு ஊடுருவிச் செல்லும். எண்ணெய்க் காகிதம், தேய்த்த கண்ணாடி போன்றவற்றுக்கு ஒளி கசியும் பொருள் கள் என்று பெயர். ஒளி கசியும் பொருள் களின் வழியாகப் பார்த்தால் மறுபுறம் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரியும். ஒளி எவ்வளவு வேகத்தில் பாய்கிறது தெரியுமா? அது வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் (1,86,000 மைல்) தூரம் பாய்ந்து செல்கிறது! ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு ஊடகம் என்று பெயர். ஊடகத்தின் அடர்த்தித் தன்மையைப் பொறுத்து ஒளியின் வேகமும் மாறுபடும். பொதுவாகக் காற்றிலும் வெற்றிடத்தி லும் ஒளி விநாடிக்கு 3,00,000 கி.மீ. வேசுத்தில் பரவுகிறது. தண்ணீலில் அது ஒளி பரவும் வேகம் விநாடிக்கு 2,22,000 கி.மீ. (1,39,000 மைல்); கண்ணாடியில் விநாடிக்கு 1,98,000 கி.மீ. (1,24,000 மைல்). ஒளி ஒரு வினாடிக்கு 3,00,000 கி.மீ. தூரம் செல்கிறது. ஆனால் ஒலி (த.க.) ஒரு வினாடிக்கு 330 மீட்டர் (1,100 அடி) தூரமே செல்கிறது. இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன; எனினும் ஒலியைவிட ஒளி வெகு வேகமாகச் செல்வ தால் இடியோசையைக் கேட்குமுன்னரே நாம் மின்னலைப் பார்த்துவிடுகிறேம். ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் ஒரு தேக்கரண்டியை நுழைத்தால், தண்ணீருக்குள் காணும் தேக்கரண்டியின் பகுதி சிறிது வளைந்து தோன்றும். உண்மையில் தேக்கரண்டி வளையவில்லை; ஒளியானது ஓர் ஊடகத்தி லிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் பொழுது தன் பாதையிலிருந்து சிறிது. விலகிச் செல்லும். ஆதனுாஸ்தான் தேக் கரண்டி வளைந்து தோன்றுகிறது. இத் தன்மையை ஒளிக்கோட்டம் (Refraction) என்பர். இயற்கையில் நமக்கு ஒளி தரும் பொருள்களில் சூரியனே முதன்மை யானது. சூரிய ஒளி வெண்மையாகத் தோன்றுகிறது. எனினும் இதில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கரு நீலம், ஊதா ஆகிய ஏழு நிறங்கள் சேர்ந் துள்ளன. ஒரு பட்டகத்தின் (Prism) மேல் விழும் சூரிய ஒளி அதன் மறுபுறம் மேற்கூறிய ஏழு நிறங்களாகப் பிரித்து செல்லும். இதற்கு நிறமாலை (Spectrum) என்று பெயர். வானவில்லும் ஒரு நிறமாலைதான். மழைத்துளிகள் ஒவ்வொன் றும் ஒரு பட்டகத்தைப் போலச் செயல்படு கின்றன. மழைத்துனிகளின் வழியே சூரிய ஒளி நுழைந்து ஏழு நிறங்களாகப் பிரிந்து அழகிய வான வில்லாகக் காட்சியளிக் கின்றது. நிறமாலை ஒரு பட்டகத்தின்மேல் விழும் சூரிய ஒளி, சிவப்பு= ஆரஞ்சு - மஞ்சள் - பச்சை நீலம் கருநீலம் ஊதா ஆகிய ஏழு நிறங்களாகப் பிரிந்து செல்கிறது.