பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 ஓக் மரம் ஓநாய் காற்றுடன் சேர்ந்துவிடுகிறது. காற்றில் ஒரு சமநிலை உண்டாக்கப்பட்டுவிடுகிறது. ஓக் மரம்: உலகில் உள்ள சில உறுதியான மரங்களுள் ஓக் மரமும் ஒன்று. இது புயல், மழை, பனி முதலியவற்றைத் தாங்கி வாழும். ஓக் மரங்களில் பலவகை உண்டு. சிலவகை மரங்கள் நூறு அடி உயரத்திற்கு மேலும் வளரும். மற்றும் சில உயரமாக வளருவதில்லை. புதர்போலப் படர்ந்திருக்கும். ஓ மரம் நாள்பட வளரும் ஒரு மரம். விதையிலிருந்து முளைத்து ஒரு மரமாக வளர இதற்குச் சுமார் நூறு ஆண்டுகள் ஆகும். முழுதும் வளர்த்த பிறகு இது ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழும். ஓக் மரத்தில் செய்யப்பட்ட சாமான்கள் நீண்ட நாள் உழைக்கும். ஐரோப்பிய நாடுகளில் பழங்காலத்தில் ஓக் மரத்தால் தான் கப்பல் கட்டினார்கள். இன்றும் படகு கள் கட்டவும், மரச் சாமான்கள் செய்ய வும் இம்மரம் உதவுகின்றது. குளிச் சிலவகை மரங்களில் ஆண்டு முழுவதும் இலைகள் தழைத்து இருக்கும். காலத்தில் பெரும்பாலான ஓக் மரங்களில் இலைகள் உதிர்ந்துவிடும். வேனிற்காலம் வந்ததும் மறுபடியும் இலைகள் துளிர்க்கும். இலைகள் தோன்றுவதற்கு முன்பே பூக்கள் அரும்பி மலர்ந்துவிடும். பூக்களில் இருந்து ஒற்றைக் கொட்டை உடைய காய்கள் காய்க்கும். இந்தக் கொட்டைகளைச் சிலர் வேகவைத்து உண்பார்கள். இவற்றை மாவாக இடித்து ரொட்டி சுட்டு பதும் உண்டு. இந்தக் கொட்டை பன்றி களுக்கு நல்ல தீனியாகின்றது. சில ஓக் மரக் கிளைகளின்மேல் முடிச்சுகள் போலச் சிறுசிறு கரடுகள் கட்டும். இந்தக் கரடு கள் சில மருந்துகள் செய்யவும், தோல் பதனிடவும் உதவுகின்றன. நாம் மருந்தில் ஓக் மரம் உண் சேர்க்கும் மாசிக்காய் ஒரு கரடுதான். ஓக் மரப்பட்டை தோல் பதனிடவும் கார்க்கு கன் செய்யவும் பயன்படுகிறது. இந்தியாவில் இமயமலைச் சாரலிலும் நீலகிரியிலும் ஓக் மரங்களைக் காணலாம். கடற் ஓட்டுமீன்கள் (Crustacea) : கரையிலும், ஆறு, குளம் இவற்றின் கரையோரங்களிலும், வரப்பு வளைகளிலும் நண்டுகளை நீங்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நண்டு ஒரு வகை மீன் ஆகும். இதன் உடல் கெட்டியான ஓட்டினாலானது. எனவே இதை ஓட்டுமீன் என்கிறார்கள். இறால், கூனி, கல்லிறால் ஆகியவையும் ஓட்டுமீன்களே, உலகிலுள்ள விலங்குகளில் பாதிக்கு மேல் 'கணுக்காலிகள்' (த.க.) என்னும் பெரும்பிரிவைச் சேர்ந்தவை. இப்பிரிவில் பூச்சிகள், சிலந்தி, மரவட்டை, பூரான், தேள், உண்ணி முதலிய பலவகையான பிராணிகள் அடங்கும். ஓட்டுமீன்களும் கணுக்காலிகளைச் சேர்ந்தவையே. ஓட்டுமீன்களில் பல்லாயிரம் வகைகள் உண்டு. நண்டு கல்லிரூஸ் ஆகியவை ஓட்டுமீன்களில் மிகப் பெரியவை. மைக் ராஸ்கோப்பினால் (த.க.) மட்டுமே பார்க் கக்கூடிய மிக நுண்ணிய ஓட்டுமீன்களும் உள்ளன. நீர் ஈ இந்த இனத்தைச் சேர்ந் தது. எல்லா ஓட்டுமீன்களுக்கும் கடினமான மேலோடு உண்டு. இந்த ஓடு கைட்டின் சுண்ணாம்புப் (Chitin) 676T ID பொரு ளால் ஆனது. இவ்வுயிர் வகைகளுக்கு இரு இணை உணர்வு கொம்புகள் உள்ளன. ஓட்டுமீன்கள் தம் செவுள்களால் மூச்சு விடுகின்றன. பெரும்பாலும் ஓட்டுமீன் கள் உப்புநீரில் வாழும். நல்ல நீரில் வாழும் ஓட்டுமீன்களும் உண்டு. அரச நண்டு, மர நண்டு போன்ற சில ஓட்டுமீன்கள் நிலத்திலும் வாழ்கின்றன. ஓட்டுமீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவை நீரிலுள்ள அழுக்குகளை உண்டு வாழும். சிலர் இறால், நண்டு, கூனி இவற்றை உண்கிறார்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் ஓட்டுமீன்கன் வாழ்ந்து வருகின் றன. 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூ மியில் திரிலோபைட்டுகள் (Trilobites ) என்ற விலங்குகள் மிகுதியாகக் காணப்பட் டன. இவையும் ஓட்டுமீன் வகையைச் சேர்ந்தவையே. ஓநாய்: காடுகளிலேயே வாழும். விலங்குகளில் ஓநாயும் ஒன்று; இது நாய் இனத்தைச் சேர்ந்தது; குட்டி போட்டுப் பால் கொடுக்கும். இதன் கால்கள் நீள மானவை; பாதங்கள் உறுதியானவை;