பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 5.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

படம்


குழந்தைகள் கலைக்களஞ்சியம்

டால்ட்டன், ஜான் (1766-1844): அணு (த.க.) மிகமிகச் சிறியது. அணுக்களைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் ஆகிய பொருள்களின் அணுக்களால் தன்மைகளிலிருந்து அணுக்களைப் பற்றி ஓரளவு ஆராய்ந்து கூற முடியும். அவ்வாறு முதன் முதலில் ஆராய்ந்து கூறியவர் ஜான் டால்ட்டன் என்ற ஆங்கில விஞ்ஞானி.

டால்ட்டனின் தந்தை ஓர் ஏழைநெசவாளர். எனவே டால்ட்டன் தம் தொடக்கக் கல்வியைச் சில ஆண்டுகளில் முடித்துக் கொண்டு, தம் 12ஆம் வயதிலேயே பள்ளி ஆசிரியராக வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரங்களில் கணிதமும் விஞ்ஞானமும் பயின்றார். வானவியலிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் இவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியரானார். விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிக விருப்பம் கொண்ட இவர் தம் வேலையை விட்டுவிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

இன்றையக் கண்டுபிடிப்புகள் சிலவற்றின் விளைவாக அணுவைப் பற்றி டால்ட்டன் வெளியிட்ட கருத்துகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும் அணுவைப்பற்றிய இவருடைய கொள்கை ரசாயனத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது. பார்க்க : அணு.

டால்ஸ்ட்டாய், லீயோ (1828-1910): உலகப் பேரறிஞர்களுள் ஒருவர் டால்ஸ்ட்டாய். இவர் புகழ்பெற்ற நாவலாசிரியர்; சிறந்த சிந்தனையாளர்.

இவர் ரஷ்யாவில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். பள்ளி செல்லாமல் வீட்டிலேயே 16 வயது வரை தனி ஆசிரியர்களிடம் கல்வி கற்றார். பின்னர் கஸான் பல்கலைக்கழகத்தில் அரபு, துருக்கி இலக்கியம் பயின்றார். தொடர்ந்து சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் பட்டம் பெறாமலேயே வெளியேறினார். 1851-ல் ரஷ்யப் படையில் சேர்ந்து, காக்கசஸ் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு ‘குழந்தைப் பருவம்' என்னும் தம் முதலாவது கதையை 1854-ல் எழுதினார். லீயோ டால்ஸ்ட்டாய்