பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 6.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை எனதன்புள்ள குழந்தைகளே. குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஐந்து தொகுதிகளைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். இது ஆறம் தொகுதி. குழந்தைகளிடம் பேரன்பு கொண்டிருந்த ஜவாஹர் னால் நேகு, பாப்பாப் பாட்டு பாடிய பாரதியார். குழந்தை களுக்கு நல்ல பாடல்கள் இயற்றிய பாரதிதாசன் முதலியவர் களைப் பற்றியெல்லாம் இதில் கட்டுரைகள் உள்ளன. தாவரங்களில் பலவகை உண்டு. அவற்றுள் நீர்த் தாவரங் சுள். பாவைத் தாவரங்கள் பற்றி இதில் நீங்கள் படிக்கலாம். நீங்கள் விரும்பி உண்ணும் பழங்கள் எத்தனையோ வகை. அவற்றைப் பற்றிய பொதுக் கட்டுரை ஒன்று இதில் இடம் பெற்றுள்ளது. நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் குறித் தும், நோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றிக் கூறும் நோவியல் குறித்தும் இதில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நாள்தோறும். பலவகைப் பறவைகளைப் பார்க்கிமுேம். அவற்றிற்குத்தான் எத்தனை அழகு, எத்தனை நிறம், எத்தனை விந்தையான பழக்கங்கள் | கண்கவரும் வண்ணப் படங்களுடன் பறவைகளைப் பற்றி ஒரு பொதுக் கட்டுரையும், பாடும் பறவைகள் பற்றியும், ஆஸ்திரேலியப் பகுதிகளில் வாழும் அழகிய பரதீசுப் பறவைகள் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளும் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பகுவதிலைக்கு ஏற்றவாறு பறவைகள் தரம் வசிக்குமிடத்திலிருந்து எவ்வாறு கூட்டங்கூட்டமாக நெடுந் தொலைவு பறந்து சென்று மீண்டும் தாம் வசிக்கும் இடத்திற்கே திரும்பி வருகின்றன என்பதைப் பற்றிய சுவையான செய்தியை யும் இத்தொகுதியில் காணலாம். உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பதைக் கூறும் பரிணாமம் என்ற கட்டுரையும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் பற்றிய பழங்கால உயிர்வாழ்க்கை என்னும் கட்டுரையும் இதில் உள்ளன. உலக வரலாற்று வீரர்களான நெப்போலியன், நெல்சன், விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கிய சர் ஐசக் நியூட்டன். மைக்கேல் பாரடே, ஜாயி பாஸ்ட்டர், பெஞ்சயின் பிராங்க்லின், நைட்டிங்கேல் அம்மையார் முதலியவர்களைப் பற்றி யெல்லாம் இதில் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். நாய் என்னும் கட்டுரையில் தொடங்கி, பிரிட்டன் என்ற கட்டுரை முடிய இதில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் விளக்கப் படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன. உங்கள் அறிலைப் பெருக்கிக்கொள்ள இத்தொகுதியும் உதவியாக இருக்கு மென நம்புகிறேன். பல்கலைக்கழகக் கட்டடம். சென்னை 600005 16-5-1973 தி.சு. அவினாசிலிங்கம் தபைவர். தமிழ் வளர்ச்சிக் கழகம்