பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பீட் கிழங்கு - பீரங்கி புகழ்பெற்றது. இந்தக் கோபுரம் 1174-ல் தொடங்கி 1350-ல் கட்டி முடிக்கப்பட் டது. இதன் உயரம் 54 மீட்டர். இது முழுதும் சலவைக் கல்லால் ஆனது. கோபுரம் செங்குத்தாக இல்லாமல் ஒரு புறம் சுமார் 5 மீட்டர் வரை சாய்ந்துள் ளது.நூறு ஆண்டுகளில் 30 சென்டிமீட்டர் சாய்வதாகவும், சரிவரப் பாதுகாக்கா விட்டால் 50 ஆண்டுகளில் இது விழுந்து விடும் என்றும் அஞ்சுகின்றார்கள். பீசாவில் 1343-ல் நிறுவப்பட்ட பல் கலைக்கழகம் உள்ளது. பீட் கிழங்கு (Beet) : கரும்பி லிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பீட் கிழங்கிலிருந்தும் சர்க்கரை தயா ரிக்கலாம். சர்க்கரை உற்பத்தியில் கரும்புக்கு அடுத்து பீட் கிழங்கு முக்கிய மானது. பீட் கிழங்கிலிருந்து சர்க்கரை எடுக்கலாம் என்பதை 1747-ல் கண்டு பிடித்தார்கள். கரும்பு வேளாண்மை செய்யமுடியாத குளிர்ப்பிரதேசங்களில் பீட் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. பீட் கிழங்கிலிருந்து செய்த சர்க்கரைக்கும், கரும்பிலிருந்து செய்த சர்க்கரைக்கும் வேறுபாடே காணமுடியாது. ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா, போலந்து, பிரான்ஸ், பிரிட்டன், ஐப் பான், சீனா முதலிய நாடுகளில் பீட் கிழங்கி லிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள். பீட் கிழங்கிலிருந்து எப்படிச் சர்க்கரை தயாரிக் கிறார்கள் என்பதைச் சர்க்கரை என்ற கட்டுரையில் காணலாம். பீட் கிழங்கி லிருந்து சர்க்கரை எடுத்தபின் எஞ்சியிருக் கும் சக்கைப் பொருள் பயிர்களுக்கு உர மாகவும், கால்நடைகள், பன்றி முதலிய வற்றிற்குத் தீனியாகவும் பயன்படுகிறது. பீட் செடியில் தோட்ட பீட், மாங் கெல் வர்ஸெல் ( Mangel Wurzel), சர்க் கரை பீட் (Sugar beet) என்னும் வகைகள் முக்கியமானவை. சிவப்புத் தோட்ட பீட் சமையலுக்கும், மாங்கெல் வர்ஸெல் கால் நடைகளின் தீவனமாகவும் பயன்படு கிறது. பீட் கிழங்குகள் உருண்டையாக அல்லது முள்ளங்கி போன்று ' நீண்டு பருத்து இருக்கும். இது இருபருவப் பயிர் ஆகும். பெரும்பாலும் பயிர்செய்த முதலாவது ஆண்டின் இறுதியிலேயே வேளாண்மை செய்வோர் பீட் கிழங்கைத் தோண்டி எடுத்துவிடுகிறர்கள். பீரங்கி ( Cannon) : போரில் பயன் படுத்தும் ஒரு வகைப் பெரிய துப்பாக் கிக்கு பீரங்கி என்று பெயர். இது கையினால் தூக்கிச் செல்ல முடியாத இரும்புப் பட்டைகளால் ஆன பீரங்கி வேண்டிய கோணத்தில் உயர்த்தவும் தாழ்த்தவும் வசதியுள்ள பீரங்கி 9 அளவுக்குப் பெரிதாகவும், கனமாகவும் இருக்கும். லாரி, ரெயில், டாங்கி முதலிய ஊர்திகளில் ஏற்றிச் சென்று போரில் பயன் படுத்துவர். தொலைவிலிருந்து பகைவரின் இலக்குகளை இதனைக் கொண்டு குறி தவறு மல் தாக்கலாம். இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட் வர்டு 1327-ல் ஸ்காட்லாந்துடன் நடத் திய போரில் முதன் முதலாக பீரங்கி பயன்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் 1350-ல் பெரிய பீரங்கிகளைச் செய்து, பீரங்கிப்படை ( Artillery ) என்ற தனிப் படையையும் அமைத்தனர். பீரங்கி செய்ய முதலில் இரும்பைப் பயன்படுத்தினர். இரும்புப் பட்டைகளைக் குழாய்போலப் பிணைத்து, அக் குழாய்க்கு இரும்புப் பூண் கட்டி பீரங்கி தயாரித் தனர். இதில் வாய்ப்புறமாக வெடிமருந் இட்டுச் சுட்டனர். பின்புறமாக வெடி மருந்து செலுத்திச் சுடக்கூடிய பீரங்கியும் விரைவில் தயாராகியது. பின்னர், 'பீரங்கி வெண்கலம்' ( Gun metal ) என்ற உலோகக் கலவையில் பீரங்கியை உருவாக்கினர். இதை ஊர்திகளில் பொருத்தி, பீரங்கியை வேண்டிய கோணத்தில் உயர்த்தவும், தாழ்த்தவும், எத்திசையிலும் திருப்பவும் ஏற்றதாகச் செய்தனர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது, விமானத்திலும் ஏற்றிச் செல்லக்கூடிய பளுவில்லாத சிறிய பீரங்கிகள் தயாராயின. அப்போது, சுமார் 15,000 மீட்டர் உயரம் வரையில் குண்டுகளை வீசக்கூடிய விமான எதிர்ப்பு பீரங்கிகளும் (Anti-aircraft cun ) (Anti-aircraft gun ) தயாரிக் கப்பட்டன.