பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை எனதன்புள்ள குழந்தைகளே ! குழந்தைகள் கலைக்களஞ்சியத்தில் இதுவரை ஆறு தொகுதி கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள். இது ஏழாம் தொகுதி. இத்தொகுதியில் உங்களுக்கு மிகவும் விருப்பமான பொம்மைகள், பொம்மலாட்டம் ஆகியவை பற்றிக் கட்டுரைகள் வண்ணப் படங்களுடன் உள்ளன. தமிழர் திருநாளா கிய பொங்கல் விழாவைக் குறித்து ஒரு கட்டுரை இதில் உள்ளது. நாம் வாழும் பூமி, மற்றும் பூகோளம், புவிபியல் இவற்றைக் குறித்தும் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அறிவியலின் ஒரு துறையாகிய பௌதிகம் பற்றி இதில் படிக்கலாம். பொறி யியலுக்கு ஒரு தனிக் கட்டுரை உண்டு. அறிவியல் வளர்ச்சியின் பயனாக எத்தனையோ வகையான கருவிகளையும் எந்திர சாதனங் களையும் இன்று நாம் பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கிய மானவை பற்றிய விவரங்களைப் புத்தமைப்பு என்ற கட்டுரையில் காணலாம். விலங்குகளில் புலாலுண்ணிகள் பற்றிப் பொதுவாகவும் புலி, பூனை பற்றி விரிவாகவும் தெரிந்துகொள்ளலாம். பூச்சிகள் என்னும் கட்டுரையில் பலவகைப் பூச்சிகளின் படங்களைக் காணலாம். இந்தியாவின் தேசீயப் பறவையான மயில், மற்றும் புறா, பெங்குவின், மரங்கொத்தி முதலியன பற்றியும் இத்தொகுதியில் படிக்கலாம். மலர்களைப் பற்றிய விரிவான கட்டுரை, அழகிய படங்களுடன் இடம்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது பொருளா தாரம். பொருளாதார வளர்ச்சியை அறிய உதவுவது புள்ளியியல். இவையிரண்டையும் விளக்கும் கட்டுரைகள் இதில் உள்ளன. மருத்துவம் பற்றிய பொதுக் கட்டுரை ஒன்று இதில் இடம் பெற் றிருப்பதுடன் மருந்து, மயக்க மருந்து, மருத்துவ மனை, பிளேகு, புற்றுநோய், மலேரியா, பெனிசிலின் ஆகிய தலைப்புகளிலும் தனிக் கட்டுரைகள் இருக்கின்றன. பார்வை இழந்தவர்களும் இக் காலத்தில் படிக்க முடியும் எழுதவும் முடியும். இதற்கு உதவும் பிரேல் முறை என்ன என்பது இதில் படங்களுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. போட்டோக் கலையின் பல நுட்பங்களை அந்தத் தலைப்பிலுள்ள கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அறிவியலில் சிறந்து விளங்கிய ஜோசப் பிரீஸ்ட்லி, அலெக்சாண்டர் கிரஹாம் பெல், சர் ஜகதீச சந்திர போஸ், ஹென்ரி போர்டு, நாடாய்வாளராகிய மார்க்கோ போலோ, அரசியல் மேதை பிளேட்டோ, இசை மேதை பேத்தோவன், சமயப் பெரியார்களாகிய புத்தர், மகாவீரர் ஆகியவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இதில் நீங்கள் படிக்கலாம். இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் பற்றிய குறிப்பும் இதில் உள்ளது. பிரீஸ்ட்லி என்னும் கட்டுரையில் தொடங்கி, மலை ஏற்றம் என்ற கட்டுரை முடிய இதில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் வண்ணப் படங்களுடனும் விளக்கப் படங்களுடனும் இடம் பெற்றுள்ளன. உங்கள் அறிவு மேன்மேலும் வளர இத்தொகுதியும் உறுதுணையாக இருக்குமென நம்புகிறேன். பல்கலைக்கழகக் கட்டடம் சென்னை 600 005 20-2-1974 தி.சு.அவினாசிலிங்கம் தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம்