பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரணிகள் - பெரிஸ்கோப் நிழலும் ஈரமும் உள்ள காடுகளிலும், நீரோடைகளின் கரைகளிலும் மலைப்பகுதி களிலும் பெரணிகள் செழித்து வளர்கின் றன. குளிர்ப் பிரதேசங்களில் ஆர்க்டிக் வட்டம் வரையிலும் பெரணிகள் காணப் படுகின்றன. எனினும் வெப்ப மண்டலத் திலேயே இவை அதிகமாகக் காணப்படு கின்றன. பெரணிகளுக்கு விதை கிடையாது. இவற்றின் இலைகளுக்கு அடியில் உன்ன உறைகளில் ‘விதைத் தூள்கள் (Spores) இருக்கும். சில பெரணிகளின் தண்டுகளி லும் விதைத்தூள் உறைகள் உண்டு. இவ்விதைத்தூள் மிக நுண்மையானது. விதைத்தூள் உறை முற்றியதும் வெடித்துத் தூள் சிதறும். காற்றில் இத்தூள் பறந்து சென்று ஈரத்தரையில் விழும்பொழுது அங்கு முளைத்து வளரும். பூக்கும் தாவரங்களைப் போலவே, பெரணிகளுக்கும் வேர், தண்டு, இலைகள் உண்டு. தண்டு பெரும்பாலும் தரைக்கு அடியிலேயே இருக்கும். தண்டிலுள்ள முட்டுகளிலிருந்து (கணுக்கள்) இலைகள் உண்டாகி மேல்நோக்கி வளரும். இலை களின் நுனியில் உள்ள தனிர் வில்போல் சுருண்டிருக்கும். இலை வளர வளர சுருள் விரிந்துவிடும். சில பெரணிகளில் 10,000 இனங்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை தனிச் செடிகளாக வளர்கின்றன. இனங்கள் மரக்கிளைகளையும், மரத்தூர் யும் பற்றிக்கொண்டு தொற்றுத் தாவரங் களாக (த.க.) வாழ்கின்றன. இவை தம் உணவை ஒளிச்சேர்க்கை (த.க.) மூலம் தாமாகத் தயாரித்துக் கொள்ளும் பெரும்பாலான பெரணிகள் இரண்டு சென்டிமீட்டருக்குமேல் வளர்வதில்லை. எனினும், ஜப்பான், நியூஜீலாந்து ஆகிய நாடுகளில் 25 மீட்டர் உயரம் வரை வளரும் மரப் பெரணிகளும் உண்டு. பெரணிகளின் இலைகள் அழகிய அமைப் புடையவை. அழகுக்காக இவற்றைத் தோட்டங்களில் வளர்க்கிறார்கள். சில பெரணிகளைக் கொண்டு மருந்துகள் செய்கிறார்கள். சில பெரணிகளின் வேர் களை ஆதிக்குடிகள் சிலர் உணவாகக் கொள்கின்றனர். கூரை வேயவும் பெரணி இலைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். பூமியில் முதன் முதலில் தோன்றிய தாவரங்களில் பெரணியும் ஒன்று. சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலக்கரிக் காலத்தில் உலகில் பெரணிகள் மிகுதியாக இருந்தன. இவற்றின் பாசில்கள் (த.க.) நிலக்கரிப் படிவங்களிலும், அடுக்குப் பாறைகளிலும் காணப்படுகின்றன போர்க் கப்பல் 41 பெரிஸ்கோப் நீர்முழ்கிக் சப்பல்' போர்க் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கு அடியிலிருந்தே பெரிஸ்கோப்பின் உதவியால் பார்க்க முடியும் பெரிஸ்கோப் (Periscope) : நீர்மூழ்கிக் கப்பல் (த.சு.) நீருக்கு அடியில் செல்ல வேண்டும். அப்போது நீரின் மேல்மட்டத் தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? மேலும், எதிரி யின் கப்பல் எங்கு இருக்கிறது என்பதை யும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற் குப் பெரிஸ்கோப் என்னும் கருவி உதவு கிறது. போர்க் காலங்களில் வீரர்கள் குழி களில் பதுங்கி இருப்பார்கள். அப்போது எதிரிகளின் அணிவகுப்பை அத்தகைய மறைவான இடங்களிலிருந்தே பார்க்க இந்தக் கருவி உதவுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது டாங்கிகளிலும் இக்கருவி பொருத்தப்பட்டிருந்தது. பெரிஸ்கோப் ஒரு நீண்ட குழல் வடிவில் இருக்கும். இதன் மேல்முனையிலும் கீழ் முனையிலும் சமதள ஆடிகள் உள்ளன. இவை 45* கோணத்தில் படத்தில் காட்டி யிருப்பதுபோல் சாய்வாக இருக்கும். இலை இரண்டும் இணையாக ஒன்றை யொன்று பார்ப்பதுபோலப் பொருத்தப் பட்டிருக்கும். ஆடி பெரிஸ்கோப்பின் அமைப்பு (A ஆடி