பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெருச்சாளிகள் கள். மண்புழு, பூச்சிகள் முதலிய வற்றையும் உண்ணும். சில சமயங்களில் கோழிக் குஞ்சுகளையும் இது கடித்துத் நின்றுவிடும். இது சுவரடியில் வளை தோண்டுவதாஸ் வீட்டுச் சுவர்களுக்கும் தளவரிசைக்கும் கேடு உண்டாகும். காய் கறித் தோட்டங்களுக்கும் இது சேதம் லிாைலிக்கும்; ஆகவே பெருச்சாளிகளை நஞ்சிட்டும். வளைகளில் ஒழிப்பார்கள். புகையடித்தும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் பெருச் சாளி ஒரு பெரிய முயலின் அளவு இருக் கும். இதன் காதுகளும் முகமும் நீண்டிருக் கும். பின்கால்கள் நீளமானவை. காங்கரு போன்று இது தன் வயிற்றிலுள்ள பையொன்றில் குட்டியைச் சுமந்து செல் லும். இதன் மயிர் மெத்தென்றிருக்கும். பெல், அலெக்சாண்டர் கிரஹாம். (Alexander Graham Bell, 1847-1922): தொலைவிலுள்ள ஒருவருடன் பேசுவதற்கு இன்றுநாம் தொன்பேசியைப் பயன்படுத்து கிறோம். இதை, அலெக்சாண்டர் கிரஹாம். பெல் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். ற இவர் ஸ்காட்லாந்தில் 1847ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை செவீடு-களமைக் குழந்தைகளுக்குப் பேசக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருந்தார். முதலில் இவர் தம் வீட்டிலேயே கல்வி கற்றுப் பிறகு பத்தாவது வயதில் பள்ளி யில் சேர்ந்தார். பதினைந்தாவது வயதில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ஓராண் டும். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத் தில் ஓராண்டும் படித்தார். 1870-ல் பெல் குடும்பத்தார் கானடாவில் குடியேறினர். 1871-ல் பெல் 43 பாஸ்ட்டன் (Boston) நகரில் செவிடர் பள்ளியில் பெல் ஆசிரியரானார், பிறகு பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியாற்றினார். விஞ்ஞாளத் தில் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. ஆகவே இரவு நேரங்களில் ஆராய்ச்சிகள் பல நடத்தி வந்தார். வீணையில் ஒரு தந்தியை மீட்டினால் அது அதிர்த்து ஒளி உண்டாகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த அதிர்வுகள் ஒலி அலைகளாகச் சென்று நம் காதில் விழுகின்றன. அப்பொழுது ஒலியைக் கேட் கிறோம். இதேபோன்று ஒருவர் பேசினால் காற்றில் ஒலி அலைகள் பரவுகின்றன. பேச் சின்மூலம் எழும் ஒலி அலைகளை மின்சக்தி யாக மாற்ற முடியும். இந்த மின்சக்தி யைக் கம்பிகளின்மூலம் நெடுந்தொலைவு செலுத்தலாம். அங்கு இந்த மின்சக்தியை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றலாம். இந்த அடிப்படையில் பெல் ஆராய்ச்சி நடத்தினர். இவருக்குத் தாமஸ் வாட்ஸன் (Thomas Watson) என்பவர் உதவியாள் ராகப் பணியாற்றினார். 1874ஆம் ஆண்டில் ஒரு நாள் பெல் ஓர் அறையில் இருந்து, மற்றோர் அறையில் வாட்ஸன் உண்டாக்கிய ஓர் ஒலி யைப் பரிசோதனைக் கருவியில் கேட்டார். வாட்ஸன் உண்டாக்கிய ஒலி எவ்வாறு கடத்தப்பட்டது என்று பெல்லுக்கு விளங் கியது. மறுநாளே தொன்பேசிக் கருவி அமைக்கப்பட்டது. தொலைபேசியின் வரலாற்றில் எடிசன் (த.க.) உள்பட வேறு சில விஞ்ஞானிகளும் இடம் பெறுகின்றனர். இவர்களும் தொலை அலெக்சாண்டர் கிரஹாம் பெல்