பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெனிசிலின் - பேத்தோவன் பெனிசிலின் மருந்து 'பெனிசீலியம்' என்னும் காளானிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இக் காளான்களைப் படத்தில் காணலாம்.' நீலம் கலந்த பச்சை நிறமான காளான் (த.க.) படிந்திருப்பதைக் கண்டார். அதைச் சுற்றிலும் பாக்ட்டீரியங்கள் அழிக் கப்பட்டிருந்தன. சாதாரணமாக இவ்வாறு மாசு படிந்த தட்டுகளை அகற்றி எறிந்து விடுவதுதான் வழக்கம். ஆனல் இது அவருடைய கவனத்தை ஈர்த்தது. தட்டில் படித்திருந்த அப்பொருளே கிருமிகளின் அழிவுக்குக் காரணம் என அவர் உணர்ந் தார். அது 'பெனிசீலியம்” என்ற ஒரு காளான் என்பதும் பின்னர் தெரிய வந்தது. இக் காளானைப் பிரித்தெடுத்து அவர் மேலும் ஆராய்ந்தார். இக் காளான் சுரக் கும் சுரப்புப் பொருளே சிலவகை பாக்ட் ரியங்கள் அல்லது கிருமிகளின் வளர்ச்சி யைத் தடைசெய்து அவற்றை அழிக்கும் சக்தி பெற்றிருந்தது. இத் திரவ சுரப்புப் பொருளுக்கு 'பெனிசிலின்' என்று அவர் பெயரிட்டார். கிருமிகளை அழித்தாலும் உயிரணுக்களுக்குப் பெனிசிலின் எள்ளிதத் தீங்கும் உண்டுபண்ணவில்லை. சில மருந்து களைப் போன்று இதற்கு தச்சுத்தன்மை மில்லை. முதன்முதலாகக் கிடைத்த பெனிசிலின் தூய்மையானதாக இல்லை. எனவே இதைத் தூய்மையாக்க வேண்டும் என்று பிளெமிங் கருதினர். 1939-ல் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹோவார்டு புளோரி (Howard Florey), எர்னெஸ்ட் செயின் (Ernest Chain) ஆகியோரின் ஒத்துழைப்புடன் 45 தாய்மையான பெனிசிலின் உற்பத்தி பெருமளவில் தொடங்கப்பெற்றது. இரண் டாம் உலக யுத்தத்தின்போது இது பலருடைய உயிரைக் காப்பாற்றியது. தொடக்கத்தில் பெனிசிலின் விலையுயர்ந்த மருந்தாக இருந்தது. இப்பொழுது மலி வானதாகி விட்டது. பெனிசிலினைப் பொடியாகத் தயாரித்து புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள். இப் பொடியைக் கிருமி நீக்கிய தூய நீரில் சுன்ரத்து ஊசி மருந்தாகப் பயன்படுத் தலாம். மாத்திரையாகவும், களிம்பாகவும் இது தயாரிக்கப்படுகிறது. பெனிசிலின் போன்று மற்றும் பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை ஆன்டி பயோட்டிக் மருந்துகள் (Antibiotics) எனப் படும். பெனிசிலினைக் கண்டுபிடித்ததற்காக வும், அதைப் பயன்படுமாறு செய்தமைக் காகவும் பிளெமிங், புனோரி, செயின் ஆகிய மூவருக்கும் 1945-ல் மருத்துவத் துறைக்கான நோபெல் பரிசு (த.க.) பகிர்ந் தனிக்கப்பட்டது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் புனாவுக்கு அருகிலுள்ள அருகிலுள்ள பிம்ப்ரி (Pimpri) மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பெனிசிலின் தயாரிக்கப்படுகிறது. பேத்தோவன் (Beethoven, 1770-1827): உலகப்புகழ்பெற்ற இசை மேதைகளுள் ஒருவர் பேத்தோவன். இவர் மேனுட்டு இசைவளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் சுனில் முதன்மையானவர், ஜெர்மனியில் பான் LIT GOT (Bonn) நகரில் பேத்தோவன் பிறந்தார், சிறு வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். நான்காம் வயதில் தம் தந்தையிடம் வயலினும் பியானோவும் கற்றார்; 11ஆம் வயதிலேயே இசைப்பாடல்கள் இயற்றத் தொடங்கினார்; 14.ஆம் வயதில் பான் நகரப் பிரபுவின் அவையில் உதவி இசைப் புலவரானார்.1787-ல் வியன்னா நகருக்குச் சென்றார். அங்கு உலகப் புகழ்பெற்ற இசை மேதையாகிய மோசார்ட் (Mozart) என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட் டது. இசைக்கருவிகளை இசைத்து அவருடைய பாராட்டுதலைப் பெற்னர். அவரிடம் சில இசைப் பாடங்களையும் கற்றூர். பேத்தோவனுடைய தந்தை குடும்பத் தைக் கவனியாமல் பொறுப்பற்றவராய் இருந்தார். அதனால் தாய் இறந்ததும் இவர் தம் 18ஆம் வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றர் இசை சுற்றுச் கொடுத்துப் பொருளீட்டி அதன் மூலம்