பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போரியல் 1903-ல் ஒரு மோட்டார் நிறுவனத் தைத் தொடங்கினர். அப்போது மோட் டார் காரின் விலை அதிகமாக இருந்தது. அதைக் குறைக்க விரும்பிய போர்டு, உற்பத்தி முறையை மாற்றினார். அதாவது, காரின் ஒவ்வொரு பாகத்தை யும் பெருமளவில் தயாரித்துக்கொண்டு. பிறகு ஒவ்வொன்றையும் இணைத்துக் கார்களை உருவாக்கினார். இம்முறையில் கார்களைப் பெருமளவிலும் விரைவாகவும் தயாரிக்க முடிந்தது; விலையும் குறைந்தது- சில ஆண்டுகளுக்குள்ளேயே போர்டு ஏராளமான கார்களைச் செய்து பெருஞ் செல்வரானார். போர்டு அன்பு மிகுந்தவர். தம் நிறுவனத்தின் இலாபத்தில் தொழிலாளர் களுக்கும் பங்கு வழங்கி ஊக்குளித்தார். ஏழைக் குழந்தைகளுக்கென டிட்ராயிட் நகரில் ஒரு தொழிற்பள்ளியைத் தொடங் கினார். 1947-ல் போர்டு காலமானார். இவருடைய பெருஞ்செல்வத்தைக் கொண்டு 1950-ல் 'போர்டு நிறுவனம்' என்ற அற நிறுவனம் அமைக்கப்பட்டது. இது உலக அமைதிக்காகவும் கல்வி, மருத் துவம், தொழில் முதலிய துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் பொருள் வழங்கி வருகிறது. கத்தி போரியல் (Military Science) : பண்டைக் காலத்தில் போர் நடந்தபோது வீரர்கள் வாள், வில், ஈட்டி இவத் றைப் பயன்படுத்தி நேருக்கு நேர் நின்று போரிட்டார்கள். இன்னுள்ள போர் முறை யில் படைவீரர்கள் பகைவர்களை நெருங் காமல் பெரும்பாலும் நெடுந் தொலைவி லிருந்துகொண்டே பீரங்கி, துப்பாக்கி இவற்றால் சுட்டும், ராக்கெட், குண்டு முதலியவற்றை வீசியும் போரிடுகிறார்கள். இக்காலத்தில் விமானங்களின் உதவியால் வானத்திலும் போர் நடக்கிறது. இவ்விதம் போர் முறைகளும், போருக்குப் பயன்படும் ஆயுதங்களும், பிற சாதனங் களும் காலப்போக்கில் மாறி வந்துள்ளன. புதிய போர்த் தந்திரங்களையும், படைக் கலங்களையும் போரிடும் முறைகளையும் உருவாக்குவதற்கு நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிக்குப் போகியல் என்று பெயர் எந்திர நுட்பங்களைப் போருக்குப் பயன் படுத்தலாம். என்பதை முதன்முதலில் கண்டவர் ஆர்க்கிமிடீஸ் (த.க.) என்ற இத்தாலியளிஞ்ஞானி. அவர் சுவண்பொறி முதலிய போர்ப்பொறிகளை அமைத்தார். கி.மு. 3ஆம் நூற்றுண்டில் சைரக்யூஸ் நகரை ரோமானியர் முற்றுகையிட்ட போது, ஆர்க்கிமிடிஸ் சூரியனின் ஒளியை ஒருமுகப்படுத்தக்கூடிய ஒருவித ஒளி 63 அமைப்பைக் கையாண்டு ரோமானியக் கடற்படை முழுவதையும் எரித்துவிட் டார். கி.பி. 1500ஆம் ஆண்டு அளவில் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், போரியல் முறையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. பலவகைப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் மத்தியிலும் இரண்டு உலக யுத்தங் கள் நடந்தன. அப்போது பல புதிய போரியல் முறைகளும், எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தானியங்கி எத் திரத் துப்பாக்கி, எறிகுண்டு, பீரங்கி, விமான எதிர்ப்பு பீரங்கி, டாங்கி, நாடி காரிக் கப்பல், போர்விமானம், நீர்மூழ்கிக் கப்பல் முதலியவை முதல் உலக யுத்தத் தின்போது (1914-'18) கோன்றின. இரண்டாம் உலக யுத்தத்தின்போது (1939-45), இந்தப் போர்க் கருவிகள் மேலும்வளர்ச்சியடைந்து, ஏவுகணைகளும், ராடார் முதலிய சாதனங்களும், கம்பியில் லாத் தந்தி முதலிய செய்தித் தொடர்பு சாதனங்களும் பயனுக்கு வந்தன. யாவரும் அஞ்சும்படியான அணுகுண்டும். தயாரிக்கப்பட்டது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெரும் நகரங்களை இரண்டே அணுகுண்டு கனால் அமெரிக்கா அழித்தது. அதை விடம் பயங்கரமான நீர்வாயுக் குண்டு களும், கண்டம் விட்டுக் கண்டம் செல் லும் ஏவுகணைகளும் இக்காலத்தில் தயாரிக் கப்படுகின்றன. இரு நச்சுவாயு, தீ, புகை முதலியவற்றை உண்டாக்கும் ரசாயனப் பொருள்களையும் போரில் பயன்படுத்துகிறார்கள். இது ரசாயனப் போர் முறை (Chemical Warfare) எனப்படும். நச்சுவாயுக்களை விமானத் திலிருந்து தெளித்தும், தீக்குண்டுகளை வீசியும் எதிரிகள் மீது தாக்குவர். நச்சு வாயுளினால் வீரர்கள் மூச்சுத் திணறி இறப் பார்கள். தீக்குண்டுகள் விழும் இடங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும். அடர்த்தி யாகப் புகையை எழுப்பிக் கப்பல்களை யும், விமான நிலையங்களையும் பகைவர் களின் கண்ணில் படாமல் மறைத்து விடுவார்கள். இதற்குப் புகைத்திரை (த.க.) என்று பெயர். ரசாயனப் போர் முறையினால் பொதுமக்களும் பெருந் தொல்லைக்குள்ளானார்கள். எனவே, இக் கொடிய போர்முறையைக் கையாள்வ தில்லை என ஐக்கிய நாடுகள் சபை (த.க.) சார்பில் நடந்த ஒரு மாநாட்டில் எல்லா உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டன. எனினும், சமயங்களில் இன்றும் சில" இப்போர் முறையைச் சில நாடுகள் பயன் படுத்தி வருகின்றன.