பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகாராஷ்டிரம் - மகாவீரர் தருமத்தின் அழிவின்மையையும் விளக்கு கிறார் வியாசர். வ பெருங்காப்பியத்திற்குரிய எல்லாச் சுவைகளையும் உடையது மகாபாரதம். இதில் நல்லறிவூட்டும் பகுதிகள் நிறைந் திருக்கின்றன. அதனால் இதலை 'ஐந்தா பது வேதம்' என்று இந்துக்கள் போற்று கின்றனர். இந்திய மொழிகனிலும், உலக மொழிகள் பலவற்றிலும் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெருந்தேவனார், வில்லிபுத்தூரார், நல்லாப்பிள்ளை ஆகியோர் மகாபாரதத் தைத் தழுவி நூல்கள் இவற்றியுள்ளனர். மகாராஷ்டிரம்: இந்தியாவின் மாநி லங்களுள் ஒன்று மகாராஷ்டிரம். இதற்கு வடமேற்கில் குஜராத் மாநிலமும், வடக்கிலும் கிழக்கிலும் மத்தியப் பிரதோ மும், தெற்கில் ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்களும், மேற்கில் அரபிக் கடலும் உள்ளன. இம்மாநிலத்தின் பரப்பு 3,07,360 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 5,02,95,000 (1971). மகாராஷ்டிர மாநிலத்தில் மாநிலத்தில் பேசப்படும் மொழி மராத்தி, இம் மாநிலத்தின் கிழக்குப் பகுதி பரத்த பீடபூமி. மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சிமலை உள்ளது. கடலுக்கும் மலைத்தொடருக்குமிடையே உள்ள குறுகிய பகுதி மிகச் செழிப்பான சமவெளி யாகும். இதற்குக் கொங்கணம் என்று பெயர். கொங்கணத்தில் கொங்கண மொழி பேசுகின்றனர். மகாராஷ்டிர மச்ச ளில் பெரும்பாலோர் உழவர்கள். மேற்குத் தொடர்ச்சிமலையில் கோதாவரி, கிருஷ்ணா முதலிய ஆறுகள் தோன்றிக் கிழக்கு நோக் கிப் பாய்கின்றன. ஆற்றுச் சமவெளிகளில் நெல்லும் பிற உணவு தானியங்களும் பயிரிடப்படுகின்றன. பருத்தி. வேர்க் கடலை, எண்ணெய் வித்துகள், கரும்பு ஆகியவை இம்மாநிலத்தில் மிகுதியாக விளைகின்றன. மாங்கனீஸ், இரும்பு, பாக் சைட், நிலக்கரி, கண்ணாம்புக்கல் முதலிய தாதுப்பொருள்கள் இங்கு கிடைக்கின்றன, இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந் துள்ள மாநிலங்களுள் மகாராஷ்டிரமும் ஒன்று. பருத்தி மிருதியாக விளைவதால் இங்குப் பஞ்சாலைகள் அதிகம். மோட்டார் கார், சைக்கிள், எந்திரங்கள், ரசாயனப் பொருள்கள், சர்க்கரை, தாவர எண்ணெய், காகிதம், சோப்பு முதலியன தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் பல இங்கு உள்ளன. மீன்பிடிக்கும் துறைகள் பல கடலோரத்தில் உள்ளன. இம்மாநிலத்தின் தலைநகர் பம்பாய் (த.க.). இது ஒரு சிறந்த இயற்கைத் 73 துறைமுகம். வெளிநாட்டு வாணிகத்திற்கு மையமாக இந்தகச் விளங்குகிறது. அதனால் இதனை 'இந்தியாவின் வாயில்' (Gateway of India) என்பர். தொழில்களும் வாணிகமும் இங்கு சிறந்து விளங்குகின் றன. புனா, நாகபுரி, அகமத்நகர், நாசிக் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். அஜந்தா, எல்லோரா ஆகிய இடங் களில் பாறைகளைக் குடைந்து கோயில்கள் அமைத்துள்ளனர். இவற்றினுள் உள்ள சிற்பங்களும் ஓளியங்களும் உலகப்புகழ் பெற்றவை. பம்பாய்த் துறைமுகத்திற்கு அப்பால் எலிபான்டா என்னும் தீவிலும் இத்தகைய குகைக் கோயில்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்குமுள் உருவாக்கப் பட்ட இச் சிற்பங்கள் இந்தியர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகளும் இம்மாநிலத்தில் பல இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் 1960-ல் உருவாக்கப்பட்டது. அதற்குமுன் இதுவும் குஜராத் மாநிலமும் இணைந்திருந்தன. அப்போது அதற்கு பம்பாய் மாஜிலம் என்று பெயர். மகாராஷ்டிர மாநிலத்தின் படத்தை முதல் தொகுதியின் 84ஆம் பக்கத்தில் உள்ள இந்தியா தேசப்படத் தில் காணலாம். மகாவீரர் (கி.மு. 599-கி.மு.527): இந்தியாவில் வழங்கிவரும் மிகப் பழைய மதங்களுள் சமண மதம் (த.க.) ஒன்று. இதை இந்தியாவெங்கும் பரப்பிய பெரியார் மகாவீரர். மகாவீரருடைய இயற்பெயர் வர்த்த மானர். இன்று பீகார் என வழங்கும் மகாவீரர்