பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 பிரேல் முறை இந்நாட்டில் அதிகம். 30.000 வகை வண்ணத்துப்பூச்சிகள் இங்கு உள்ளன வாம்! ஆமெசான் ஆற்றில் மட்டும் 2,000 வகை மீன்கள் வாழ்கின்றன. காப்பி, பருத்தி, கரும்பு, புகையிலை முதலியன இந்நாட்டில் மிகுதியாகப் பயிராகின்றன. உலகிலேயே இங்குதான் காப்பி விளைச்சல் அதிகம். கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இந் நாட்டில் கனிவளமும் மிகுதியாக உள்ளது. உலகில் இங்குதான் இரும்புத் அதிகம். தங்கம், வெள்ளி, பிளாட்டினம் முதலிய உலோகங்களும் வைரமும் இங்கு பெருமளவில் கிடைக்கின்றன. தாது சிவப்பு இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடி மக்கள். இங்கு முதலில் குடியேறியவர்கள் போர்ச்சுகேசியர். 1825 வரை இது போர்ச்சுகேசியரின் குடியேற்ற நாடாக இருந்தது. பிறகு சுதந் தரம் பெற்றது. போர்ச்சுகேசிய மொழியே இன்றும் வழங்குகிறது. சிவப்பு இந்தியர் களும் போர்ச்சுகேசியரும் ஒன்றாகக் கலந்து வாழ்கின்றனர். இந்நாட்டின் புதுத் தலை நகரம் பிரேசிலியா. இது 1960-ல் அமைக் கப்பட்டது. அதற்கு முன்பு தலைநகரமாக இருந்தது ரியோ ட ஜனேரோ, பிரேல் முறை ( Braille System ) : கண் பார்வை இழந்தவர்களால் படிக்க இயலாது. எனவே, அவர்கள் படிப்பதற்கு ஏற்றவாறு பலவகை எழுத்து முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகச் சிறந்தது பிரேல் முறை ஆகும். இம் முறை யைக் கண்டுபிடித்தவர் லூயி பீரேல் (Louis Braille) என்னும் பிரெஞ்சுக்காரர். கல்வி பிரேல் தம் மூன்றாம் வயதில் குருட ரானார். பாரிஸிலுள்ள பாரிஸிலுள்ள குருடர் நிலையத்தில் கல்வி சுற்று. அங்கேயே ஆசிரியரானார். அந்நிலையத்தில், சார்லஸ் பார்பியர் (Charles Barbier) என்பவர் கண்டுபிடித்த முறையின்படிக் குருடர் களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர். அந்த முறையில் பல குறைகள் இருந்தன. பிரேல் அக்குறைகளை நீக்கித் திருத்தியமைத்தார். அவர் பெயராலேயே புதிய முறைக்குப் குமிழ்கள்மீது கைவிரல்களால் தடவிப் படிக்கும் பிரேல் முறை பெயரும் ஏற்பட்டது. இப்போது எல்லா நாடுகளிலும் பிரேல் முறையையே பின் பற்றுகிறார்கள். குருடர்களால் பார்க்க இயலாவிட்டா லும் கைவிரல்களால் தடவி மேடுபள்ளங் களை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? எனவே குருடர்கள் காகிதத்தில் கையால் தடவிப் படிக்கும்படி எழுத்துகள் அமைக் சுப்பட்டிருக்கின்றன. அதற்காகக் காகிதத் தில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு குமிழ்களை அமைக்கின்றனர். இக் குமிழ்களைப் பலவிதமாக அமைத்துக் கையால் தடவி எழுத்துகளைக் கற்றுக் கொள்ளலாம். இம்முறையைக் கொண்டு குருடர்கள் படிக்கவும், எழுதவும், கணக்கு கள் போடவும் கற்றுக்கொள்கிறார்கள். பிரேல் முறையில் புத்தகங்களைத் தயாரிப் பதற்குரிய தட்டெழுத்துப் பொறிகளும் (Typewriters), அச்சு எந்திரங்களும் உள்ளன. இவற்றின் உதவியால் இன்று குருடர்களுக் கென நூல்களும், நாளிதழ்களும், பத்திரிகைளும் வெளியிடப்படுகின்றன. .: A E J K MRTY பிரேல் குமிழ்கள் பிரேல் முறையில் சில எழுத்துகள் பெரிதாக்கிக் காட்டப்பட்டுள்ளன