பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மணல்- மணிகள் மண்புழு உணரும் ஆற்றல் இதற்கு உண்டு. இதற் குக் கால்களும் இல்லை. உடலின் அடிப் புறத்திலுள்ள சிறு சுனைகளின் உதவியால் இது ஊர்ந்து செல்கிறது. மண்புழு நிலத்தைக் குடைவதால் மண்ணுக்குள்ளே காற்றோட்டம் இருப் பதற்கும், தண்ணீர் செல்வதற்கும் வழியேற்படுகிறது. இதன்மூலம் தாவரங் களின் வேர்கள் எளிதாக நிலத்தினுள் இறங்கும். மண்புழு விழுங்கி வெளியேற் றிய மண் சத்து நிறைந்ததாக இருக்கும். இவ்வாறு பயிர்களுக்கு உதவிசெய்வதால் மண்புழுவை 'உழவனின் நண்பன்' என்று சொல்வர். மணல்: ஆற்றங்கரையிலும்,கடற் கரையிலும் மணல் பரவியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாலைவனத்தில் மிகப் பெரிய பரப்பளவுக்கு மணலைத்தான் காண முடியும். பூமி தோன்றிய காலத்தில் மணலே இல்லை. எங்கும் பாறைகளே இருந்தன. காலப்போக்கில் சூரிய வெப்பம், மழை. காற்று ஆகியவற்றால் பாறைகள் உடைந் தன. அவை மேலும் சிறிய கற்களாகிப் பிறகு மணல் உண்டாயிற்று. மழை, வெள் ளம், தட்பவெப்பம் முதலியவற்றால் பாறைகள் சிதைந்து வெகு தொலைவு அடித்துச் செல்லப்பட்டன. இவை சிறிய துகள்களாகி மணல் ஆங்காங்கே பரவிற்று. பெரும்பாலும் மணல் படிகக் கல்லால் ஆனது. சிறிதளவு தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களும் இதில்கலந்திருப்ப துண்டு. மணல் பல வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. கண்ணடிப் பொருள்கள் பலவற்றை இன்று நாம் பயன்படுத்து கிறோம். இந்தக் கண்ணாடி. மணலிலிருந்து 77 தான் செய்யப்படுகிறது. கட்டடங்கள் கட்டப் பயன்படும் சாந்து, கான்கிரீட் ஆகியவை தயாரிக்கவும் மணல் தேவை. குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீரை வடி கட்டிச் சுத்தம் செய்ய மணல் இடப்படு கிறது. தேய்ப்புக் காகிதம் (உப்புத்தாள்) செய்யவும் மணல் உதவுகிறது. சில இடங்களில் மணலில் அரிய தாதுப் பொருள்கள் கலந்திருப்பதுண்டு. கன்னியா குமரியிலும், கேரளத்தின் கேரளத்தின் கடற்கரையி லும் மானசைட்டு மணல் கிடைக்கி கிறது. இதிலிருந்து அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படும் தோரியத்தைப் பிரித்து எடுக் கிறர்கள். LD 600fl&6T (Gem stones): வைரம், கெம்பு, பச்சை, நீலம், மரகதம் முதலிய வற்றை மணிகள் என்று சொல்கிறோம். இவை அழகானவை; நெடுங்காலம் நீடித் திருப்பவை; இடைப்பதற்கு மிக அருமை யானவை. எனவே இவை விலை மதிப்பு மிக்கவை. அதனால் இவற்றை இவற்றை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். மிகப் பழங்காலம் முதல் பலவகை மணிகளை மக்கள் பயன்படுத்தி வந்துள்ள னர். 5,000 ஆண்டுகளுக்கு முற்பட் டவை எனக் கருதப்படும் மொகஞ்ச தாரோ, ஹரப்பா என்ற இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள அணிகலன் களுள் பல சரங்களையுடைய மணிமாலைகள் இருந்தன. மணிகளைப் பற்றித் தமிழ் நூல் களும், மகாபாரதமும், இராமாயணமும் கூறுகின்றன. அக்காலத்து அரசர்களும், குடிமக்களும் மணிகளையும் முத்துகளையும் அணிந்திருந்தனர். அவை பிற நாடுகளுக் ரும் அனுப்பப்பட்டன. பழங்கால மக்கள் சிலவகை மணிகளை நாணயங்களாகவும் பயன்படுத்தினார். மணிகள் சில ரசாயனக் கூட்டுப் பொருள்களின் படிகங்களே என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மணிகளில் மிகவும் ஒளிபொருந்தியதாக விளங்குவது வைரம். இது கரியின் படிகமே வாகும். மரகதம் என்பது அலுமினி யமும், பெரிலியமும் அடங்கிய கூட்டுப் பொருளில் ஒரு வகை. கெம்பும், நீலமும் அலுமினியம் ஆக்சைடு என்னும்பொருளின் படிகங்கள். மணிகளின் ரசாயன அமைப் பைக் கண்டறிந்தபின், அவற்றை ஆய்வுக் கூடங்களிலேயே தயாரித்துன்னார்கள். இவற்றைச் செயற்கை மணிகள் அல்லது போலி மணிகள் என்பர். இவை இயற்கை யாகக் கிடைக்கும் மணிகளைப்போல் அவ் வளவு மதிப்புடையன அல்ல. மிகத் தொன்மையான பாறைகளில் இம்மணிகள் பலவாகவோ தனியாகவோ