பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 மணிச்சட்டம் -மணிப்புரி நடனம் கலந்திருக்கும். இப்பாறைகள் நாளடை வில் மழையாலும், ஆறுகளாலும், பனி வாலும் உடைந்து சிதறும்போது அவற் றில் இம்மணிகள் காணப்படும். இந்தியா விலும், பிரேசிலிலும், தென் ஆப்பிரிக்கா விலும் இவை அவ்வாறு கிடைக்கின் றன. தென் ஆப்பிரிக்காவில் வைரச் சுரங் கங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மணிகள் ஓரம் தேய்ந்து,ஒளி இழந்து, உருண்டையான கூழாங்கற்களைப்போல் காணப்படும். இவற்றைப் பட்டை தீட்டினால் ஒளியுடன் விளங்கும். இவ்வாறு பட்டை தீட்டிய மணிகளைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்கின்றனர். துணிகளிலும், துணிகளிலும், பைகளி அம் மணிகளைக் கொண்டு அலங்கார வேலைகளும் செய்கிறார்கள். மணிச்சட்டம் (Abus) : கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகரைச் செய்வ தற்குப் பயன்படும் ஓர் எளிய கருவி மணிச்சட்டம். மணிச்சட்டத்தின் அமைப்பைப் படத் தில் காணலாம். இதில் 'வானம்' என்னும் பகுதியிலுள்ள ஒவ்வொரு மணியும் '5'ஐக் குறிக்கும்; 'நிலம்' என்னும் பகுதியிலுள்ள ஒவ்வொரு மணியும் '1'ஐக் குறிக்கும். எல்லா மணிகளும் குறுக்குச் சட்டத்தைத் தொடாமல் விளிம்புகளை நெருங்கி இருப் பது பூச்சியத்தைக் குறிக்கும். குறுக்குச் சட்டத்தை ஊடுருவி மேலிருந்து கீழாக உள்ள கம்பிகள் சம இடைவெளியில் அமைந்திருக்கும். இக்கம்பிகள் ஒவ்வொன் றும் வலமிருந்து இடமாக ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என எண்களின் ஸ்தானங் களைக் குறிக்கின்றன. மணிச்சட்டத்தில் 357 என்ற எண்ணைக் குறிக்கவேண்டுமென்று வைத்துக்கொள் வோம். ஒன்றாவது ஸ்தானக் கம்பியின் வானத்திலுள்ள ஒரு மணியையும், நிலத் நிலுள்ள இரண்டு மணிகளையும் குறுக்குச் சட்டத்திற்குத் தள்ளினால் 5+27 ஆகி றது. பத்தாம் ஸ்தானத்துக் கம்பியின் வானத்திலுள்ள ஒரு மணியைச் சட்டத் திற்கு நகர்த்தினால் 5×10-50 ஆகிறது. நூறாவது ஸ்தானக் கம்பியின் நிலத்தி லுள்ள மூன்று மணிகளைச் சட்டத்திற்கு நகர்த்த 3×100-300 ஆகிறது. ஆக 7+50+300= 357. படத்தில் காட்டப் பட்டுள்ள உருவ அமைப்பு 357 என்ற எண்ணைக் காட்டுகிறது. நன்கு பழகிவிட்டால் மணிச்சட்டத்தில் மிக விரைவில் கணக்கிடலாம். மிகப் பழங் காலத்திலிருந்தே இக்கருவி பயன்பட்டு வருகிறது. 863). ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளில் பள்ளிகளிலும் கடை 10000 1000 100 10 888 குறுக்குச் சட்டம் மணிச்சட்டம் வானம் நிலம் களிலும் இன்றும் இதைப் பயன்படுத்தி வருகிறர்கள். மணிப்புரி (Manipur): கிழக்கு இந்தியா வில் ஆசாம் மாநிலத்திற்கும் பர்மா நாட் டிற்கும் இடையிலுள்ள மாநிலம் மணிப் புரி. இதன் பரப்பு சுமார் 22,350 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 10.69,555 (1971). இதன் தலைநகரம் இம்ப்பால் (Imphal). மணிப்புரியில் மழை அதிகம். நெல், தேயிலை முதலியன பயிராகின்றன. பெட் ரோலியமும், நவமணிகளுள் மரகதமும் மாணிக்கமும் இங்கு கிடைக்கின்றன. இங்குக் கைத்தறித் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. இங்கு மணிப்புரியர், மெய்தியர் என்ற இனத்தவர் வாழ்கின்றனர். மலைகளில் நாகர்களும்,கூக்கியரும் வாழ்கின்றனர். இங்கு ஆடப்பெறும் மணிப்புரி நடனம் (த.சு.) புகழ்பெற்றது. இம் மாநிலத்தில் பெரும்பாலும் மணிப் புரி மொழி வழங்குகிறது. ஆதிக்குடி களான மெய்தியர் 'மெய்தை' என்னும் மொழியைப் பேசுகின்றனர். பல கல்லூரி களும், கல்வி நிலையங்களும் இம் மாநிலத் தில் உள்ளன. 1971ஆம் ஆண்டு இறுதிவரை மணிப் புரி மத்திய அரசாங்கத்தின் நேரடி ஆட்சி யில் இருந்துவந்தது. இப்பொழுது இது தனி மாநிலமாக விளங்குகிறது. இந்தியா வின் பாதுகாப்புக்கு எல்லையிலுன்ன ஒரு முக்கிய மாநிலம் மணிப்புரி. மணிப்புரி நடனம் : இந்தியாவின் ஒரு மாநிலமாகிய மணிப்புரியில் (த.க.)