பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதுரை - மயக்க மருந்துகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரங்களில் ஒன்று பெரிய அரண்மனை (மகால்) மதுரையில் உள்ளது. இதைக் கட்டுவதற்கு மண் தோண்டிய பள்ளத்தை ஒரு ஒரு தெப்பக் குளமாக மாற்றிவிட்டார் அவர். தென் னிந்தியாவில் இதுவே மிகப் பெரிய தெப் பக்குளம்! இக் குளத்தின் நடுவில் ஒரு மண்டபம் உள்ளது. மதுரை நகரின் நடுவே வையை ஆறு பாய்கிறது. இந் நகரில் பல பஞ்சாலைகளும் தொழிற்சாலைகளும் உள்ளன, கைத்தறி ஆடைகளுக்கும் கைவேலைப்பாடு மிகுந்த தங்கம், வெள்ளி நகைகளுக்கும் மதுரை புகழ் பெற்றது. இந்நகரில் ஒரு பல்கலைக் கழகமும் பல கல்லூரிகளும் உள்ளன. இங்கு விமான நிலையம் ஒன்று உள்ளது. காந்தியடிகள் (த.க.) நினைவாக அனமச் கப்பட்ட பொருட்காட்சி நிலையம் ஒன்று இங்கு உள்ளது. காந்தியடிகள் பயன்படுத் திய பொருள்கள், அவர் எழுதிய கடிதங் கள் முதலியன இங்கு வைத்துப் பாதுகாக் கப்படுகின்றன. இந் நிலையத்தில் ஒரு சிறந்த நூலகமும் உள்ளது. மதுரைக்கு அருகிலிருக்கும் திருப்பரங்குன்றம்,அழகர் கோயில், திருவாதவூர் ஆகியவை புகழ் பெற்ற புண்ணியத் தலங்களாகும். ய 83 மயக்க மருந்துகள் (Anaesthetics ) ; உடலில் எங்காவது கட்டி உண்டானால், அதை மருத்துவர் அனுவை சிகிச்சையினால் குணப்படுத்துகினர். தாம் சுய உணர்வுடன் இருக்கும்பொழுது அறுவை செய்தால், வலியைப் பொறுக்க முடியாது. கைகாலை ஆட்டி அறுவை சிகிச்சையைக் கெடுத்து விடுவோம். மயங்கிய நிலையில் உணர்விழப் பதால் நமக்கு வலி தெரியாது. நாம் ஆடாமல் அசையாமல் படுத்திருப்பதால், மருத்துவரால் எளிதில் அறுவை சிகிச்சை யைச் செய்ய முடிகிறது. எனவே, அறுவை சிகிச்சையின்போது, மயக்கம் உண்டாகும் படி செய்வதற்காக மருத்துவர் மயக்க மருந்து கொடுக்கிறார். இந்த மருந்து வாயுவாக அல்லது ஊசி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. பலவிதங்களில் மயக்க மருந்தைக் கையாளலாம். நீண்டநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் உடல் முழுவதும் உணர்ச்சி இழக்கச் செய்து மயக்கம் உண்டாகும்படி மருந்து கொடுக்க வேண்டும். இடுப்பில் தண்டுவடத்தில் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தினால், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி உணர்ச்சி யற்றுப்போகும். இது தவிரப் பல், விரல், கால் விரல் போன்ற உறுப்புகளில் மட்டும் அறுவை சிகிச்சை செய்வதானால் அப்பகுதிகளில் மட்டும் உணர்ச்சி நீக்கும் மயக்க மருந்தைச் செலுத்தலாம். கை சிரிப்பூட்டும் வாயு (Laughing gas) எனப்படும் நைட்ரச ஆக்சைடு, ஈதர், குளோரோபாரம்(Chloroform), கொக்கயின் (Cocaine) முதலியன முக்கியமான மயக்க மருந்துகளாகும். க சர் 19ஆம் நூற்றாண்டுக்கு முன் அறுவை சிகிச்சை மிகுந்த வேதனை தருவதாக இருந்தது. இந்த சிகிச்சைக்கு உட்படுகிற வர் வலியைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே அவசியம் ஏற்பட்டா ஸொழிய அறுவை சிகிச்சைக்கு எவரும் இசையவில்லை நைட்ரச ஆக்சைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று 1842-ல் சர் ஹம்ப்ரி டேவிதெரிவித் தார், முதன்முதலாக அமெரிக்க நாட் டினர் இதைப் பயன்படுத்தினர். ஜேம்ஸ் சிம்ப்சன் என்ற ஆங்கிலேயர் குளோரோபாரத்தை 1847ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். ஆனால் அதைப் பயன் படுத்த பணத்த எதிர்ப்பு ஏற்பட்டது. 1853-ல் விக்டோரியா ராணிக்கு இம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதன் பிறகே பலரும் பயன் பலரும் இம்மருந்தைப் படுத்த இசைந்தவர், மயக்க மருந்து கண்டுபிடிப்பு மருத்துவத்துறை வரலாத் றில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.