பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரப்பட்டை - மரம் அரியணைகள், பல்லக்கு, கோயில்களுக்குத் தேர் முதலியன மரத்தால் செய்யப் பட்டன. பண்டைய எகிப்தியர்களின் கல்லறை களில் பலவகையான மரச் சாமான்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை யாவும் இன்று பொருட்காட்சிராலைகளில் வைக்கப்பட் டுள்ளன. அவர்கள் வேலைப்பாடுமிக்க சாய்வு நாற்காலி, மேசை, அலமாரி, நாற் காலி, முக்காலி போன்ற பொருள்களைச் செய்தார்கள். இவை காலத்திற்கு ஏற்ற வாறும், நாட்டிற்கு ஏற்றவாறும் மாறு பட்டு வந்தன. கடைசல் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எந்திரமும், வட்டமான ரம்பமும் கண்டுபிடிக்கப்பட்டபின் மரச் சாமான்களைக் குறைந்த விலையில் செய்ய முடிந்தது. சாதாரண மக்களும் மேசை. நாற்காலி முதலிய மரச்சாமான்களைப் பயன்படுத்தலாயினர். இந்தியாவில் தேக்கு, நூக்கு முதலிய மரங்களால் இவற்றைச் செய்கிறார்கள். சந்தனமரத்தால் மரப்பெட்டிகள், நகைப் பெட்டிகள், விசிறிகள் முதலிய அழகிய பொருள்களைத் தயாரிக்கின்றனர். இன்று தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவை மரத்தால் செய்யப் படுகின்றன. செம்மரம், களா, சந்தனம், நூக்கு ஆகிய மரங்களால் பொம்மைகள், விளையாட்டுக் கருவிகள். கலைத்திறன் மிக்க பொருள்கள் செய்யப்படுகின்றன. மரப்பட்டை: நம்முடைய சதை யைப் பாதுகாப்பதற்குத் தோல் இருப் பதுபோன்று மரத்திற்கு மரப்பட்டை உதவுகிறது. அடிமரத்திலும், கிளைகளி லும், வேரிலும் மரப்பட்டையைப் பார்க்க லாம். மரத்திலுள்ள நீர் வெப்பத்தால் வெளியேறி உலர்ந்துவிடாமல் மரப் பட்டை பாதுகாக்கிறது. மரம் சுவாசிப்ப தற்கும் இது உதவுகிறது. மரப்பட்டை யில் நுண்ணிய துளைகள் (Lenticels) உண்டு. இத்துளைகள் மூலம் காற்று உள்ளே செல்கிறது. இலைகள் மூலமும் மரம் சுவாசிக்கிறது. இலைகள் உதிரும் மரங்களில் பெரும்பாலும் சுவாசிப்பதற்கு மரப்பட்டைத் துளைகல் பயன்படுகின்றன. மரம் வளரும்பொழுது, அடிமரத்தின் மேற்பகுதியில் மரப்பட்டை தோன்று கிறது. அடிமரம் பருத்து வளரும்பொழுது மரப்பட்டை அதற்கு ஏற்றவாறு வளராததால் பலவகையான மரங்களின் வெளிப்புறத்திலுள்ள பட்டை வெடித்துக் கீறஸ்கள் காணப்படுகின்றன. ஆகவே அவற்றின் அடிமரம் சொரசொரப்பாக 87 இருக்கிறது. சிலவகை மரங்களில் மரப் பட்டை உரிவதும் உண்டு, முருங்சை மரம், புங்கமரம் போன்றவற்றின் அடி மரமும் கிளைகளும் சொரசொரப்பாக இல்லாமல் வழவழப்பாக இருக்கும். சிலவற்றின் அடிமரம் செதிள்கனாவ் (Scales) மூடப்பட்டிருக்கும் மரப்பட்டை முழுவதையும் உரித்துவிட்டால், மரம் பாதுகாப்பின்றிப் பட்டுப் போய்விடும். மரப்பட்டை பலவிதங்களில் பயன் படுகிறது. பண்டைக்கால மக்கள் மரப் பட்டைகளிலிருந்து உடை தயாரித்து அணிந்தார்கள். இன்று மரப்பட்டையால் உயிர்காக்கும் படகுகளைச் செய்கிறார்கள். சிலவகை மரங்களின் பட்டையிலிருந்து நார் உரித்துக் கயிறு திரிக்கிறார்கள். இமய மலைச் சாரலில் வளரும் ஒருவகை மரத்தின் பட்டை காகிதம் செய்ய உதவுகிறது. ஓக் மரம், பச்சை வாட்டில் ஆகிய மரங் களின் பட்டைகளிலிருந்து தோல் பதனிடு வதற்கான டானின் என்ற பொருள் கிடைக்கிறது. ஒருவகை ஓக் மரத்தின் பட்டையிலிருந்து புட்டிகளுக்கு அடைப் பான் தயாரிக்கிறர்கள். இலவங்கப் பட்டை உணவுப் பொருள்களுக்குச் சுவை, நறுமணம் ஊட்டுகிறது. கொயினா மரத்தின் பட்டையிலிருந்து மலேரியாக் காய்ச்சலைக் குணமாக்கும் கொவினா மருந்து தயாரிக்கிறார்கள். மரம் (Wood): மரங்களைத் (த.க.) துண்டு துண்டாக வெட்டுவதால் வெட்டு மரம் அல்லது மரக்கட்டை கிடைக்கிறது. வெட்டப்பட்ட மரத்தில் ஈரம் மிகுந்திருக் கும். ஆகவே அதை உலர்த்திப் பக்குவப் படுத்துவார்கள். இவ்வாறு பக்குவப்படுத் திய மரம் மேசை, நாற்காலி செய்யவும் வேறு பல விதங்களிலும் பயன்படுகிறது. வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே மனிதன் வில், அம்பு போன்ற ஆயுதங்களை யும் மற்ற கருவிகளையும் செய்ய மரத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறான். இன்று தீக் குச்சி செய்வது முதல் கப்பல் கட்டுவது வரை எத்தனையோ வேலைகளுக்கு மரம் பயன்படுகிறது. தேவதாரு (GOLIGOT), செம்மரம் போன்றவை மரவேலைக்குப் பயன்படா. சில மரங்கள் இளமஞ்சள், இளம்பழுப்பு, இளஞ்சிவப்பு முதலிய நிறங்களுடையவை. சில செங்கற்சிவப்பு, கறுப்பு நிறங்களிலும் காணப்படும். தேக்கு, நூக்கு போன்ற மரங்களை இழைத்து மெருகூட்டினால் அவை மிக அழகாக இருக்கும். எல்லா மரங்களையும் இவ்வாறு இழைக்க முடியாது. சந்தன மரம் போன்ற சில மரங்களை வெட்டினால் நறுமணம் கமழும்.