பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 மரியம்மை - மருத்துவம் சில வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருள் களில் மரமும் ஒன்று. வீடு கட்டவும். கதவு நிலை. மேசை நாற்காலி முதலியன செய்யவும். ரெயில் பெட்டி செய்யவும். கப்பல் கட்டவும் தேக்கு பயன்படுகிறது. தேக்கு. தூக்கு போன்ற மரங்கள் உளுத் துப் போவதில்லை; கறையானும் அவற்றை அளிப்பதில்லை. ஆகவே பல மரவேலை களுக்கு இவை பயன்படுகின்றன. வகை மரங்கள் தந்தி, தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் அமைக்கப் பயன் படுகின்றன. மரக்கூழிலிருந்து காகிதம் (த.க.) தயாரிக்கிறார்கள். பிளாஸ்ட்டிக், ரயான் சூற்பத்திக்கும் மரம் உதவுகிறது. முக்கியமாகப் பல மரங்கள் எரிபொரு ளாகப் பயன்படுகின்றன. சந்தன மரம், ஈட்டி போன்ற மரங்களில் அழகிய சிற் பங்களைச் செதுக்கலாம். பலா மரத்தைக் கொண்டு அழகான வீணைகள் செய் கிறார்கள். மரியம்மை: கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து (த.க.). அவருடைய அன்னை மரியம்மை. மரியம்மை பாலஸ்தீனத்தில் நாசரேத் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை யோவாக்கிம் (Joachim); தாய் ஆன் (Anne). இவர்களுக்குப் பல ஆண்டு களாகக் குழந்தை பிறக்கவில்லை என்றும், பிறகு ஆண்டவனை வேண்டி, அவன் அருளால் மரியம்மை பிறந்தார் என்றும், இளமையில் மரியம்மை தேவாலயத்தில் ஆண்டவனுக்குத் தொண்டு செய்து வந்தார் என்றும் பரம்பரைச் செய்தி கூறுகிறது. மரியம்மையின் 15ஆம் வயதில் தேவ தூதன் அவர்முன் தோன்றி, "நீ இறை வனிடத்தில் அருள் பெற்றாய். நீ ஒரு மகனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” என்று அறிவித் தான். மரியம்மையின் துணைவரான யோசேப்பு (Joseph) தாம் கண்ட கனவிலும் இதையறிந்தார். அதன்படியே நிகழ்ந்தது என்று பைபிள் (த.க.) கூறுகிறது. பெத் லகேம் என்னும் ஊரில் இயேசுவை மரியம்மை பெற்றெடுத்தார். ஏரோது (Herod) என்ற கொடிய மன்னன் குழந் தையைக் கொன்றுவிடுவான் என அஞ்சி மரியம்மையும் யோசேப்பும் இயேசுவுடன் எகிப்துக்குச் சென்றனர். மூன்றாண்டுகளுக் குப் பின் ஏரோது இறந்துவிடவே மீண்டும் அவர்கள் பாலஸ்தீனம் திரும்பினர். இயேசுவின் அறிவுரைகள் மக்களி டையே பெருங்கிளர்ச்சியை உண்டாக் கின. இதனால் யூத மதத் தலைவர்கள் கலக்கமடைந்து இயேசுமீது விண்பழி சுமத் தினர். அவருக்கு மரண தண்டனை விதித்து ரோமானியர்களிடம் ஒப்படைத்தனர். இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது. அச்சிலுவையின் அடியில் மரியம்மை நின்று அக்கொடுமையைப் பொறுத்துக்கொண் டிருந்தார். இயேசு மறைவுக்குப் மரியம்மை சிறிது காலமே வாழ்ந்தா ரென்றும், 22 முதல் 24 ஆண்டுகள் வரை பின் உயிர் வாழ்ந்தார். என்றும் பலவாறு கூறுவர். கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் மரியம்மையைப் 'புனித மேரி' என்றும், 'கன்னி அன்னை' என்றும் சுத்தோலிக்கர் வணங்கும் முறை ஏற்பட்டது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மரியம்மையைப் போற்றும் வகையில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டில் மரியம்மை வணக்கத் திற்குப் பெயர்பெற்ற இடம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள யாகும். வேளாங்கன்னி மருத்துவம்: நோயால் துன்பப்படும் போது நாம் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் உடலைச் சோதனை செய்து, என்ன நோய் என்பதைக் கண்டு, அதற்குரிய வழி முறைகளைக் கையாண்டு நோயைக் குணப் படுத்துகிறார். ஒவ்வொரு நோயையும் குணமாக்க ஒவ்வொரு வழி முறை உண்டு. இவ்வாறு நோய்களைக் குணப்படுத்துவதற் கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உரிய வழிமுறைகளே மருத்துவம் எனப்படும். பண்டைக்காலத்தில் மாந்திரீகம், சமயம் இவற்றோடு மருத்துவம் தொடர் புடையதாக இருந்து வந்தது. மத குருக் களும் பூசாரிகளும் மருத்துவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சில வினோதமான மருத்துவ முறைகளைக் கையாண்டனர். அக்காலத்தில், மருத்துவத்தில் முன்னேறி யவர்கள் எனக் கருதப்பட்ட எகிப்தியர் கள்கூட, சில சமயம் சமயம் மாந்திரீகத்தைக் கையாண்டனர். மரகதக் கல் சிலவகை நோய்களைக் குணமாக்கும் அவர்கள் நம்பினார்கள், நோயாளியின் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுவதற்கு நீர் அட்டை களை (Leeches) அவர்கள் பயன்படுத்தினார் கள். ஒரு மருந்து எவ்வளவு கசப்பானதோ அவ்வளவுக்கு அது சிறந்ததென அவர்கள் கருதினார்கள். சீனர், பாபிலோனியர், சுமேரியர் ஆகியோரும் மருத்துவ முறை களை அறிந்திருந்தனர். இந்தியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே ரண சிகிச்சை (Surgery, த.க.) மிகத் திறமையுடன் நடத்தப்பட்டது. கத்தரி, ஊசி, குறடு போன்ற இக்காலக் கருவிகளை இந்திய மருத்துவர்கள் அன்றே