பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிதவைத் தாவரங்கள் மிதவைப் பிராணிகள் HE WASHIS 42 NUM

  • RAA

SEEFACT தி 90 16 மிதவை உயிர்கள் இறால் கடல் சாமந்தி C GAUTAN நட்சத்திர மீன் மிதவைப் பிராணிகள் தம் வாழ்நாள் முழுதும் மிதவைப் பிராணி களாகவே வாழும். குழியுடலி, புழு, ஓட்டுமீன், மெல்லுடலி, முள்தோலி, மீன் முதலியவற்றின் லார்வாக்கள் சிறிது காலம் மட்டும் மிதவைப் பிராணிகளாக வாழும்; முழு வளர்ச்சியடைந்ததும் நீருக்கடியில் சென்று தனி உயிர்களாக வாழத் தொடங்குகின்றன. நிலத்தில் கால் நடை முதலிய தாவரந் தின்னிகளுக்கு (த.க.) ஆதார உணவாகப் புல் இருப்பதுபோல், கடலில் மிதவைத் தாவரங்களும், மிதவைப் பிராணிகளும் அங்கு வாழும் ஏனைய உயிர்களுக்கு ஆதார உணவாக இருக்கின்றன. நீர், உப்பு, கார் பன் டையாக்சைடு ஆகியவற்றிலிருந்து உணவு தயாரித்து மிதவைத் தாவரங்கள் உயிர்வாழ்கின்றன. இத் தாவரங்களை உண்டு மிதவைப் பிராணிகள் உயிர்வாழ் கின்றன. மிதவைப் பிராணிகளைத் தின்று மீன் முதலியவை வாழ்கின்றன. மீன்கள் மனிதனுக்கு உணவாகின்றன. இவ்வாறு கடலிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருள் ள் - மிருதங்கம் களின் உற்பத்திக்கு அடிப்படையாக மிதவை உயிர்கள் இருக்கின்றன. மிருதங்கம் : இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் வாசிக்கிறார்கள் அல்லவா? இது தாளத்திற்கான மிகச் சிறந்த ஓர் இசைக் கருவி. இசைக் கருவிகளில் (த.க.) நான்கு வகையுண்டு. அவற்றுள் தோல் கருவிகள் வகையைச் சேர்ந்தது மிருதங்கம். முற்காலத்தில் மிருதங்கம் மண்ணினால் செய்யப்பட்டு வந்தது. பிற்காலத்தில் பலா மரம், வேப்பமரம், செம்மரம் முதலிய வற்றால் மிருதங்கம் செய்யத் தொடங்கினார் கள். மரத்தை இதன் வடிவில் செதுக்கி உட்புறம் குடைவார்கள். ஓரங்களில் சுமார் ஒரு சென்டிமீட்டர் கனம் இருக்கும். வலப் பக்கத் தலைப்பில் மூன்று வட்டத் தோல்கள் ஒட்டப்பட்டிருக்கும். ஆட்டுத் தோல், கன்றின் தோல், எருமைத் தோல் ஆகியவற்றால் ஆனவை இவை. வலப் பக்கத்தின் நடுவில் கறுப்பாக ஒரு வட்டம் இருக்கும். அவ் வட்டத்தில், தட்டினால் மிருதங்கத்தில் ஓர் இனிய ஓசை உண்டாகும். மிருதங்கத்தின் இரு பக்கங் களிலும் வாரினால் பின்னப்பட்ட வளையங் கள் இருக்கும். இவற்றிலுள்ள 16 கண்கள் (துளைகள்) மூலமாக ஒரு நீண்ட வாரை இடது பக்கமும் வலது பக்கமுமாக மாற்றி மாற்றிச் செலுத்தி இறுக்கிக் கட்டியிருப் பார்கள். பாடுகின்ற இசைக் கலைஞருக்கு ஏற்றவாறு இதன் சுருதியை அமைத்துக் கொள்ள முடியும். மிருதங்கத்தைக் கைகளினாலும், மணிக்கட்டுகளாலும், கை விரல்களாலும் தட்டி வாசிப்பார்கள். இசைக் கச்சேரிகளில் மட்டுமின்றி பரத நாட்டியம், கதா காலட்சேபம், பஜனை ஆகியவற்றிலும் மிருதங்கம் தாளக் கருவி யாக விளங்குகிறது. மிருதங்கம்