பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 ரவீந்திரகாத டாகுர் ரவீந்திரநாத டாகுர் (1861-1941): ஜன கண மன' என்று தொடங்கும் இந்தியாவின் தேசீய கீதம் (த.சு.) நம் எல்லோருக்கும் தெரியும். இதை இயற் றியவர் ரவீந்திரதாத டாகுர். இவர் உலகப் புகழ்பெற்ற மகா கவி; தத்துவ ஞானி: நாடகாசிரியர்: நாவலாசிரியர்: இசை வல்லுநர்; திறமையான ஓவியர்; சிறந்த தேச பக்தர். நோபெல் பரிசு (த.க.) பெற்ற முதல் இந்தியர். ரவீந்திரர் வங்காளத்தில் கல்கத்தா நகரில் ஒரு பெருஞ்செல்வக் குடும்பத்தில் பதினான்காம் குழந்தையாகப் பிறந்தார். இவருடைய குடும்பமே ஒரு சுலைக் குடும் பம். இவருடைய தந்தை தேவேந்திரநாத டாகுர் மிகச் சிறந்த அறிஞர்; 'மகரிஷி' (முனிவர்) எனப் பாராட்டப் பெற்றவர். ரவீந்திரரின் உடன்பிறந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வல்லவர்கள். கலையில் ரவீந்திரர் தம் தந்தைவிடம் ஆங்கில மும் சமஸ்கிருதமும் கற்றார். ஏழாம் வயதிலிருந்தே கவிதைகள் இயற்றலானார். 1878-ல் இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஆனால் படிப்பு முடியும் முன்னரே. 1880-ல் இந்தியா திரும்பினார். மீண்டும் 1881-ல் இங்கிலாந்து சென்றார். அப் பொழுதும் பட்டம் பெறாமலே தாயகம் திரும்பினார். அதன்பின் எழுதுவதிலேயே முழுவதும் ஈடுபட்டார். தம் 22ஆம் வயதில் மிருணானினி தேவியை மணந்தார். ரவீந்திரா ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களிலும், கிழக்கு நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்துவதும், இந்தியா திரும்பி எழுத் தில் ஈடுபடுவதுமாக வாழ்ந்தார்.1901-ல் கல்சுத்தா அருகில் இயற்கை எழில் சூழ்ந்த போல்பூர் என்ற இடத்தில் 'சாந்தி நிகேதனம்' என்ற ஆசிரமத்தை இவர் தந்தையார் கட்டினார். அங்கு இவர் ஓர் ஆசிரமம் நிறுவி, புதிய முறையில் கல்வி பயிற்றுவித்தார். இப் பள்ளியை வளர்ப் பதிலேயே தம் பெரும்பகுதி நேரத்தையும் பொருளையும் செலவிட்டார். பள்ளி விரிவடைந்து, 'விசுவ பாரதி' என்னும் பெரிய பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. ரவீந்திரரின் முதல் கவிதைத் தொகுதி 1878-ல் வெளியாகியது. பின்னர் இவர் வங்காளியிலும், ஆங்கிலத்திலும் பல அரசியல், தத்துவ நூல்களை இயற்றினார். ஏராளமான கவிதைகளையும் எழுதினார். நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலியவற்றையும் எழுதி வெளியிட்டார். கருத்துகளும், இலக்கிய நயமும் செறிந்த 'கீதாஞ்சலி' என்னும் ரவீந்திரநாத டாகுர் கவிதைத் தொகுதிக்காக ரவீந்திரருக்கு 1913-ல் இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இப் பரிசுத்தொகை முழுவதையும் இவர் சாந்தி நிகேதனத்தின் வளர்ச்சிக்காக வழங்கினார். • இந்தியாவில் நாடக மறுமலர்ச்சிக்கு ரவீந்திரர் ஆற்றிய தொண்டு மிகப் பெரியது. இவருடைய நாடகங்கள் யாவும் ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்கள் நிரம் பியவை. இவர் தமது நாவல்களின் மூலம் வங்கச் சமுதாயத்தில் காணும் பல குறை களைப் போக்க முயன்றார். இவர் சுமார் 3,000 இசைப் பாடல்களையும் இயற்றி யுள்ளார். இவ்விசைப் பாடல்களைத் தாமே இனிய குரலில் பாடுவார். இவரது கட்டு ரைத் தொகுதிகளும் குறிப்பிடத் தகுந்தவை. குழந்தைகளைப் பற்றியும் குழந் தைகளுக்காகவும் இவர் எழுதிய பாடல் கள் சிறப்புவாய்ந்தவை. இந்தியாவின் பண்பாடு, சமய மரபுகள் குறித்து இவர் பெருமதிப்புக் கொண் டிருந்தார். அவற்றைத் தம் எழுத்துகளில் போற்றியுள்ளார். வெளிநாடு சென்ற போதெல்லாம் இந்தியாவின் பெருமைகளை யும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்தார். ரவீந்திரர் தமது முதுமைக் காலத்தில் பல அரிய ஓவியங்களை வரைந் தார். இவருடைய ஓலியங்களின் கண் காட்சி 1932-ல் உலகில் பல இடங்களில் நடைபெற்றது. இந்தியாவின் சுதந்தரப் போராட்டத் திலும் ரவீந்திரர் பங்கு கொண்டார். காந்தியடிகள் தொடங்கிய பல இயக்கங் களுக்கு இவர் ஆதரவு தேடினார். சுதேசி இயக்கத்திலும், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்திலும் தீவிரப் பங்கு பெற்றார். தமது பேச்சினாலும் எழுத்தினா