பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விஷ்ணு

கான படங்கள் வரை தல், சொற்றொ டர்கள் எழுதுதல், போட்டோ எடுத்தல், இவை எல்லாவற்றையும் விளம்பர நிறுவனங்களே செய்கின்றன.

விளம்பரம் செய்வது இன்று ஒரு தனிக் கலையாக வளர்ந்துள்ளது.

விஷ்ணு : இந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர் விஷ்ணு. படைத்தல் தொழில் புரியும் பிரமனும், அழித்தல் தொழில் புரியும் சிவனும் (த.க.) மற்ற இரு மூர்த்திகளாவர். காக்கும் தொழிலைப் புரிபவர் விஷ்ணு.

எல்லாவற்றிற்கும் மேலான பரம் பொருளே பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளாக இருப்பதாகவும் எல்லோரும் ஒன்றுதான் என்றும் இந்து மத நூல்கள் கூறுகின்றன. வைணவ சமயத்தினர் விஷ்ணுவைத் தமது முழு முதற்கடவுளாக வழிபடுகின்றனர்.

விஷ்ணுவைத் திருமால் என்னும் பெயரில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. பெருமாள், நாராயணன் என்னும் பெயர்களும் விஷ்ணுவுக்கு உண்டு. விஷ்ணுவுடன் இணைபிரியாது இருப்பவள் திருமகளாவாள். விஷ்ணுவின் வாகனம் கருடன்; கொடி கருடன். சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில் ஆகிய ஐந்தும் இவருடைய ஆயுதங்கள். இவற்றை 'ஐம்படை' என்பர்.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் நாட்டில் திருமால் வழிபாடு இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் திருமாலைப் பற்றிய செய்திகள் மிகுதி யாக உள்ளன. தமிழர் நிலங்களைப் பகுத்து, அவற்றுக்குரிய கடவுள்களைக் கூறும்பொழுது, திருமாலை முல்லை நிலக் கடவுளாகக் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியம், திருமாலை 'மாயோன்' என்னும் சொல்லால் குறிக்கிறது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலிய தொகை நூல்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்பு கள் காணப்படுகின்றன.

'உலகில் எவ்வெப்பொழுது அறம் தேய்ந்து அல்லவை பெருகுகின்றனவோ அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் (விஷ்ணு) தாமே உலகில் அவதாரம் செய்து தீமையை அழிப்பார்; உயிர்கள் உய்வதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறியில் நடந்து வழிகாட்டுவார்' என பகவத் கீதை கூறுகின்றது. அவர் பத்து அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும், ஒவ்வோர் அவதாரமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துவதாகவும் கூறுவர்.