பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/88

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெள்ளி 83

திட்டமும் முக்கியமாக வெள்ளத் தடுப்புக் காகவே செயலாக்கப்பட்டுள்ளன. கரைகளில் கான்கிரீட்,கருங்கற்கள் இவற்றால் வெள்ளத்தடுப்பு மதில்கள் (Flood walls) அமைத்தும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளிலிருந்து வெளியேறிவிடுவது சில சமயங்களில் எளிதாக இருக்கலாம். ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்வதைக் கண்டு வெள்ளம் வரவிருப்பதை அறிந்து, மக்கள் வெளியேறிவிடவேண்டும். ஆனால் இதில் சிறிது கவனக்குறைவாக இருந்தால் பெருஞ் சேதம் ஏற்படக்கூடும். இந்தியாவில் ஓடும் பெரிய ஆறுகளான பிரமபுத்திரா, கங்கை , யமுனை , நருமதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகளில் வெள்ள அபாயம் எப்போதும் உண்டு. இந்தியாவில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களை வகுக்கவும், அவற்றைச் செயல்படுத்தவும் பல மாநிலங் களில் வெள்ளக் கட்டுப்பாட்டு வாரியங் கள் (Flood Control Boards) செயல்பட்டு வரு கின்றன. இந்த வாரியங்களின் நட வடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கென தேசீய அளவில் மத்திய வெள்ளக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Flood Control Board) ஒன்றும் இயங்கி வருகிறது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வெள்ளம் வருவதை முன் கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கென சில நிலையங்கள் உள்ளன.

வெள்ளி : மக்களுக்கு மிகவும் பயன் படும் உலோகங்களுள் வெள்ளியும் ஒன்று. தங்கத்திற்கு அடுத்து வெள்ளியும் மதிப்பு மிகுந்த ஓர் உலோகமாகும். வெள்ளி யாலும் நகை செய்து அணிந்துகொள் கின்றனர். தட்டு, குவளை, கரண்டி முதலியன தயாரிப்பதற்கும் வெள்ளி பயன்படுகிறது. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குத் தங்கப்பதக்கம் போல் வெள்ளிப்பதக்கம், வெள்ளிக் கோப்பை முதலியன வழங்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாணயங்கள் செய்வதற்குப் பல நாடுகளில் வெள்ளியைப் பயன் படுத்துகின்றனர்.

வெள்ளி சில இடங்களில் தனியாகவே பூமியிலிருந்து கிடைக்கிறது. எனவே தான் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வெள்ளியைப் பயன் படுத்தியிருக்கின்றனர். செம்பு, காரீயம் போன்ற பிற உலோகங்களுடன் சேர்ந்தும் வெள்ளி காணப்படுகிறது. இத்தகைய தாதுக்களை உருக்கிப் புடமிட்டு வெள்ளி யைத் தனியாகப் பிரித்து எடுப்பார்கள்.


மெக்சிக்கோ, அமெரிக்கா, கானடா, பெரு, ரஷ்யா ஆகிய நாடுகளில் வெள்ளி மிகுதியாகக் கிடைக்கிறது. தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி கடினமானது. எனினும் வெள்ளியை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம். நுண்ணிய கம்பியாக நீட்டலாம். ஒரு கிராம் எடையுள்ள வெள்ளியை ஒன்றரைக் கிலோமீட்டர் நீளமுள்ள மிக மெல்லிய கம்பியாக இழுக்கலாம்! எனவே தான் கைவேலைத் திறனுள்ள பலவித மான பொருள்களைச் செய்ய வெள்ளி உதவுகிறது. வெள்ளியுடன் செம்பையும் சேர்ப்பது உண்டு. இக்கலவை உறுதி யாக இருக்கும். பிற உலோகங்களைக் காட்டிலும் வெள்ளியே வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது.

எல்லா உலோகங்களிலும் வெள்ளியே மிக வெண்மையானது; மிகப் பளபளப் பானது; இதில் துருப் பிடிக்காது. காற்றுப் படும்படி வைத்திருந்தாலும் ஒளி மங்காது. ஆனால் காற்றில் கந்தகம் கலந்திருக்குமானால் வெள்ளி கறுத்து விடும். கந்தகம் கலந்துள்ள முட்டை போன்ற உணவுப்பொருள்களை வெள்ளித் தட்டில் வைத்தால், அந்த இடம் கறுத்துப் போகும். வெள்ளி குளோரைடு, வெள்ளி புரோமைடு, வெள்ளி அயோடைடு முதலிய கூட்டுப்பொருள்களில் ஒளி படுமானால் அவை கறுத்து மாறுதலடைகின்றன. எனவே இப்பொருள்கள் போட்டோ பிலிம் தயாரிப்பதில் பெரிதும் பயனாகின்றன.


வெள்ளியாலான பொருள்கள் சில