பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/89

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெள்ளீயம் - வெற்றிடக் குப்பி


வெப்பமானிகள், தொலைபேசிக் கருவிகள், மின்கலங்கள், விமான எந்திரங்கள் முதலியவற்றில் சில உறுப்புகளைச் செய்ய வெள்ளி உதவுகிறது. மருத்துவர்கள் முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு வெள்ளிப் பட்டைகளையும் இழைகளையும் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளீ யம் (Tin) : சமையல் வேலைக்குப் பயன்படும் பித்தளைப் பாத் திரங்களுக்கு அவ்வப்போது ஈயம் பூசு கிறார்கள். இது ஏன் தெரியுமா? ஈயம் பூசப்படாத பித்தளைப் பாத்திரங்களில் உணவுப்பொருள்களை வைத்திருந்தால் பசுமை நிறக் களிம்பு உண்டாகும். செம்பும் துத்தநாகமும் சேர்ந்ததே பித்தளை. பித்தளையிலுள்ள செம்பும், உணவுப் பொருள்களிலுள்ள அமிலச் சத்தும் வினைப்படுவதால் இந்தக் களிம்பு உண்டாகிறது. இது நஞ்சு மிகுந்தது. ஈயம் பூசிவிட்டால் களிம்பு உண்டா காது. ஏனெனில் ஈயத்தை உணவி லுள்ள அமிலம் பாதிப்பதில்லை. காரீயம் (த.க.) என்னும் உலோகத்தையும் இவ்வாறு பாத்திரங்களுக்குப் பூச இயலும். ஆனால் காரீயம் நச்சுத்தன்மை உள்ளது. எனவே அதைப் பூசக்கூடாது.

ஈயம் வெண்மையாகவும் வெள்ளியைப் போலப் பளபளப்பாகவும் இருப்பதால் வெள்ளீயம் என்கிறோம். வெள்ளீயம் கனமாக இருந்தாலும் பிற உலோகங் களைவிட மிருதுவானது. இதனை எளிதில் வளைக்கலாம். தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம். வெள்ளீயத்தில் துருப்பிடிப்பதில்லை.

வெள்ளீயம் பூமியில் தனியாகக் கிடைப்ப தில்லை. ஆக்சிஜனுடன் கலந்த தாதுப் பொருளாகவே கிடைக்கிறது. தாதுப் பொருளை வெட்டியெடுத்து உருக்கி வெள்ளீயத்தைப் பிரிக்கிறார்கள். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தான் வெள்ளீ யம் மிகுதியாகக் கிடைக்கிறது. மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, சீனா முத லியன இவற்றுள் முக்கியமான நாடுகள்.

வெள்ளீயத்தின் மிக முக்கியமான பயன், முலாம் பூசப் பயன்படுவதாகும். பிஸ்கோத்து, சாக்கலேட், பழச்சாறு, பால் தூள், போன்ற உணவுப்பொருள்கள் அடைக்கப்படும் தகர டப்பிகளின் உட் புறம் பளபளவென்று வெண்மையாக இருப்பதற்குக் காரணம் வெள்ளீயப் பூச்சுதான். இத்தகைய தகர டப்பிகள் யாவும் மெல்லிய இரும்புத் தகடுகளால் தயாரிக்கப்படுபவை. இவற்றில் வெள் ளீயம் பூசப்படாவிட்டால் ஈரம்பட்டு இரும்புத் தகடுகளில் துருப்பிடித்துவிடும்.

உணவுப் பொருள்களும் கெட்டுப்போகும். வெள்ளீயத்தின் மற்றொரு பயன், இது வெண்கலம் போன்ற பயன்மிகுந்த பல உலோகக் கலவைகளைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். உலோகங்களை இணைத்துப் பற்றவைப்பதற்கும் வெள் ளீயம் உதவுகிறது. அச்சு எழுத்துகள், எந்திர உறுப்புகள், குழாய்கள் முதலியன செய்வதற்கும் வெள்ளீயம் பயன்படு கிறது. சொத்தை ஏற்பட்டுக் குழி விழுந்த பற்களை ஈயமும் பாதரசமும் கலந்த பசையினால் தான் பல் மருத்துவர் அடைக்கிறார்.

வெற்றிடக்குப்பி (Vacuum Flask) : சூடான அல்லது குளிர்ச்சியான பொருள் களை அதே நிலையில் பல மணிநேரம் வைத் திருக்கப் பயன்படுவது வெற்றிடக்குப்பி. இதற்குத் தெர்மாஸ் குப்பி (Thermos flask) என்றும் பெயர்.

ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றினால், சிறிது நேரத்தில் அது வெப்பத்தை இழந்து ஆறிப்போய்விடு கிறது. இது ஏன் தெரியுமா? பாத்தி ரத்தில் ஊற்றிய சூடான நீரின் வெப்பத்தை, பாத்திரத்தின் பக்கங்கள் அவற்றை அடுத்துள்ள காற்றுக்குக் கடத்துகின்றன. நீரின் மேற்பரப்பை அடுத்துள்ள காற்றும் வெப்பத்தைப் பரவச் செய்கிறது. இதனால், பாத்தி ரத்திலுள்ள சூடான நீர் வெப்பத்தை இழந்துவிடுகின்றது. ஆனால் வெற்றிடக் குப்பியிலுள்ள ஒரு பொருள், தன் வெப்பத்தை இழக்காமல் இருக்கும்.

வெற்றிடக்குப்பியின் அமைப்பைப் படத்தில் காணலாம். இதன் முக்கியப் பகுதி இரண்டு மெல்லிய கண்ணாடிச் சுவர் களைக்கொண்ட ஒரு குப்பியாகும். இச் சுவர்களுக்கிடையிலுள்ள காற்று முழுவதுமாக அகற்றப்பட்டு வெற்றிடமாக (த.க.) இருக்கும். குப்பியின் அடிப் பகுதியில் ஒரு குறுகிய முளை இருக்கும். இது, காற்று வெளியேற்றப்பட்டபின் அடைக்கப்பட்ட இடமாகும். இப்பகுதியும், கண்ணாடிச் சுவர்களும் சேதமடையாதவாறு, இக்குப்பியை உலோகம் அல்லது பிளாஸ்ட்டிக்கினா லான உறையினுள் வைத்திருப்பார்கள். உறையின் அடியிலுள்ள தக்கை , கண்ணாடிக் குப்பியைத் தாங்கிக்கொண்டி ருக்கும். மேலும், உறையின் அடிப் புறத்தில் சுருள் ஒன்றும் இருக்கும். இது கண்ணாடிக் குப்பிக்கு அதிர்ச்சி உண்டாகா மல் காக்கிறது. கண்ணாடிக் குப்பியின் வாய், தக்கை அடைப்பானால் மூடப் பட்டிருக்கும்.