பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேகம்‌--வேகமானி ்‌ 87

யேறி அண்டுவந்தனர்‌. தென்‌ அமெரிக்க நாடுகள்‌ பலவற்றுக்குச்‌ சுதந்தரம்‌ தேடிக்‌ கொடுத்த பொலீவார்‌ (த. ௧.) 1821-ல்‌ இந்தாட்டையும்‌ ஸ்பானியர்களிடமிருந்து மீட்டார்‌. பின்னர்‌ இது ஒரு குடியரசு நாடாகியது. இந்நாட்டு நாணயத்தின்‌ பெயர்‌ பொலீவார்‌.

வேகம்‌: ஓட்டப்‌ பந்தயங்களில்‌ பரிச வாங்கியிருக்கிறீர்களா? அப்படியெனில்‌ நீங்கள்‌ வேகமாக ஓடுகிறீர்கள்‌ என்று தெரிகிறது. ஓடும்‌ நேரத்தைத்‌ துல்லிய மாகக்‌ கணக்கிடக்‌ கனிக்‌ கழகாறம்‌ (8 ஈர) உள்ளது. இதன்‌ உதவி யால்‌, ஓவ்வொருவரின்‌ ஓடும்‌ வேகத்தை யும்‌ கணக்கை. முடியும்‌. ஒரு மணிக்கு இத்தனை இலோமீட்டர்‌ தூரம்‌ என்று வேகம்‌ கணக்கிடப்படுவது வழக்கம்‌. மிக வேகமாக ஓடும்‌ ஒரு மனிதன்‌ ஒரு இலோமீட்டர்‌ தூரத்தை சுமார்‌ மூன்று நிமிடத்தில்‌ கடந்துவிடுவான்‌. மனிதனைக்‌ காட்டிலும்‌ குதிரை வேகமாக ஓடும்‌. குதிரையினும்‌ வேகமாக ஓடக்கூடியது சிறுத்தை. நிலத்தில்‌ வாழும்‌ பிராணி களிலெல்லாம்‌. சறுத்தைதான்‌ மிக வேக மாக ஓடவல்லது. ஆனால்‌ விலங்குகளைக்‌

காட்டிலும்‌ பறவைகள்‌ வேகமாகப்‌ பறக்கக்‌ கூ.யவை. சிறுத்தையைக்‌ காட்டிலும்‌ இரு மடங்கு வேகமுடையது பருந்து!

நடந்து செல்வதைக்‌ காட்டிலும்‌ சைக்கிளில்‌ சென்றால்‌ வேகமாகச்‌ செல்ல முடியும்‌. வேகமாகச்‌ செல்வதற்கென மனிதன்‌ உருவாக்கிய வாகனங்களே சைக்கிள்‌, கார்‌, ரெயில்‌, விமானம்‌ முத லியன. ஓலியைக்‌ காட்டிலும்‌ வேக

மாகச்‌ செல்லும்‌ விமானங்கள்‌ இன்று உள்ளீன. ஜெட்‌ விமானம்‌ மணிக்கு 2,500 கிலோமீட்டர்‌ செல்லக்கூடியது. மனிதனால்‌ இதுவறை உருவாக்கப்‌ பட்டுள்ளவற்றுள்‌ மிக வேகமானது ராக்கெட்‌ (த.க.). இன்று சந்திரனுக்கும்‌ மற்ற இரகங்களுக்கும்‌ செல்வதற்கு ராக்‌ கெட்டுகளைத்தான்‌ பயன்படுத்துகின்றனர்‌. இவை ஒரு மணிக்கு 40,000 கிலோ மீட்டர்‌ செல்லக்கூடியவை.

சூரியனைப்‌ பூமி சுற்றிவருகிறது என்‌ பது உங்களுக்குத்‌ தெரியும்‌. சுற்றிவரும்‌ பாதையில்‌ பூமியின்‌ வேகம்‌ ஒரு நிமிடத்திற்கு 7,760 கிலோமீட்டர்‌. ஆனால்‌ ஓளி செல்லும்‌ வேகந்தான்‌ மிக அஇகமானது. ஒளியின்‌ வேகம்‌ ஒரு வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்‌.

கார்‌, ரெயில்‌, விமானம்‌ முதலியன செல்லும்‌ வேகத்தைக்‌ காட்ட அவற்றில்‌ வேகமானி (த.௧க.) என்னும்‌: சாதனம்‌

உள்ளது. பூமி சுற்றும்‌ வேகம்‌, ஒளிபாயும்‌ வேகம்‌ ஆகியவற்றைப்‌ பல பரிசோ தனைகள்‌ மூலம்‌ கண்டுபிடித்திருக்கின்றனர்‌.

பொதுவாக, மனிதனைக்‌ காட்டிலும்‌ மனிதன்‌ படைத்த எந்திரங்களின்‌ வேகம்‌ அதிகம்‌. தான்‌ செய்ய விரும்பியவற்றை வேகமாகச்‌ செய்து முடிப்பதற்காகவே மனிதன்‌ எந்திரங்களை உருவாக்குகஇன்றான்‌. நம்‌ முன்னோர்களைக்‌ காட்டிலும்‌ இன்று நாம்‌ பல புதிய எந்திரங்களையும்‌ வாகனங்‌ களையும்‌ பார்க்கிறோம்‌. இன்‌ றைய மனிதனின்‌ சாதனைகளைப்‌ பார்க்கும்போது எதிர்கால உலக வாழ்க்கை இன்னும்‌ வேகமுடையதாக இருக்கக்கூடும்‌.

வேகமானி (8266400160): மோட்‌

டார்‌. வண்டி செல்லும்‌ வேகத்தை அளப்பதற்குப்‌ பயன்படும்‌ சாதனம்‌ வேகமானி. ஒரு கார்‌ ஒரு மணிக்கு எவ்‌ வளவு தஇிலோமீட்டர்‌ வேகத்தில்‌ செல்‌ கிறது என்பதை இதன்‌ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

கார்‌, பஸ்‌, லாரி மற்றும்‌ மோட்டார்‌ சைக்கிள்‌, ஸ்கூட்டர்‌ முதலியவற்றில்‌ அவற்றை ஓட்டுபவர்‌ எளிதில்‌ பார்க்கும்‌ வகையில்‌ வேகமானி பொருத்தப்பட்‌ டிருக்கும்‌. இக்கருவியின்‌ வட்டமான முகப்பில்‌ 0 முதல்‌ 700 அல்லது 740 வரை எண்கள்‌ உள்ளன. மோட்டார்‌ வண்டியின்‌ சக்கரத்துடன்‌ சுற்றும்‌ ஒரு சுழலும்‌ காந்தமும்‌, சக்கரத்தின்‌ சுழற்‌ சியைச்‌ சக்கரத்திலிருந்து காந்தத்துக்குக்‌ கடத்தும்‌ ஓர்‌ எந்திரத்‌ தண்டும்‌ உள்ளன. எந்திரத்‌ தண்டு நாலாபக்கங்களிலும்‌ வளையக்கூடியது. அதனால்‌ சுழற்சி பாதிக்‌ கப்படுவதில்லை. வண்டி செல்லும்போது சக்கரங்கள்‌ சுழலும்‌; அதனால்‌ காந்தமும்‌ சற்றும்‌. அப்போது வட்ட முகப்பில்‌ பொருத்தப்பட்டிருக்கும்‌ முள்‌ நகர்ந்து, மோட்டார்‌. வண்டி சென்றுகொண்டி ருக்கும்‌ வேகத்தைக்‌ காட்டும்‌.

வட்ட முதப்பின்‌ நடுவில்‌ குறுக்காக இரண்டு எண்கள்‌ தெரியும்‌. மேலே உள்ள ஐந்து அல்லது ஆறு ஸ்தான எண்‌, கார்‌. இயங்கத்‌ தொடங்கியதிலிருந்து சென்ற மொத்தத்‌ தூரத்தைக்‌ காட்டும்‌. கீழே உள்ள எண்‌, மூன்று அல்லது நான்கு ஸ்தானத்தைக்‌ கொண்டிருக்கும்‌. தேவைப்‌ படும்போது இந்த எண்ணை க்குத்‌ இருப்பி வைத்துக்கொண்டு ஒரு குறிப்‌ பிட்ட பயணத்திற்கான தொல்வினை அறியலாம்‌. மேலும்‌, அதைக்கொண்டு ஒரு மோட்டார்‌. வண்டி குறிப்பிட்ட ஓர்‌ அளவு எரிபொருளில்‌ எவ்வளவு தொலைவு செல்கிறது என்பதையும்‌ தெரிந்துகொள்ளலாம்‌.