பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

91

காலங்களில் வெளியே உஷ்ணம் அதிகமாக இருப்பதால், நாம் மூச்சுவிடும் நீராவி நீராவியாகவே இருந்துவிடுகிறது. அதனால் அது நம்முடைய கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் மழை காலத்தில் அந்த நீராவி வெளியே வந்ததும் குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறிவிடுகிறது. அப்பொழுது அது நம்முடைய கண்களுக்கு மேகம் போல் காணட்படுகிறது. சாதாரண காலங்களில்கூட ஏதேனும் ஒரு குளிர்ந்த வஸ்துவின் மீது, உன்னுடைய ஸ்லேட்டின் மீது மூச்சு விட் டால், அதன்மீது நீர்த்துளிகள் உண்டாய் விடுவதைக் காணலாம்.

137 அப்பா! கண்ணாடிப் பாத்திரத்தில் சூடான ஜலம் ஊற்றினால் உடைந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கிளாஸ் டம்ளரில் சூடான காப்பியை ஊற்றினால், டம்ளரைத் தொட முடிகிறது. வேறு டம்ளரில் ஊற்றினால் அப்படித் தொடமுடியவில்லை, சூடாய் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? உஷ்ணத்தை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு எளிதில் கொண்டு போகும் குணம் வெண்கலம் போன்ற உலோகங்களுக்கு உண்டு.கிளாசுக்குக் கிடையாது. அதனால் வெண்கல டம்ளரில் ஜலம் ஊற்றினால், உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் சூடாய் விடுகிறது. கிளாஸ் டம்ளரில் உள்ளே சூடாகும், விரியும்; வெளியே சூடாகாது, விரியாது. அதனால்தான் கிளாஸ் கீறி விடுகிறது.

138 அப்பா! ஐஸ் கட்டிபை மரத்தூளில் பொதிந்து வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி ! ஒரு வஸ்து சூடாயிருக்கிறது. அதன் மீது இன்னொரு வஸ்துவை வைத்தால் அதுவும் சூடாய் விடுகிறது. காரணம் என்ன? இரண்டாவது வஸ்து முதல் வஸ்துவின் உஷ்ணத்தில் ஒரு பாகத்தை கிரகித்துக்கொள்கிறது.