பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கேள்வியும்

ஆதலால் இப்பொழுது டங்ஸ்டன் நூல் செய்து பல்புக்குள் வைத்து, அதிலுள்ள பிராணவாயுவை வெளியாகி விட்டு, நைட்ரோஜன், ஆர்கன் என்னும் வாயுக்களை அடைத்து வைக்கிறார்கள். அந்தக் கமபி மூலம் மின்சார சக்தி ஓடுவதால்தான் நம் வீடுகளில் எலக்டிரிக் பல்புகள் எண்ணெய்யும் திரியுமில்லாமல் அவ்வளவு பிரகாசமாக எரிகின்றன.

200 அப்பா! மின்சாரக் கம்பியைத் தொட்டால் இறந்து விடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அந்தக் கம்பியில் மின்சார சக்தி செல்லும் பொழுது தொட்டால்தான் இறந்து போவோம். அப்பொழுது அந்தக் கம்பியில் செல்லும் சக்தி நம்முடைய உடம்புக்குள் புகுந்துவிடுகிறது. நம்முடைய உடம்பில் மூளையையும் இருதயத்தையும் பிணைத்து நிற்கும் முக்கியமான இரண்டு நரம்புகள் வலது பக்கம் ஒன்றும், இடது பக்கம் ஒன்றுமாக அமைந்திருக்கின்றன. அந்த நரம்புகள் அளவு கடந்து வேலை செய்தால் இருதயம் நின்றுபோகும். மின்சார சக்தியானது உடம்புக்குள் நுழைந்ததும் அந்த நரம்புகளை அதிகமாக முறுக்கிவிடுகிறது. அதனால் இருதயம் நின்று போகிறது.மரணம் ஏற்படுகிறது.

201 அப்பா! தந்தித் தூண்களில் பீங்கான் கப்புகள் வைத்திருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! தந்தித் தூண்களில் கம்பி கட்டியிருக்கிறார்கள். அந்தக் கம்பி வழியாக மின்சார சக்தி ஓடுகிறது. மின்சார சக்தி உலோகங்கள், மரங்கள் முதலிய சில வஸ்துக்கள் மூலம் செல்லும். கண்ணாடி பீங்கான் முதலிய சில வஸ்துக்கள் மூலம் செல்லாது. தந்தித் தூண் மரத்தாலாவது இரும்பாலாவது செய்திருக்கும். அதனால் மின்சார சக்தி கம்பியில் செல்லாமல் தூண்களில் இறங்கிவிடும். அதனால்தான் தூண்களின் மீது பீங்கான் கப்புகள் வைத்து, கம்பியை அவற்றில்